21. "இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன்?" "என்ன சொல்றே?"
"என் மனைவி சமைச்ச சாப்பாட்டை அப்புறம் சாப்பிடலாம்னு எடுத்து வச்சேன். இந்த நாய் சாப்பிட்டுவிட்டு மயக்கமா இருக்கு."
22. "ஹீரோ பேசும்போது ஏன் அப்பப்போ பஞ்சை பறக்க விடுறீங்க?"
"பஞ்ச் டயலாக் என்பதை ஆடியன்ஸ்க்கு காட்டனுமில்ல."
23. "ஏண்டா உன்னை பிரின்ஸிபால் திட்டினாரு?"
"பிரின்ஸிபால் அவரோட 'நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கச் சொன்னார்.
"பிரின்ஸிபால் அவரோட 'நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கச் சொன்னார்.
நான் 'பிரின்ஸிபால் நாயை காணவில்லை'னு விளம்பரம் கொடுத்திட்டேன்."
24. "உனக்கு ஆபரேஷன் தேவையில்லேப்பா!"
"அப்பவே எங்க குடும்ப ஜோசியர் சொன்னாரு டாக்டர். 'ராமசாமி, உனக்கு ஒரு பெரிய கண்டம் இருக்கு. ஆனாலும்,நீ அதிலேர்ந்து தப்பி ச்சிடுவே'ன்னு!"
25. "அந்த மந்தரிவாதி காலத்துக்குத் தகுந்த மாதிரி பிழைச்சிக்கிறான்!"
"எப்படி?"
"இங்கு ஜெயிலுக்குச் செல்லாமல் இருக்கவும் ஜாமீன் கிடைக்கவும் தாயத்துப் போடப்படும்ன்னு எழுதிப் போட்டு இருக்கானே!"
26. "அந்த ஹீரோவை வச்சு படம் எடுத்ததுல என்னோட சொத்துல பாதி அழிச்சு போச்சு."
"அவர்கிட்டயே இதைச் சொல்ல வேண்டியதுதானே....?"
"சொன்னதுக்கு, 'கவலைப்படாதீங்க, இன்னொரு படத்துக்கு கால்ஷீட் தரேன்'னு சொல்றாரே!"
27. "நீங்க இதுவரைக்கும் நிறைய கச்சேரிகள் பாடியிருக்கீங்க... சரிதானே?"
"அட... எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"
"நான் எங்கே கண்டுபிடிச்சேன்? அதான் உங்க உடம்புல இருக்கற தழும்புகள் சொல்லுதே...."
-
28. "ஒவ்வொரு சபாவுல கச்சேரி பாடறப்போவும் ரொம்பப் பயத்தோட பாடுவார் எங்க பாடகர்?"
"பாட்டு நல்லா வரணும்னா?"
"ஊஹூம்... பாடிட்டு நல்லா வரணுமேனு."
29. "அடுத்து நான் என்ன பாடணும்னு நீங்க ஆசைப்படறீங்க?
கல்யாணியா, சிந்து பைரவியா, நீலாம்பரியா? காம்போதியா?"
"மங்களம்."
No comments:
Post a Comment