Total Pageviews

Saturday, February 18, 2012

ஆம்புலன்ஸ் வரும் சார்.


1.ஏம்மா அஞ்சு! பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வர்றது?

நீங்கதான டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டேயிருந்தீங்க...


2.ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?
மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!


3.ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?

மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்.


4.ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்


5.பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

6. சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்

அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?

10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்

¿ýÈ¢ : Á¸¢

கந்தையானாலும் கசக்கிக் கட்டு



1.எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்


2. ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய கிழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க?

எங்க சார்  தாம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.


3. ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.


4.பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.


5.ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?

மாணவன் : தெரியாது சார்!

ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!

மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?

Friday, February 17, 2012

ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது!!!




கணவன்: (மனைவியிடம்) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா?

மனைவி: ஆமாங்க. ஏன் கேட்கிறீங்க? கணவன்: அதுவா.. தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துப்போய் கிடந்தது. அதனான் கேட்டேன். மனைவி: ???


"என்ன நம்ம தலைவரைக் கைது செய்ய வேற்று கிரகத்துலேர்ந்து பறக்கும் தட்டுல இங்க வந்திருக்காங்களா?"

 "பின்ன என்ன? செவ்வாய் கிரகத்துல போய் நில அபகரிப்பு செஞ்சா சும்மா விடுவாங்களா?"


நடிகர்: நான் நடித்த படம் நூறு நாள் ஓடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு. 

ரசிகன்: நூறு நாள் என்ன சார் நூறு நாள், ஐநூறு நாளே ஓடும்.

நடிகர்: என்னங்க காமெடி பண்றீங்க.... ரசிகன்: ங்கொய்யால.... முதல்ல யாரு காமெடி பண்ணினது...?


ஒருவன்: அந்த ரவுடிய இந்த ஏரியா விட்டு தொரத்தரதுக்கு ஒரு ஐடியா இருந்தா சொல்லுங்களேன்

அண்ணாச்சி... அண்ணாச்சி: அவன எம்எல்ஏவிற்கு நிற்க வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிடுங்க..

 ஒருவன்: அப்பிடி செஞ்சா... அண்ணாச்சி: அஞ்சு வருசத்துக்கு இந்த ஏரியா பக்கமே வரமாட்டான்...

டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கினால் போதும்.

மாணவன்: அது எப்பிடி டீச்சர் முடியும். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது!!!

என் தலைல எதுவுமே ஏறாதுன்னு சொன்னிங்க





'சார் என் தலையில எறும்பு ஏறுது பாருங்க''

''அத ஏண்டா என்கிட்டே சொல்ற?''

''நீங்க தான சார் என் தலைல எதுவுமே ஏறாதுன்னு சொன்னிங்க

---------------------------

அறிஞர் அண்ணா தெரு விளக்கு வெளிச்சத்தில தான் படிச்சாராம்.

கொடுத்து வெச்சவரு.

 நம்ம புள்ளங்களுக்கு இப்ப அதுக்கு கூட வழியில்லையே..!

---------------------------

வாயைத் தொறந்தா பொய்யா பேசுறிங்களே !

உங்க பெயரென்ன?

ஹரிச்சந்திரன்!

--------------------------

சாஃப்ட்வேர் கம்பெனி நேர்முகத் தேர்வில
 
மேனேஜர்: உனக்கு எம்.எஸ். ஆஃபீஸ் [M.S.Office] தெரியுமா?

வந்தவர்: நீங்க அட்ரஸ் குடுத்தா போயிட்டு வர்ரேன் சார்.
 
மேனேஜர்: அப்படியே போயிரு… வராத…
 ------------------------

Thursday, February 9, 2012

மந்திரி: செல்பேசியில்



நிருபர்: சட்டமாமன்றத்திக்கு  4வது முறை  மந்தியாய்   தேர்ந்துதெடுக்கப்படடு உள்ளீர்கள்  தொகுதி மக்களுக்கு  என்ன செய்தீர்கள்?

ந்திரி:  1. எனது தொகுதியில் புறம்  போக்கு  நிலமே  இல்லாமல் தொகுதி மக்களுக்கு இலவசமாக் கொடுத்து விட்டோமே!

நிருபர்:(மனதிற்க்குள்) ஆமாம்,உங்களலுக்காக உங்கள  பினாமிகளுக்கு புறம் போக்கு நிலங்களை இலவசமாக் கொடுத்துதானே!



