"குற்றப் பத்திரிகையை படிச்ச தலைவர் 'ஷாக்' ஆயிட்டாரே... அவ்வளவு குற்றச்சாட்டுகளா?"
"இல்லை... குற்றப் பத்திரிகையின் கடைசியில் 'தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும - சிறை அதிகாரிகள்'னு போட்டிருக்காம்!"
2. " 'டாக்டருக்குப் படிக்க வைங்க'னு என் பையன் உயிரை எடுக்கறான்!"
"அதுக்குள்ளேவா...!"
3. படம் ரிலீஸ் ஆன பின்னால் எதுக்கு சார் பைனான்ஸ் கேட்கறீங்க?"
"படத்தை 100 நாள் ஓட்டணுமே!"
4. "உன் மனைவி திருக்குறள் மாதிரியா... எப்படி?"
"ரெண்டே 'அடி'யில எல்லாத்தையும் புரியவெச்சுடுவா!"
5. "லைப்ரரியில் பேப்பர் படிக்க வந்த என்கிட்ட எதுக்கு உடம்பு எப்படி இருக்குனு கேட்கிறீங்க?"
"நேத்தே இது ஹாஸ்பிட்டலா மாறிடுச்சே!"
-
6. "நான் ரொம்பப் பெருந்தன்மை உள்ளவன். உதாரணத்துக்கு என் சம்சாரத்தையே எடுத்துக்கோயேன்..."
"ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்!"
7. "பாடத்தில் கேள்வி கேட்கணும்னா ஒண்ணு ரெண்டு கேள்வியோடு நிறுத்திக்கணும்...சும்மா இப்படி அரசியல்வாதிகளை கோர்ட்ல கேட்கிற மாதிரி ஆயிரக்கணக்குல கேட்டா...
இனிமே, 'தெரியாதுன்னோ, ஞாபகம் இல்லைனோ'தான் சொல்றதா இருக்கோம் சார்""
8. "எங்கள் தலைவர் உத்தமர்... புனித வீரர். அவருக்குத் தீங்கு நினைத்தால், நாங்கள் பொங்கிப் புறப்படுவோம்.
அவருக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் எங்களது உயிரைத் தருவோம்
9. "ஆபீஸ் வேலையை வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் செய்யறேன்னு சொல்றது ரொம்ப சந்தோஷம்தான். ஆனா, நீங்க கேஷியரா இருக்கிறதால, பணத்தை எண்ண வீட்டுக்கு எடுத்துட்டுப் போறது நல்லாயில்ல!"
10. "டாடி... என்னைக் கடத்திட்டு வந்து அடைச்சு வச்சிருக்காங்க... நான் தமிழ்நாட்டுலதான் இருக்கேனானு எப்படிக் கண்டுபிடிக்கிறது?"
"கன்னாபின்னானு பவர் கட் ஆவுதான்னு பாரு!"
No comments:
Post a Comment