Total Pageviews

Sunday, October 11, 2015

வலைபதிவர் திருவிழா 11.10.2015 புதுகை !


வலைபதிவர் திருவிழா நடந்தது  - புதுகை !


கூடமோ                       :  செழுமை !


வறவேற்பு,உபசரிப்பில் திரு.முத்து நிலவனின்:  புதுமை !

செயல்பாடுகளில்     :  மேன்மை!

மேடையிலே               : பசுமை! மற்றும் குளுமை !

விழாக்குழுவினர் உடையோ : செம்மை!

தமிழிசை பாடல்களோ    :       அருமை!

விழாக்குழுவினர் அனைவரும்   : மென்மை!

செய்ததோ வந்திருந்த பதிவர் அனைவருக்கும்: நன்மை !

எழுத்தாளர் திரு இராமகிருஷ்ணன் பேச்சோ :  நுண்மை !

பேசுவது  அவரவர்     : உரிமை!

குழிப்பணியாரமோ   : வெண்மை !

வந்தவர்களில் பாதி  : முதுமை !

மீதி                                    : இளமை ! 


விழாவை சீரும் சிறப்பாக நடத்தியது விழாக் குழுவினரின்: திறமை!


மொத்ததில் இந்த வலைபதிவர் திருவிழா நமக்கு எல்லாம் : பெருமை !

நான் சொல்லுவது அனைத்தும்:உண்மை!உண்மை ! உண்மை!

மதுரை சித்தையன் சிவக்குமார்-9965244410




Friday, October 9, 2015

நான் கொஞ்சம் கவுரவமானவன் !




ராதா: "அந்த நடிகை ரொம்ப மனித நேயம் உள்ளவருன்னு எப்படிச் சொல்றே?

சீதா: " "தன்னோட முன்னாள் 5  கணவர்களுக்கு மாதாமாதம் கருணைத் தொகை அனுப்புறாங்களே!"

***************************************

பிச்சைக்காரன் 1: அதோ உண்டியல் குலுக்கிக்கிட்டுப் போறாரே கட்சித்தலைவர். அவரும் நம்மளப் போலத்தான்!

பிச்சைக்காரன் 2: எப்படி சொல்றே...!

பிச்சைக்காரன் 1: அவருக்கு வசதி இருந்தும் பிச்சை எடுக்கிறாரு ! , நாம வசதியில்லாம பிச்சை எடுக்கிறோம் ! அதான்!.

******************************************

சாமியார் : தம்பி! உன் மனைவியை ஏளனமாக எண்ணாதே. அவள் பஞ்ச பூதங்களால் ஆனவள் !

ஒருவர் : ஓ! அப்படிங்களா சாமி? அவ அடிக்கும் போது மனுஷி அடிக்கிற மாதிரி இல்லையேன்னு நான் நினைச்சது சரியாப் போச்சு!!

***************************

TTR: ஏன்யா டிக்கெட் எடுக்காம போறே..... இதிலே ஏ.சி. பெட்டி கேக்குதோ...?"

பயணி :"எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!"

************************
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்?

மகன்: இது என் "ரேங் கார்ட் இல்லைப்பா ! இது உங்களோடது ! 

************************

எமகண்டம் !



தயாரிப்பாளர் : "ஆரம்பத்துலே படத்துக்கு பத்துக்கோடிதானே பட்ஜெட் சொன்னீங்க, இப்போ இருபதுகோடின்னு சொன்னா எப்படி? எதற்கு?"

நடிகர்: "ஒருவேளை படம் ஓடாட்டி படத்தை வாங்கினவங்களுக்கு திருப்பிக் கொடுக்கறதுக்காகதான்!

பட்ஜெட்டுல ரீஃபண்ட் திட்டம் வச்சிருக்கோம்!" எப்புடி!

*************************

மனைவி: "இந்த ஆள் டி.வி. மெக்கானிக்கா.. இல்லே சைக்கிள் மெக்கானிக்கா..?"

கணவன் : "ஏன் கேக்கற..?" "டி.வி-யில பிக்சர்டியூப் சரியில்லேங்கறேன்! 

பங்க்ச்சர் ஒட்டிடலாம்ங்கறான் !

*******************
காவலர்: "இது கொலையா தற்கொலையா?" 
"ஒருத்தனுக்குத்தான் தெரியும். சார், ஆனா அவன் சொல்ல மாட்டான்."

இன்ஸ்பெக்டர்: "யாரவன்?"

காவலர்: சார் ! "செத்தவன்தான்!" சார் !

**********************

மனைவி : நான் வீட்டுல இல்லாதப்ப வேலைக்காரியை கடுப்பா முறைச்சுப் பார்த்தீங்களாமே! அவளை வேலையை விட்டு நிறுத்திடவா?

கணவன் : முதல்ல அதை செய்! நான் காதலா பார்க்குறேனா? கடுப்பா பார்க்குறேனா?ன்னு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத கூமுட்டையை எல்லாம் வேலைக்கு வச்சுக்க கூடாது!!

*************************

தந்தை: எதுக்கு சார் என் பையன அடிச்சீங்க?"

ஆசிரியர் : "பின்ன என்ன சார், மேப்ல எல்லா கண்டமும் இருக்கு, 

ஆனா இந்த எமகண்டம் எங்க இருக்குனு கேட்டா என்னத்த சொல்லுறது?"

**************************

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...