மந்திரி:  2. எனது  தொகுதியில்  தண்ணீர் பஞ்சம்  இல்லாமல் செய்து விட்டோமே!
நிருபர்:(மனதிற்க்குள்) ஆமாம், வீதிக்கு வீதி உங்கள் எடு பிடிகளுக்கு   பார்வசதி  உடன்  "சால்னா" கடைகளை வசதிகளை  செய்து கொடுத்துதானே!


மந்திரி:  3. எனது  தொகுதி மக்களுக்கு   5000 இலவச  வீடுகள் கட்டி  கொடுத்து ஏழைகளே இல்லாமல் செய்து விட்டோமே!
 நிருபர்:(மனதிற்க்குள்) ஆமாம்,  அதில்  பாதி உங்களுக்கு சொந்த்மானதுதானே!


நிருபர்: கூட்ட தொடர் முழுவதும் கலந்து  கொள்வதன் காரணம் என்ன ?

மந்திரி:   எனது  தொகுதி மக்களுக்கு  ஏதாவது நன்மைகள் செய்ய  வேண்டுமே!

மந்திரி:(மனதிற்க்குள்)

1) மண்ணங்கட்டி, சட்டசபையில் ஓய்வு  எடுக்கவும், துங்கவும், செல் பேசியில்  படம்  பார்க்க்வும்,   தொண்டர்கள், பொண்டாடிகள், பொது மக்கள் தொல்லை இல்லாமல்  இருக்கத்தான்.!


Monday, February 6, 2012

இன்னொரு கல்யாணம்



மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.


வேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க....

 முதலாளி : கவலைப்படாதே.... சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.


"மாப்பிள்ளைப் பையன் வானிலை அறிவிப்பாளரா இருப்பான்னு சொல்றீயே! எப்புடி?" "பொண்ணு பிடிச்சும் இருக்கு. பிடியாமலும் இருக்கு, பிடிச்சும் பிடியாமலும் இருக்குன்னு குழப்புறாரே!"

ஒருவன் கடவுளிடம் : கடவுளே என்னோட பெண்டாட்டியை ஏன் ரொம்ப அழகா படைச்சிருக்கே?

 கடவுள் : அப்போ தான் நீ அவமேலே அன்பா சந்தோஷமா இருப்பே. அவன் : அதுசரி தான், அதே சமயம் அவளை ஏன் வடிகட்டின முட்டாளா படைச்சிருக்கே?

 கடவுள் : அப்பதானே அவ உன் மேலே அன்பா இருப்பா.


முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!



போலீஸ்: எப்படி விபத்து நடந்தது?

டிரைவர்: அதுதான் எனக்கும் புரியல.. நான் தூங்கிட்டுல இருந்தேன் அப்புறம் எப்படி எனக்குத் தெரியும்?"
__________________________________

மகன்: (தந்தையிடம்) நீ காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிண்டே...
என் காதலை மட்டும் எதிர்க்கிறியே ஏன்?


தந்தை: அதனால் தாண்டா எதிர்க்கிறேன்..

____________________________________

"அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?" "ஏன்


ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?" "அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே."

______________________________________

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது..

கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!

___________________________________________

அவன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?

மற்றவன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க.

______________________________________________

"அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?" "

நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"
________________________________

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

"எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"

____________________________________

கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?

மனைவி: ஏன், என்னாச்சு?

கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.


செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்!


நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?


நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.


வேலு: உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?

 ஓட்டல் ஓனர்: நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.


பெண்: வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க....

பையன்: நிச்சயம் பண்ணவா...?

பெண்: என் பின்னாடியே வர்றீங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்!

"ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு." "ஏன்?"

"பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."


மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு....

இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே



ராணி :  ஏண்டி சோகமா இருக்க?

கமலா :   அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்  அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி

ராணி அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற கண்டிப்பா, இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற

கமலா :  ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்

********************************************
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக் குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்..

மாணவன்: டேய் மச்சான், 'figure' டா!
********************************************

அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"


அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"


மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"

********************************************


மனைவி "டாக்டர் வீட்டுக்குப்போனா அங்க வந்திருக்கற பொம்பளங்கக்கிட்ட வீணா என்ன பேச்சு?"

கணவன்"நலம் விசாரிக்கறதுல தப்பு இல்லையேடி....." "என்கிட்ட என்னிக்கு விசாரிச்சிருக்கீங்க?"


மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?

மனைவி: : நீங்க அவரு பிரண்டுதானே..

கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?

********************************************
ஒருவர்: சாமி... உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க...?

 சாமியார்: பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்.

Thursday, February 2, 2012

பேய் வீட்டில் - இருபது வருஷமா



தலைவரை இரவில் கைது பண்ணி பகலில் விட்டுவிட்டார்களே
நம்ம தொடர்    போராட்டங்களை பார்த்து பயந்து தானே....

அட நீ ஒன்னு தலைவர் நேற்று ராத்திரி விட்ட குறட்டை கேட்டு சிறையிலுள்ளவர்கள் பயந்து போனதால் தான் உடனே விடுதலை...



நோயாளி : டாகடர் எனக்கு  அடிக்கு அடி நெஞ்சு வலிக்குது ?

டாகடர்:  மனைவிகிட்ட அடி வாங்கும்போது புற முதுகை காட்டாமல்
நெஞ்சு காட்டி நின்றால் இப்படித்தான் வலிக்கும்...



நோயாளி: டாக்டர் மருந்து சீட்டு கொடுக்காமல் உங்கள்
வீட்டு மளிகை சீட்டு கொடுத்துவிட்டீர்கள்....

டாக்டர்:இது நீங்கள் வந்ததுக்கு கன்சல்ட்டிங் பீஸ்...



திருடன்:  காலம் ரொம்ப கெட்டுபோச்சு

ஐயா திருடிட்டு போகும் போது பயமா இருக்கு  பாதுகாப்பு வேண்டும்...

போலீஸ்: இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியவில்லை...



கபாலி வரவர வழிப்பறி  அதிகமா இருக்கு இரவில் கொள்ளையடித்துவிட்டு போகும் போது பயமா இருக்கு....

போலீஸ்சங்கிலி ஒழுங்க கொள்ளை அடித்த பொருளை எங்கே வைத்து இருக்க என்பதை சொல்லிவிடு...

சங்கிலி: அதை நீங்கள் தான் கண்டுபுடிக்கணும் என்கிட்ட விளையாடதே ?

சங்கிலி:   நான் கொள்ளை அடித்து வரும்போது எவனோ வழிப்பறி செய்துவிட்டான் ஐயா...



டாக்டர்: நர்ஸ் நாம ஆப்ரேஷன் பண்ணவேண்டிய நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தாச்சா ?

நர்ஸ்: நீங்க செய்யப்போவது போஸ்ட்மார்ட்டம்...

டாக்டர் அடச்சே கடைசிவரை போராடியும்  நோயாளியை காப்பாத்த முடியாமல் போச்சே ...! 

நர்ஸ்: டாக்டர் நீங்கள் செய்தது போஸ்ட்மார்ட்டம்... ஆப்ரேஷன் அல்ல :


மனைவிஇந்த பேய் வீட்டில் என்னால் இருக்கமுடியாது பயமா இருக்கு ?

கணவன் இருபது வருஷமா உன்னோடு வாழுகிறேன் நான் ஏதாவது
சொல்லிருகிறேனா இல்லை பயந்துபோன்னேனா
 
 

வெற்றி வெற்றி



என்ன தலைவர் செற்குழு
கூட்டம் நடக்கும் போது
கண்டிப்பா செருப்பு போடமா
தான் வரணும் என்று
சொல்லுறாரே...ஏன் ?செருப்படி விலாமல் இருக்க
எல்லாம் செப்டிக்கு தான்

=============================
இன்னும் ஆபரேஷன் நடக்கலே

வெற்றி வெற்றி வெற்றி

என சொல்லுறாரே டாக்டர்...
டாக்டரா வருவதற்கு முன்

இந்த டாக்டர் சினிமா தயாரிப்பாளர்

ஆபரேஷன் செய்வதற்கு

முன் வெற்றி வெற்றி

என்று சொல்லுவது சென்டிமென்ட்க்கு

===================================


டாக்டர் சர்க்கஸ் சர்க்கஸ் என

சொல்லுறாரே எதுக்கு....
சக்சஸ் என்ற வார்த்தை வராது
சக்சஸ் வார்த்தை தானே வராது

ஆபரேஷன் எப்படி...
வரும் ஆனா பொழைக்காது...


