"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"
"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"
------------------------------------------------
"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"
"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!
---------------------------------------------
"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்?
இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"
"இது ஏழைப் பேயாம்!"
---------------------------------------------
எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!
xxxxxxxxxxxxxxxx
நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....
வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....
xxxxxxxxxxxxxxxxx
மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
xxxxxxxxxxxxxxxxx
''நாட்டில் இருக்குற விலைவாசி உயர்வு தலைவரை ரொம்பப் பாதிச்சுடுச்சாம்...''
''அவருக்கு அவ்ளோ இரக்க குணமா?''
''ஒரு வோட்டுக்கு ஐந்து, பத்து கொடுத்த காலம் போய்... இப்ப நூறு ஐந்நூறு கொடுக்க வேண்டியதா இருக்கேன்னு வருத்தப்படுறார்
xxxxxxxxxxxxxxxxx
''தலைவரே... செல்போன்ல ஏன் வைப்ரேஷன் வெச்சுத் தொலைச்சீங்க... பாருங்க. நீங்க உதர்றதைப் பார்த்து தோல்வி பயத்துல உதர்றதா எதிர்க்கட்சிகள் சொல்றாங்க!''
xxxxxxxxxxxxxxxxx
No comments:
Post a Comment