Total Pageviews

Saturday, March 5, 2016

உங்க மனைவி எப்படி இருப்பாங்க?




செல்வா: நண்பா, எனக்கு சாப்பிட பிடிக்கலை ! தூங்க பிடிக்கலை !

எனக்கு காதல் வந்திடுச்சோன்னு நினைச்சு பயமா இருக்கு !

சீனிவாசன் : சனியனே ! செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு ! போய் படி !

=============================
காவல் நிலையத்தில்.....

காவலர் : ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க !

ராமு, உங்க மனைவி எப்படி இருப்பாங்க?

ராமு : ஸ்லிம்மா ! சிவப்பா ! ரொம்ப அழகா ! இருப்பாங்க!


காவலர் : சோமு, உங்க மனைவி எப்படி இருப்பாங்க?

சோமு: அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க ராமு, உங்க மனைவியை போய் தேடலாம் !

காவலர் : ............................................... !

************************************

கண்டக்டர்: மாணவரிடம் நீங்க....... எங்க போகணும்?

மாணவர்:  கண்டக்டர், கொஞ்சம் வழி விடுங்க.  நான் அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட போகனும் . கொஞ்சம் வழி விடுங்க !

********************************

.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம். !

குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி................ !

***********************************.

ஆசிரியர்: தம்பி இமயமலையின் உயரம் என்ன ?

மாணவன்:தெரியாது சார் !

ஆசிரியர்:பெஞ்ச் மேல ஏறி நில்லு...

மாணவன்: அங்க நின்னு பார்த்தல் தெரியுமா சார் ...?

ஆசிரியர்:.........!!

**************************

வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர் !



அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார்.

டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம்.
*********************************

திருடன்  : வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.

டாக்டர்:  இதிலொன்னும் தப்பில்லையே !

திருடன் : திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!

********************************

டாக்டர் நீங்க ஆபேரஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது.

அடடா...! என்னோட பொடி டப்பா உங்க வயிலுத்துல தான் இருக்கா?

********************************

உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான் !

********************************

நோயாளி : ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க !

 இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?

டாக்டர்: எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னே தவிர உங்களுக்கு அல்ல!

**********************************.

பேசம காலை எடுத்துடுங்க டாக்டர் !



மருமகள் : டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு!

டாக்டர் : முள்ளை எடுக்கணுமா?

மருமகள் : முள் சின்னது ! அதை ஏன் தொந்தரவு பண்ணணும்? பேசம காலை எடுத்துடுங்க டாக்டர் !

*****************************************

நோயாளி: டாக்டர் எனக்கு எதை பார்த்தாலும் இரண்டு இரண்டா தெரியுது .......

டாக்டர் : அதற்கு என் மூணு பேர் வந்திருக்கீங்க .....

*****************************

கீதா : கண் வலின்னு டாக்டர்ட்ட போனியே என்ன ஆச்சு ?

ராதா : அவரே பார்க்கும் நேரம் காலை 9 -12 ன்னு போட்டிருக்கார்  டீ...

கீதா :  அப்ப, அவருக்கே கண்ணு, காலை 9 -12 தான் தெரியும் போலிருக்கு.  டீ...

ராதா :  நாம வேற நல்ல டாக்டர்ட்ட போகலாம். டீ.....

*****************************

மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்?

டாக்டர் ,மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம்.

ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான்.!


*****************************

ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?

மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க

சொன்னாருங்க அதான்.
___________________________

நோயாளி : வயிறு எரியுது டாக்டர் !

டாக்டர் :எப்போதிலிருந்து?

நோயாளி : என் காதலி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர் !


*********************************

Saturday, January 30, 2016

உன் மேல ஒரு கண்ணு ! நான் தருவேன் ஒரு பன்னு !




காதலன்:  உன் மேல ஒரு கண்ணு ! நான் தருவேன் ஒரு பன்னு !

காதலி : அப்ப இன்னொரு கண்ணு ?

காதலன்: உன் தங்கச்சி male !

காதலி : அவ female ஆச்சே!

*******************

ராமு : பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டிலயிருந்து பறந்து வருது தெரியுமா?"

சோமு : "ஏன்...?" 

"ராமு : நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"

*******************

நோயாளி : எனக்கு அடிக்கடி தற்க்கொலைக்கு எண்ணம் வருது !

டாக்டர் : அதெல்லாம் கூடாது ! ரெம்ப தப்பு ! அப்புறம் நாங்கெல்லாம் எதற்க்கு இருக்கோம்!