என்ன தலைவர் ஆலோசனை கூட்டத்தை சிறையில் வைத்துள்ளார் ?நம்ம கட்சி ஆட்கள் தான் முக்கால்வாசி உள்ளே இருக்கங்களே....

எனது பொதுக் கூட்டத்துக்கு ஆட்கள் வரக்கூடாது என்று ஆளும் கட்சி சதி செய்கிறது என்கிறாரே

எதை வைத்து அப்படி சொல்லுகிறார் ?கூட்டத்துக்கு ஆள் புடிக்கும் கீழ் மட்டத் தலைவர்கள் எல்லாம் மோசடி வழக்கில் உள்ளே இருக்காங்களே

அதை வைத்து தான் ..


மகளிர் அணித்தலைவி எதிர்க்கட்சி தலைவரை பார்த்து இந்த சத்தத்துக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று தைரியமா சொல்லுறாங்க...அவங்க புருஷன் விடும் குறட்டைக்கே கலங்காதவங்க ஆட்சே  இதுக்கு எல்லாம் அஞ்சுவங்களா என்ன...


நம்ம தலைவரோட மனைவி எழுதிய உறங்காத இரவுகள்
கதைக்கு விருது கிடைத்து இருக்காமே...சொந்த கதை சோககதை
தலைவர் விட்ட குறட்டை பத்தி தான் கதையா எழுதியது ...

வெற்றி நமக்கே...



டாக்டர் : உங்களுக்கு பத்து மணிக்கு ஆபரேஷன்...கடைசி
ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்....

நோயாளி: இதுவே உங்களுக்கு கடைசி ஆப்ரேஷனாய் இருக்கட்டும்..  


தலைவருக்கு இருந்தாலும் இந்த நக்கல் கூடாது....
எதுக்கு சொல்லுறே? எதிர் கட்சி தலைவருக்கு
படை,சொறி வந்தததை சுட்டிக்காட்டி இந்த படை
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று சொல்லுகிறார்...



நானும் என் மனைவியும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள்

எனக்கு தெரியும் ? எப்படி... யாரு சொன்னா ? அடிக்கடி உங்கள் மனைவி
காற்றுவாங்க போனேன் வரும் வழியில் ஒரு கழுதையை ழைத்துவந்தேன் என்று பாடுவதை கேட்டது உண்டு....


டாகடர் :

உங்களுக்கு என்ன வியாதி ?
நோயாளி : நான் நோயாளி இல்லே

நன்கொடை வாங்க வந்தவன்...

டாகடர் : அப்படியா அப்ப சின்ன அபரேஷன் பண்ணிவிட்டால்
எல்லாம் சரியாகிவிடும்...  


என்ன அமைச்சர் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது சிரிக்கிறார்...

துன்பம் வரும் வேளையில் சிரிக்கிறார்

அப்படி எனன் துன்பம் அவருக்கு ?

அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட செய்தி வந்துவிட்டது அல்லவா....
என்ன தலைவர் தனியா பேசிக்கொண்டு இருக்கிறார் ?

நாளை சட்டசபை பேச்சுக்கு தனியா பேசி ஒத்திகை பார்கிறார்...

தலைவர் ஜெயிலுக்கு போய் வந்ததை கதையா எழுதுகிறார்...
என்ன தலைப்பு...ஊழல் பெரிச்சாலிகளும் , ஜெயில் பெரிச்சாலிகளும்

======================================
என்ன தலைவர் சுயசரிதம் எழுதுகிறாராமே?

ஆமா "சிறையில் நல்லவனாய் " என்ற தலைப்பில்.


அம்மா திட்டும்போது திரும்பி திட்டாமல் அசடு வழிகிறாரே ஏண்டா ?
 அப்பா அரசியல்வாதியா ஆக பயற்சி எடுக்கிறார்....


எதை வைத்து தலைவர் இந்தாளுக்கு மந்திரி பதவி கொடுத்தார்
தலைவர் திட்டும் போது எல்லாம் கொஞ்சம் கூட கோவம் வரமால்
அசடு வழிகிற நிலைக்கு தான்...


என்னது பட்டது ராணியை பட்டது யானை என்று கிண்டல் செய்கிறானா ?
ஆமா மன்னா.... என்னால் அப்படி கூப்பிட முடியவில்லை

அவனுக்கு பரிசு அனுப்புங்கள்....



அரசே பக்கத்து நாட்டு அரசன் போர் தொடுக்க படைகளுடன் வருகிறான்...

