Total Pageviews

Thursday, September 6, 2012

நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு


டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
-----------------------------

பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
--------------------------

வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...
----------------------------------

வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்: அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!
----------------------------------

வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?
டாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?
வந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்ட நாள் முதல்.

டாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.
-------------------


வெளி நாடு சென்றிருந்த கணவருக்குத் தந்தி வந்தது, " மனைவி இறந்து விட்டார்.உடனே வரவும்".
கணவர் தெரிவித்தார், "என்னால் வர இயலாது, ஈமக்கிரியைகளை முடித்து விடவும்"
மீண்டும் தந்தி வந்தது, " பிணத்தை எரிப்பதா? புதைப்பதா?"
கணவர் பதில் அனுப்பினார், " பிணத்தை எரித்து விடவும். சாம்பலைப் புதைத்து விடவும்."
----------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...