Total Pageviews

Monday, December 31, 2012

மனைவியின் மொபைல் எண்




தன் மனைவியின் மொபைல் எண்ணை கணவன் எப்படியெல்லாம் பதிவு செய்து வைத்திருப்பான்?

1.திருமணமான புதிதில் - MY LIFE

2.ஒரு வருடம் கழித்து  - MY WIFE

3.இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME

4.ஐந்து வருட முடிவில் - HITLER

5.பத்து வருஷம் கழித்து - WRONG NUMBER (SMS)

6. 20 வருடங்கள் கழித்து - WRONG MEMBER (MSG.)

Thursday, December 13, 2012

இதுக்கு பரிகாரமே இல்லியா,

'

ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்குடீ... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"


""உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே, காஞ்சிப்பட்டா? ஆரணிப்பட்டா?''
""கடன் பட்டு''


""ஆபரேசனுக்கு பின்னாடி கண் நல்லாத் தெரியும்னு டாக்டர் சொன்னார்''
""நல்லாத் தெரியுதுங்களா?''
""பின்னாடி எங்க தெரியுது. இப்பவும் முன்னாடிதான் தெரியுது''

அவன்தான் என்னை மதிக்கிறதில்லை



'உங்க டைவர்ஸுக்கு என்ன காரணம்னு கேட்டதுக்கு உங்க கணவர்,
 நீங்க அவரை மதிக்கிறதே இல்லைன்னு சொல்றாரே...?''
மனைவி:''சுத்த பொய். அவன்தான் என்னை மதிக்கிறதில்லை...!''


கணவன்: ''இனிமே நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!''
மனைவி: ''பெரிசா சொல்றீங்க... ஆனா, நான் அடிக்கும்போது நாலு ஊருக்குக் கேட்கிற மாதிரி கத்தறீங்களே?''


மனைவி:''என்னங்க! எனக்கு இன்றைய ராசி பலன்ல 'கணவர்மீது அன்பு செலுத்துவீர்னு போட்டிருக்குங்க!''
கணவன்''இருக்காதா பின்னே... எனக்கு இன்னிக்கு சம்பள நாளாச்சே!''


'கல்யாணம் ஆன நாளிலேருந்து ஒரு நாள்கூட என் மனைவி எங்கிட்டே, 'அதை வாங்கித் தாங்க... இதை வாங்கித் தாங்க'ன்னு நச்சரித்ததே இல்லை!''
''அப்படியா?''
''கிரெடிட் கார்டு மட்டும் வாங்கித் தரச்சொல்லி அவ வெச்சுக்கிட்டா!''


கணவன்' நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''
டாக்டர்: ''யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்...
அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''


டாக்டர்:''தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்''
''இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன்.
என்ன?
என் மனைவிதான் அதை காபினு சொல்கிறாள்''

சிரிப்புகள் பலவிதம்


*  ஓயாமல் சிரிப்பவன்- பைத்தியக்காரன்

* ஓடவிட்டு சிரிப்பவன்- வஞ்சகன்

* இடம்பார்த்து சிரிப்பவன்- எத்தன்

* குழைந்து சிரிப்பவன்- கோமாளி

* இன்பத்தில் சிரிப்பவன்- ஏமாளி

* கண்பார்த்துச் சிரிப்பவன்- காரியவாதி

* யாரும் காணாமல் சிரிப்பவன்- கஞ்சன்

* கற்பனையில் சிரிப்பவன்- கவிஞன்

* வெற்றியில் சிரிப்பவன்- வீரன்

* நினைவோடு சிரிப்பவன்- அறிஞன்

தினமணி

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Friday, December 7, 2012

பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"



என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"எப்படிக் காப்பாத்தினா?"
"ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
----------------------------------

டீச்சர்: உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர் : என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ..

----------------------

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
---------------------------------


தோழி1  :உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்..
தோழி :2 :ஓ அதுவா நான் மேக்கப்பை கலைச்சிட்டேன் அதுதான் 
---------------------.


அம்மா : இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்காக இருக்காங்களோ
அவங்களுக்கு நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள் : போம்மா இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை
எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்
-------------------------


"என்னடா ரொம்ப கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"
------------------------


சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க
-------------------------

கோழிக்கு தீனீ



ஒரு கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.

மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.

மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்.

டீச்சர்


டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்

டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.

டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.

டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.

டீச்சர்: டேய் ஸ்டுபிட் உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாருங்க?
பையன்: பேர குழந்தைகள்!!!
இதைவிடவுமா ஒருத்தரால ஆக முடியும் நீங்களே சொல்லுங்க..!!

ஒரு கவிதை...


கணவனால் மனைவிக்கு எழுதப்பட்டது.

பசியை படைத்த இறைவன்
 

உணவைப்படைத்தான்
 

தாகத்தை படைத்த இறைவன்
 

தண்ணீரைப்ப படைத்தான்
 

அமைதியான உலகை படைத்த இறைவன்
 

உன்னைப் படைத்தான்
-------------------
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.


உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.

-----------------------

மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..!

------------------------
கணவன்:தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்
ஆனால் நீ இல்லை...
மனைவி: அப்பறம்....
கணவன்: பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
------------------------------------

இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
கருப்பசாமி : அவ்வளோ நல்லவரா நீங்க!
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
----------------------------


கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
கணவன்:மூளைக் காய்ச்சல்தான் பரவுது!
மனைவி: அது எப்பிடி உங்களுக்கு வரும்!
------------------------
 

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...