அப்படியா முரசொலி முழங்கட்டும்

தெருவெல்லாம் வெள்ளைக்கொடி  பறக்கட்டும்,உடனே புறப்படுங்கள்

காலில் விழுந்துவிடுவோம்... வெற்றி நமக்கே...



பயகர ஆயுதத்தோடு வந்ததாக அந்த பத்திரிக்கையாளரை கைது

பண்ணிவிட்டார்களே...ஆமாம் கூட்டம் நடந்த ரூமுக்கு ஷூவோடு  வந்துவிட்டாராம்....
 

உண்மை முகம்




நிருபர்

மேடம் உங்களுக்கு ஏன் அடிக்கடி கோபம் வருது ?

தலைவி இந்த மாதிரி முட்டாள் தனமான வேள்விகளை
கேட்டவர்களை என்னால் அடிக்க முடிலே அதனால் தான்
அடிக்கடி கோபம் வருது...  


நம்ம தலைவி அடிக்கடி அமைச்சரவையை ஏன் மாத்துறாங்க தெரியுமா ?
எதுக்கு ? தலைவி ஆட்சிலே எந்த மாற்றமும் இல்லே என்று சொல்லாம இருக்கத்தான்.


அரசியல்வாதியை கட்டிக்கிட்டது தப்பா போச்சு ... ஏண்டி ?
கூட்டத்தில் போட்ட மாலை எல்லாம் கொண்டுவந்து
எனக்கு போடுகிறார்...


என்னங்க நீங்க தந்த நெக்லஸ் மேல MKSயில் திருடியது என போட்டு இருக்கே...
அந்த கடையில் தானே திருடியது வேற எப்படி போடுவான்...


காதலி:

உங்ககிட்ட பேசிக்கொண்டு இருந்தாலே நேரம் போவதே தெரியவில்லை...


காதலன்: ஆமா..ரொம்ப நேரமாச்சு  வீட்டில் எனது மனைவி தேடுவா

காதலி:

எனது புருஷனும் தேடுவார் ... நான் வரேன்...!



காதலன்:

இனிக்கு என்ன ரொம்ப அழகாய் இருகிறாய் புது டிரஸ் சூப்பர்...

காதலி:  நன்றி :எங்கள் கல்யாண நாள்  எனது கணவர் வாங்கி தந்தது...



காதலன்: இருபது வருடம் ஆகியும் இன்னும் நீ மாறவேயில்லை...

காதலி ஆமா அதே வீடு தான்,அவருக்கு சம்பளம் குறைவு...  



நம்ம தலைவர் ஏன் அந்த ஆளுக்கு எப்போதும் பயப்புடுகிறார்

தலைவர் நடிக்கும் போது அவர் தான் மேக்கப் மேன் அப்பா தலைவரோடு உண்மை முகம் தெரிந்தவர் என்று சொல்லு..


நீங்கள் செய்த ஊழல் நிருபிக்கப் பட்டதால் உங்கள் தலைவர் நடித்த படத்தையும் உங்கள் கட்சி தொலைகாட்சி நிகழ்சிகளையும் ஒன்று விடாமல் தினமும் தனியா பார்க்கணும்... ஐயா இந்த தண்டனைக்கு
தூக்கு தண்டனையே கொடுத்திருக்கலாம்...

கிரிகெட் ஜோக்ஸ்

என்ன கொடுமை சார் இது...! - கிரிகெட் ஜோக்ஸ் ?

1) என்னப்பா இந்த சேவாக் டிவி-யை போடறதுக்கு முன்னாலேயே அவுட் ஆயிடறார்

இது பரவாயில்லை போன இன்னிங்ஸ்ல இறங்கறதுக்கு முன்னாலயே அவுட் ஆயிட்டார்னா பாத்துக்கயேன்.


2)  தோனி: பீ கேர் ஃபுல் அடுத்த டெஸ்ட்ல ஜெயிச்சு...

கிளார்க்: என்ன சொன்னீங்க?


தோனி: நான் உங்களச் சொன்னேன்!


3) நிருபர்:உள்நாட்டுல பயங்கரமா ஆடி சூரப்புலி கணக்கா இருக்கீங்க? வெளிநாட்டுலன்னா பதுங்கற பூனையாயிடறீங்களே ஏன்?

