Total Pageviews

Monday, March 5, 2012

நான் வெளியூருங்க..



""நம்ம தொகுதி எம்.எல்.ஏ. ஒரே கேள்வியிலேயே சட்டமன்றத்தையே திக்குமுக்காட வைச்சுட்டாராம்'' 

 ""அப்படியா? அப்படி என்ன கேட்டார்?''  

""நான் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ.ன்னு கேட்டாராம்'' 


வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?  

ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே! 


 ""அவர் போலி டாக்டர்தான்னு எப்பிடிக் கண்டுபிடிச்சே?''  

""கால் பாதத்துல ஆணியிருக்குன்னு அவர்ட்ட போனா... கால் இன்ச் ஆணியா? அரை இன்ச் ஆணியான்னு கேக்கிறார்... அதை வச்சுத்தான்'' 


மச்சான்... இவ்ளோ தண்ணி அடிச்சும் மப்பு ஏறவே இல்லடா'' 
 ""டேய் நீ ஃபுல் மப்புலதான்டா இருக்க... 
நான் உன் ஃப்ரண்டு இல்லடா...
 உன் அப்பன்''  


 (டிவி ஷோ ரூம் ஒன்றில்)  ""இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி''  
""நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''

Thanks to Dinamani  

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...