Total Pageviews

Saturday, October 4, 2014

பாட்டரி தீரும்வரை !




டாக்டர்: உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள்ள உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துட்டதே!

நோயாளி: உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க.

***************************

டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க !

மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான்தானே? அவளுக்கு என்ன பயம்?

டாக்டர்: எங்க ஆபரேஷனை சரியா  பண்ணிடுவேணோனு நினைச்சுத்தான்!

*******************************************

டாக்டர் : தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. உங்க உடம்பு குறையும் !

நபர் : எவ்வளவு நேரம் விளையாடினாலும் உடம்பு  குறையலேயே ! டாக்டர் !

டாக்டர் : என்னென்ன விளையாட்டு எல்லாம் விளையாடுவீங்க?

நபர் : டாக்டர், நான் தினமும் கிரிக்கெட், டென்னிஸ் அப்புறம் ஃபுட்பால்  எல்லாம் விளையாடறேன் !.

டாக்டர் : அப்படியா? எவ்வளவு நேரம் விளையாடுவீங்க?

நபர் : மொபைலில் இருக்கும் பாட்டரி தீரும்வரை.

டாக்டர் : அப்புறம் எப்படி உடம்பு குறையும் !
 
********************

நோயாளி: கிளினிக்ல எதுக்கு 12 ராசிகளோட பேரையும் டாக்டர் எழுதி வெச்சிருக்கிறாரு?

நர்ஸ்: ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!


*************************************

2 comments:

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...