தோனி: உள்நாட்டுல ஜெயிக்கறதுனாலதான இப்படி கேக்கறீங்க,

இனிமே உள்நாட்டுலையும் தோத்து நாங்க யார்னு உங்களுக்கு கூடிய விரைவில் நிரூபிக்கிறோம்!



4) தோனி: இங்கிலாந்துல ஒரு 11 பேர் கூட்டிட்டுப் போயி கும்கும்முனு கும்மினாங்க, அடுத்து ஆஸ்ட்ரேலியாகாரன் அவங்க ஊருக்கு கூட்டிட்டு போயி மாறி மாறி டயர்ட் ஆக வரைக்கும் அடிச்சாங்க...இவ்வளவு அடி வாங்கினீங்களே உங்களுக்கு கோபமே வரலியா?

அங்கதான் என்ன "கேப்டன் கூல்"னு சொல்லி அடக்கிட்டாங்களே...



5) சச்சின் டெண்டுல்கர் 100வது செஞ்சுரியை எப்பத்தான் அடிப்பாரு?

100வது வயசுல 100வது சதம் எடுக்கறது ஒரு சாதனைன்னு அவர் கிட்ட யாராவது சொல்லித் தொலைச்சுட்டாங்களோ என்னவோ!



6) நிருபர்:எதிர் அணி பேட்ஸ்மென்களை நீங்க ரொம்ப சுலபமா ரன் எடுக்க அனுமதிக்கிறீங்கன்னு உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கே?

 

தோனி:அவங்க தான் சின்னப்பிள்ளத் தனமா நம்ம பேட்ஸ்மென்களுக்கு ரன் தர பிடிவாதம் பிடிக்கறாங்கன்னா நம்மளும் அப்படியா இருக்கறது,அப்பறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

 

7) தோனியிடம் அணி மேலாளர்: தோனி! சச்சின், லஷ்மண் அவுட் ஆயிட்டாங்க!

தோனி:என்னடா லஞ்ச் முடிஞ்சுடுச்சே இன்னும் எதுவும் நடக்கலையேன்னு பார்த்தேன்!



8) கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: தோனி! நீங்க செய்யறது உங்களுக்கே நியாயமா இருக்கா?


தோனி: நீங்க ஜெயிக்கறா மாதிரிதானே விளையாடறேன்?


9) கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா:பாண்டிங், ஹஸ்ஸியையெல்லாம் நாங்க தூக்கறதா யிருந்தோம் இப்ப நீங்க ரன் எடுக்க விட்டுட்டீங்க!

தோனி: அது உங்களுக்கு நல்லதுதானே!


கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: மண்ணாங்கட்டி! கிரெக் சாப்பல், ரிச்சி பெனோ, ஆலன் பார்டர், கிம் ஹியூஸ் எல்லாரும் நானும் தயாராத்தான் இருக்கேன் எனக்கும் வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டு தொந்தரவு பண்றாங்க அதுக்குக் காரணம் நீங்கதான?

10) தோனி: டாஸ் ஜெயிச்சு பேட்டிங் செஞ்சேன்; 191ரன்னுக்கு ஆல் அவுட் ஆனா நான் என்ன செய்ய முடியும்?

மேலாளர்: அவங்கள முதலில் பேட் செய்யச் சொல்லவேண்டியதான?
தோனி: அவங்க 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தா நாம ஜெயிக்கற மாதிரி வந்துடும்.

 ஜெயிக்கறதுனாலே பசங்க ரொம்ப பயப்படறாங்க!


11) என்ன சார் இது ரோஹித் ஷர்மாவை உக்கார வச்சுட்டு கோலியை விளையாட வைக்கிறீங்க, அவருக்கு பேட்டிங் வரல்லியே சார்!

தோனி: எனக்கு மட்டும் வருதா என்ன? அதையெல்லாம் பார்த்தா முடியுமா பாஸ்!


Thanks to webdunia

Wednesday, February 1, 2012

"பஞ்ச் டயலாக்



21. "இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன்?"  "என்ன சொல்றே?"
"என் மனைவி சமைச்ச சாப்பாட்டை அப்புறம் சாப்பிடலாம்னு எடுத்து வச்சேன். இந்த நாய் சாப்பிட்டுவிட்டு மயக்கமா இருக்கு."


22. "ஹீரோ பேசும்போது ஏன் அப்பப்போ பஞ்சை பறக்க விடுறீங்க?"
"பஞ்ச் டயலாக் என்பதை ஆடியன்ஸ்க்கு காட்டனுமில்ல."

