Thursday, January 19, 2012

போலீஸ் - திருடன்





திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!


திருடன்-2: இதிலென்னடா அவமானம்...?


திருடன்-1: அவ என் மனைவிடா....


-------------------------------------------------------------------
 "திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...


வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?


திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்."
-----------------------------------------


"வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?


திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன். "


--------------------------------------


"ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...


திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...


---------------------------------------------------------


 "நீதிபதி: ஏம்பா போலீஸ் ஸ்டேசனிலேயே திருட ஆரம்பித்திருக்கிறாயே...


திருடன்: எனக்கு ஏரியாவே பிரித்துக் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க சார்.. 


நான் என்ன பண்றது...?
---------------------------------------------------------"


"வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..


திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...


-----------------------------------------------------------
"திருடன்-1: நேற்று நான் திருட போன கம்பெனி முகமூடி தயாரிக்கிற கம்பெனியாம்... 


திருடன்-2: அப்புறம் என்ன செய்தாய்?


திருடன்-1: பத்து முகமூடி திருடிட்டு வந்தேன்.
--------------------------------------------------------------


"போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா இருந்திருக்கிறாங்களே...


வீட்டுக்காரர்: ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தையும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்."
--------------------------------------------------------------

1 comments:

  1. இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.நன்றி!
    http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_27.html

    ReplyDelete