1.ஏம்மா அஞ்சு! பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வர்றது?
நீங்கதான டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டேயிருந்தீங்க...
2.ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?
மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: ?!?!?!
3.ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்.
4.ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்
5.பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.
ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.
மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
6. சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கணக்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்
அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?
10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்
¿ýÈ¢ : Á¸¢
No comments:
Post a Comment