 
23. "ஏண்டா உன்னை பிரின்ஸிபால் திட்டினாரு?"
"பிரின்ஸிபால் அவரோட 'நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கச் சொன்னார்.
 நான் 'பிரின்ஸிபால் நாயை காணவில்லை'னு விளம்பரம் கொடுத்திட்டேன்."
 
24. "உனக்கு ஆபரேஷன் தேவையில்லேப்பா!"
"அப்பவே எங்க குடும்ப ஜோசியர் சொன்னாரு டாக்டர். 'ராமசாமி, உனக்கு ஒரு பெரிய கண்டம் இருக்கு.  ஆனாலும்,நீ அதிலேர்ந்து தப்பி ச்சிடுவே'ன்னு!"
 
25. "அந்த மந்தரிவாதி காலத்துக்குத் தகுந்த மாதிரி பிழைச்சிக்கிறான்!"
"எப்படி?"
"இங்கு ஜெயிலுக்குச் செல்லாமல் இருக்கவும் ஜாமீன் கிடைக்கவும் தாயத்துப் போடப்படும்ன்னு எழுதிப் போட்டு இருக்கானே!"

26. "அந்த ஹீரோவை வச்சு படம் எடுத்ததுல என்னோட சொத்துல பாதி அழிச்சு போச்சு."
"அவர்கிட்டயே இதைச் சொல்ல வேண்டியதுதானே....?"
"சொன்னதுக்கு, 'கவலைப்படாதீங்க, இன்னொரு படத்துக்கு கால்ஷீட் தரேன்'னு சொல்றாரே!"
 
27. "நீங்க இதுவரைக்கும் நிறைய கச்சேரிகள் பாடியிருக்கீங்க... சரிதானே?"
"அட... எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"
"நான் எங்கே கண்டுபிடிச்சேன்? அதான் உங்க உடம்புல இருக்கற தழும்புகள் சொல்லுதே...."
-
28. "ஒவ்வொரு சபாவுல கச்சேரி பாடறப்போவும் ரொம்பப் பயத்தோட பாடுவார் எங்க பாடகர்?"
"பாட்டு நல்லா வரணும்னா?"
"ஊஹூம்... பாடிட்டு நல்லா வரணுமேனு."
29. "அடுத்து நான் என்ன பாடணும்னு நீங்க ஆசைப்படறீங்க?
கல்யாணியா, சிந்து பைரவியா, நீலாம்பரியா? காம்போதியா?"
"மங்களம்."

 

எலி மருந்து



11. "எங்கம்மா எதையுமே சாப்பிட்டு பார்த்துதான் வாங்குவாங்க!"
"என்னங்க நம்ம வீட்டுல ஒரே எலித்தொல்லையா இருக்கு.


அத்தையே போய் எலி மருந்து வாங்கிட்டு வரச் சொல்லுங்க


12. ஹோட்டல் முதலாளி: "கையில் காசு இல்லாம, ஒருத்தருக்கு ரெண்டுபேரா எப்படி சாப்பிட வந்தீங்க?"

கஸ்டமர் : "ஒருத்தரா மாவு ஆட்றது கஷ்டமா இருக்குமேன்னுதான் ரெண்டு பேரா வந்தோம்!"."

13. "இதுவரை யாருமே செய்யாத புதுமையான முறையில் கபாலி கொள்ளையடித்துள்ளான் யுவர் ஆனர்."

"ரொம்ப புகழாதீங்க வக்கீலய்யா கூச்சமாயிருக்கு!"

14. மனைவி : "நான் ஷாப்பிங் போயிருக்கிறேன். ஏழு மணிக்குள் வந்துவிடுவேன். டேபிள் மீது இரண்டு வடை வைத்து இருக்கிறேன்.

ஒன்றை நீங்கள் எடுத்துக்கொண்டு, இன்னொன்றை எலிப் பொறியில் வைத்துவிடவும்!"

15. "நம்ம தலைவர் எல்லா சொத்தையும் தர்மத்திற்கு எழுதி வச்சிட்டார்."

"அப்படியா? நம்ம தலைவருக்கு எவ்ளோ பெரிய மனசு!"
"ரொம்ப அவசரப்படாதே. தர்மம் என்பது அவரோட மூத்த மகள்."

16. "அந்த நடிகையோட டூப்பை ஏன் போலீஸ் தேடுது?"

