Total Pageviews

Saturday, March 17, 2012

சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்



 
"காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?"
"பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு எழுதியிருக்காங்களே!"


"அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..? "
 
"ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே..."


பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்... "நேத்து என்
மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்."
 
"உன்னோட மனைவியையா?" என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர். "இல்ல சைக்கிள.." என்றார் சொன்னவர்!


"அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?"
"கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!"

"எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்..."
"அப்புறம்..?"
"நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..!"

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...