100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை உன் தாத்தா திட்டறாரே ஏன்?
அவருக்கு வயது 102.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?
இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கிற வியாதியாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக, ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!
அப்படித்தான் மெக்கானிக்கும் சொன்னான்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
ooooooooooooooooooo
'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''
''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''
''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''
ooooooooooooooooooo
நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?
மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு!
oooooooooooooooooooo
ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?
பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''
ooooooooooooooooooo
No comments:
Post a Comment