"போலீஸ் அந்த நடிகைகிட்டே 'நீங்க விபசாரம் பண்றீங்களாமே'ன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் 'டூப்'னு சொல்லிட்டாங்களாம்."
 

17. "நில அபகரிப்பு வழக்கில் நீங்கள் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறேன்."

"அப்ப அபகரிச்ச நிலத்தையெல்லாம் நானே வச்சுக்கலாமா எஜமான்..."

18. "வீட்டுல மனைவியோட பிடுங்கல் அதிகம் டாக்டர்..."

"இருக்கலாம்... அதுக்காக குணமாகியும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ணாம இருக்க முடியாதே?"
 

19. "நீங்க வருமானத்துக்கு அதிகமா ஏகமா சொத்து சேர்த்து வச்சிருக்கீங்க."

"அதை என் மனைவிகிட்டே சொல்லுங்க சார்... அவதான் எப்போ பார்த்தாலும், 'என்ன பெரிசா சொத்து சம்பாதிச்சு வச்சு இருக்கீங்க?'னு என்னை குறை சொல்லிட்டே இருக்கா..."

20. "வழக்கமா நான் பாடற நேரத்தைவிட இன்னைக்குக் கூடுதல் நேரம் பாடிட்டேன்னு நினைக்கறேன்..."

"கொஞ்சம்கூடக் குற்ற உணர்ச்சியே இல்லாம சொல்றீங்களே! உங்களுக்கு மனசாட்சியே இல்லையா பாக்டர்"

நான் தமிழ்நாட்டுலதான் இருக்கேன்



"குற்றப் பத்திரிகையை படிச்ச தலைவர் 'ஷாக்' ஆயிட்டாரே... அவ்வளவு குற்றச்சாட்டுகளா?"
"இல்லை... குற்றப் பத்திரிகையின் கடைசியில் 'தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும - சிறை அதிகாரிகள்'னு போட்டிருக்காம்!"


2. " 'டாக்டருக்குப் படிக்க வைங்க'னு என் பையன் உயிரை எடுக்கறான்!"
"அதுக்குள்ளேவா...!"

3. படம் ரிலீஸ் ஆன பின்னால் எதுக்கு சார் பைனான்ஸ் கேட்கறீங்க?" 
 
"படத்தை 100 நாள் ஓட்டணுமே!"


4. "உன் மனைவி திருக்குறள் மாதிரியா... எப்படி?"
"ரெண்டே 'அடி'யில எல்லாத்தையும் புரியவெச்சுடுவா!"

 


5. "லைப்ரரியில் பேப்பர் படிக்க வந்த என்கிட்ட எதுக்கு உடம்பு எப்படி இருக்குனு கேட்கிறீங்க?"

"நேத்தே இது ஹாஸ்பிட்டலா மாறிடுச்சே!"

-


6. "நான் ரொம்பப் பெருந்தன்மை உள்ளவன். உதாரணத்துக்கு என் சம்சாரத்தையே எடுத்துக்கோயேன்..."

"ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்!"

7. "பாடத்தில் கேள்வி கேட்கணும்னா ஒண்ணு ரெண்டு கேள்வியோடு நிறுத்திக்கணும்...சும்மா இப்படி அரசியல்வாதிகளை கோர்ட்ல கேட்கிற மாதிரி ஆயிரக்கணக்குல கேட்டா...
 இனிமே, 'தெரியாதுன்னோ, ஞாபகம் இல்லைனோ'தான் சொல்றதா இருக்கோம் சார்""
 

8. "எங்கள் தலைவர் உத்தமர்... புனித வீரர். அவருக்குத் தீங்கு நினைத்தால், நாங்கள் பொங்கிப் புறப்படுவோம்.



அவருக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் எங்களது உயிரைத் தருவோம்
 

9. "ஆபீஸ் வேலையை வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் செய்யறேன்னு சொல்றது ரொம்ப சந்தோஷம்தான். ஆனா, நீங்க கேஷியரா இருக்கிறதால, பணத்தை எண்ண வீட்டுக்கு எடுத்துட்டுப் போறது நல்லாயில்ல!"

10. "டாடி... என்னைக் கடத்திட்டு வந்து அடைச்சு வச்சிருக்காங்க... நான் தமிழ்நாட்டுலதான் இருக்கேனானு எப்படிக் கண்டுபிடிக்கிறது?"
"கன்னாபின்னானு பவர் கட் ஆவுதான்னு பாரு!"

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...