Total Pageviews

Wednesday, September 24, 2014

குடிக்க ஏதாவது கொடேன் !





கணவன்: ”என்னமோ மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்”

மனைவி : சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?

கணவன்:”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.

மனைவி :காபியா? இல்லே டீயா?

கணவன்: ம்.. காபியே கொடு.

மனைவி :பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?

கணவன்:பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.

மனைவி :நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?

கணவன்:நரசுஸ் தூள்லேயே போடு.

மனைவி :ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?

கணவன்:ஸ்டிராங்காவே இருக்கட்டும்.

மனைவி :சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?

கணவன்:சர்க்கரை போட்டே கொடு.

மனைவி :கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?

கணவன்: ”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”

மனைவி :”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”

-----------------

1 comment:

  1. குடிக்க ஏதாவது கொடேன்! வடிவேலு ஸ்டைல் போல இருக்கு ஹாஹஹஹஹ.....

    அது சரி மனைவிக்கு கணவனை இன்னும் புரிந்து கொள்ள முடியலையோ....ஹஹஹஹ

    ReplyDelete