Wednesday, May 9, 2012

அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே



மனைவி : என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்

கணவன் : அடி கள்ளிஎங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”

மனைவி : அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க

#############################

மகேஷ் : பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?”

தினேஷ் : பின்னேநாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்

#######################

ராமு: என்னப்பா இது…. உங்க தலைவரை, சட்ட சபைக்குள்ள டோலியில தூக்கிட்டுப் போறாங்க?”

மாமு: எம் மேல இருக்கிற ஊழல் குற்றச்சாட்டு விலகும் வரை, நான் சட்டசபைக்குள்ள காலடி எடுத்து வைக்க மாட்டேன்று எங்க தலைவர் அறிக்கை விட்டது உனக்கு ஞாபகம் இல்லையா?”

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

நிருபர்: உங்க படத்துக்கு தேசிய விருதுகிடைக்கும்னு நீங்க முன் கூட்டியே எதிர்பார்த்தீங்களா சார்?”

இயக்குநர் : இல்லையே…. படம் இப்படி ஃப்ளாப் ஆகும்னு யாராவது முன் கூட்டியே எதிர்பார்ப்பாங்களா என்ன?”

&&&&&&&&&&&&&&&&&&&&&&

மாவட்ட செயலாளர்: எங்க தலைவருக்கு சமயோசித புத்தி ஜாஸ்தின்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்களே….?

எதிர்க் கட்சிக்காரர்: எப்படி சொல்றீங்க?”

மாவட்ட செயலாளர்: எங்க போனாலும், மத்த கட்சிக்காரங்க, அவருக்கு கருப்பு கொடி காட்டிக்கிட்டேயிருக்காங்கன்னு, தன்னோட கட்சி கொடியையே கறுப்பு கலர்ல மாத்த முடிவு பண்ணிட்டாருய்யா



ஒருவர் : “ டிக்கெட் வாங்காம வர்றதில்லைன்னு, வீராப்புடன் டெல்லி போனாரே …. உங்க தலைவர்…. வாங்கிட்டு வந்துட்டாரா?”

மற்றவர் : “ வாங்கிட்டு வந்துட்டாரே. வர்ற மூணாந்தேதி குலுக்கலாம். முதல் பரிசு ஒரு கோடியம் அந்த டிக்கெட்டுக்கு!





Thanks to One India Tamil

Tuesday, May 8, 2012

குப்பு சாமின்னு


                             
டா‌க்ட‌ர் : ங்களுக்கு இருக்கிறவியாதி குணமாகணும்னாமீன், கோழி சாப்பிடறதைநிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : ப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான்நிறுத்த முடியும்?

   
ள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!

அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு"

                                       
ரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!


ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த கியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..


அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு


மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!


நேயர் விருப்பம்




வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"
ஹலோ வணக்கம்!"
"
வணக்கம்! சொல்லுங்க..."
"
வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"
அதில்லைங்க"
"
எது இல்லை?"
"
சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"
போன்ல இருந்துதான் பேசறேன்"
"
சரி என்ன பாட்டு வேணும்?"
"
சினிமா பாட்டுதான்"
"
சரி எந்த படத்துல இருந்து?"
"
சினிமா படத்துல இருந்துதான்"
"
அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

விழுந்தது பலாப்பழம் ஆச்சே


ப்பா : டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?
கன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா?
ப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம்.
கன் :அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா...

வ‌ர் ப‌ல் டா‌க்ட‌‌ர் இ‌ல்ல போ‌லி டா‌க்ட‌ர்னு எ‌ப்படி சொ‌ல்ற?
ல் ஆடுதுன்னு ந்த டாக்டர்கிட்ட சொன்னதுக்கு, பரதநாட்டியமா? குச்சுப்புடியான்னு கேக்கிறாரு.
ர் ணினி தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்குறவரு போல?
இதயத் துடிப்ப ச்சே ப்படி சொல்‌‌றீங்க டாக்டர்.
இதயம் ப் ப்புன்னு துடிக்காம லேப் டாப் லேப் டாப்புன்னு துடிக்குதே... அத ச்‌‌சித்தான்.
 
ழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?
விழுந்தது பலாப்பழம் ஆச்சே

பேசாம தூங்கு, காலையில அவன்



மனைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து
வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ
புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."


மனைவி:- "ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று
ஒரு பகுதி கூட கிடையாதா?" 
கணவன் :-"ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு
ஒரு பகுதி இருக்கே!"


ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்.
மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் குழும்பு ஊத்தும்.!!?????????
ஆசிரியர் - !!??????????????

டாக்டர் இந்த நர்ஸை மாத்திடுங்க ஏங்க அப்படி சொல்றீங்க?
ஆபத்தான பேஷண்ட், இவரை நல்லா கவனின்னு சொல்லிட்டு போனீங்க.
இந்தம்மா விடிய விடிய என் பக்கத்துல உட்கார்ந்து உத்துப் பார்த்துட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு.

ன்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...!?
அது பிள்ளையார் சுழியாம்....

ன் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை
என்ன பண்றா?
என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.

மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலை.

சாப்பிடும் போது கூட உன் கணவருக்கு ஆபஸ் ஞாபகமா?"
"
எப்படிச் சொல்றே?"
"
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டறார்!"