****************

நோயாளி :  டாக்டர், என் மனைவிக்கு 2 நாளா  பேசவே முடியலே !

டாக்டர் :  என்ன சாப்பிட்டான்னு கேட்டுச்சொல்லு!  அதையே என் மனைவிக்கும் வாங்கி கொடுத்துடுறேன்!

நோயாளி :  டாக்டர்.............................. !


*************************


நோயாளி :  டாக்டர் நான் தான் பிழைத்துக் கொண்டேனே எதற்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் ?

டாக்டர் : நீ பிழைத்தால் மட்டும் போதுமா ஸ்கேன் சென்டர் வைத்திருக்கும் என் "மச்சான்" பிழைக்க வேண்டாமா?

நோயாளி :  டாக்டர்.............................. !

*************************************

Saturday, November 28, 2015

பயணிகளின் கனிவான கவனத்திற்கு !

பயணிகளின் கனிவான
கவனத்திற்கு
கடலூரிலிருந்து
பாண்டிச்சேரி வழியாக
சென்னை செல்லும்
படகு நான்காவது
பிளாட்பாரத்திலிருந்து
இன்னும் சற்று நேரத்தில் புறப்படத் தயாராக உள்ளது!
பயணிகள் அனைவரும்
தயாராக இருக்குமாறு
கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்!!"



Thanks to Sountha Manuel

Friday, November 27, 2015

விவசாயம் பண்ணப் போறேன்!



இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்!

முதியவர் : வெரிகுட்! வெரிகுட்!! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?

இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான் சார்!

********************************

என்னடா மாப்ளே.... நம்ம தெரு ஜோசியருக்கு திடீர்னு மவசு கூடிருச்சு !!

எப்பவும் பெண்கள், கூட்டம் கூட்டமா போறாங்க !!! " அப்படி என்ன நல்லாவா குறி சொல்றாரு ???!! "
,
"ஆமாம் மச்சான்.. இப்பல்லாம் அவர் ஜோசியம் சொல்லிப்புட்டு கூடவே.. அடுத்த வாரம் மழை பெய்யுமா ? குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகுமா ? இல்லையா ?  மழை வருமா ? வராதான்னு !  சொல்லிப்புடுறாராம்!!!! ??? அதான் !

***********************************

சாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!”

சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது !

ராமு : “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” .

சோமு : அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”

ராமு  : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..

*********************************

காவல் துறை அதிகாரியிடம் பெண் ஒருவர் : என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக்கடிதம் வருது சார்!”

“காவல் துறை அதிகாரி : உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா இருக்கா ?”

“பெண்  : நேர்ல திட்டுவதற்க்கு பயந்துகிட்டு !  என் புருசனே மொட்டை கடிதாசி எழுதுறாறோன்னு சந்தேகப்படறேன், சார்!”

***************************************

ராமு: மழை எப்போ நிக்கும்?

சோமு : ஏண்டா மாப்ள ! வயல்ல இறங்கி வேலை பார்க்க போறியா?

ராமு: இல்ல மாமு, மழை நின்னுடுச்சுன்னா,  ரோட்ட உழுது விவசாயம் பண்ணப் போறேன்!

************************************

முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?" 300 வது நகைச்சுவை பதிவு !




பிரதமர் : கடையில் என் படங்களை மட்டும் விற்க்கின்றாயே ! ஏன்?  மற்ற தேசத்தலைவர்கள் படங்களை எல்லாம் விற்க்க மாட்டாயா?

படம் விற்பவர் : தேசத்தலைவர்கள் / சினிமா நட்சத்திறங்கள் எல்லாப்படங்களும் விற்று தீர்ந்து விட்டது ! தங்கள் படத்தை தவிர !

*******************************************

வந்தவர் : உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??

கடைக்காரர் : என்னய்யா சொல்றே??

வந்தவர் :  ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க ! திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு..! அதான் !

******************************************

ராஜா : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை !

மந்திரி : அப்படி என்ன பண்ணிட்டான்..?"

"ராஜா : என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டானே!

********************************
பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.

டாக்டர்: எப்போ நடந்தது?

பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.

டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?

பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன்,

டாக்டர் கோபமாக : இப்ப ஏன் வந்தீங்க ?

பேஷன்ட்:  இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு !

***************************

நடிகை : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?"

டாக்டர் : "எதுக்கு?"

நடிகை : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!

***********************************


30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...