Wednesday, April 25, 2012

கார் ஓட்டி பாரேன்.



எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க
?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.


கோபு: நான் ஆபீசில் நல்ல பெயர் எடுத்திருப்பதற்கு என் மனைவிதான் காரணம்.
பாபு: எப்படி
?
கோபு: ‌வீ‌ட்டு‌க்கு போற டை‌ம் வ‌ந்தது‌ம் எ‌ன் மேஜை ‌மீ‌திரு‌க்கு‌ம் அவளது போ‌ட்டோவை பா‌ர்‌ப்பே‌ன்.. அ‌வ்வளவுதா‌ன் அ‌ப்படியே ‌நிறைய வேலை
 ெச‌ய்து முடி‌த்து ‌விடுவே‌ன்


மனைவி: நம் பைய‌ன் போ‌ன் ப‌ண்‌ணி ரொ‌ம்ப நாளாகு‌‌தி‌ல்ல..
கணவ‌ன் : ‌ம்‌ம்‌ம்..
மனை‌வி : கடைசியா எப்போ போ‌ன் ப‌ண்‌ணினா‌ன்
?
கணவன்: ஒரு ‌நி‌மிஷ‌ம் இரு. செக் பு‌க்கை‌ப் பார்த்து சொல்றேன்


கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டு வறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா சொ‌ல்ற..?

அ‌வ்ளோ தூரத்துல வரும் போதே ரொம்ப மோசமான ஒரு நாத்தம் அடி‌க்‌கிதே அத வ‌ச்‌சி‌த்தா‌ன்.

Sunday, April 15, 2012

திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு.. .




ஒரு காட்டில் நாலுபேர் போறhங்க. .. திடீர்னு ஒரு சிங்கம் வந்து மூணு பேரை அடிச்சிடுச்சு..ஒருத்தரை மட்டும் அடிக்கலை ஏன் ?
ஏன்?
அவர் லயன்ஸ் கிளப் மெம்பர் *
------------------------------
அந்த கல்யாண மண்டப வாசல்ல, விரல்ல எதுக்கு மை வைக்கிறhங்க ?
செருப்புப் போடாம வர்றவங்களுக்கு மட்டுமாம் *

கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே.. ஜ டிப் பொருத்தம் எப்படி?
ஒரு செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை *

-----------------------
என்னங்க.. . எதிர்ல போற உங்க அம்மா. .. அப்பாவைத் திரும்பிப் பார்த்துகிட்டே வர்றீங்க ?
போய் பேச வேண்டியதுதானே *
நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு.. . எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்
-------------------------------
ஏங்க.. .. நம்ப பொண்ணுக்குத் தூக்கத்துல நடக்கிற வியாதிங்க *
கவலைப்படாதே. .. சரி பண்ணிடலாம் *
அதுக்கில்லைங்க.. . பக்கத்து வீட்டுப் பையனுக்கு தூக்கத்துல ஓடற வியாதியாம் *

கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறhங்களா.. .?
டைட்டில் என்ன ?
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை *
வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறங்க?
இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம் *

உங்களுக்கு ரோடு ரோலர் மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளே ? எங்க ஆளையே காணும்
பக்கத்து வீட்டுப் பையன் தள்ளிக்கிட்டுப் போயிட்டான்

அந்த எறும்பு மட்டும் ஏன் உப்பைச் சாப்பிடுது.. .?

அதுக்குச் சர்க்கரை வியாதியாம் *

ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?



100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை உன் தாத்தா திட்ட‌றாரே ஏன்?

அவருக்கு வயது 102.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?

இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?

அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில்
நடக்கும் வியாதியாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக
ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!

அப்படித்தான் மெக்கானிக்கும் சொன்னான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

ooooooooooooooooooo

'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''

''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''

ooooooooooooooooooo

நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?

மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு!

oooooooooooooooooooo

ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?

பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''

ooooooooooooooooooo

இது ஏழைப் பேயாம்!"



"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"

------------------------------------------------

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

---------------------------------------------

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? 


இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"

"இது ஏழைப் பேயாம்!"


---------------------------------------------

எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

xxxxxxxxxxxxxxxx

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

xxxxxxxxxxxxxxxxx

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..! 

xxxxxxxxxxxxxxxxx

''நாட்டில் இருக்குற விலைவாசி உயர்வு தலைவரை ரொம்பப் பாதிச்சுடுச்சாம்...''

''அவருக்கு அவ்ளோ இரக்க குணமா?''

''ஒரு வோட்டுக்கு ஐந்து, பத்து கொடுத்த காலம் போய்... இப்ப நூறு ஐந்நூறு கொடுக்க வேண்டியதா இருக்கேன்னு வருத்தப்படுறார்

xxxxxxxxxxxxxxxxx
 
''தலைவரே... செல்போன்ல ஏன் வைப்ரேஷன் வெச்சுத் தொலைச்சீங்க... பாருங்க. நீங்க உதர்றதைப் பார்த்து தோல்வி பயத்துல உதர்றதா எதிர்க்கட்சிகள் சொல்றாங்க!''
 xxxxxxxxxxxxxxxxx

ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்



நண்பனுக்கும், , நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ்
ஆவு..!
 -----------------------

"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"

"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"
 --------------------------------------


 முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
 
----------------------------------------------

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

-----------------------------------------------