டாக்டர்:
"உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை...
அதுக்குள்
உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே...
" நோயாளி:
"உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..."
"கதை எழுதறக்குப் புத்திசாலித்தனம்
தேவையில்லீங்க...!"
"நான்
உங்க கதையைப் படிச்ச உடனே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.!"
காதலி:
"இதோ பாருங்க! உங்க கையை வச்சிக்கிட்டு என்கிட்டே எந்த சில்மிஷமும் பண்ணக்
கூடாது.
எல்லாம் கல்யாணத்துக்கப்புறம்தான்.
"காதலன்:
"சரி, அப்போ உன் கல்யாணம் ஆனதும் எனக்குச் சொல்லி
அனுப்பு."
டாக்டர்
: உங்கள் கணவருக்கு ஓய்வு மிகவும் தேவை.
இந்த
தூக்க மாத்திரையைப் பயன்படுத்துங்கள்."
"டாக்டர், மாத்திரையை எப்போது கொடுக்க வேண்டும்?"
"இந்தத் தூக்க மாத்திரை அவருக்கில்லை, உங்களுக்குத்தான்.
உங்கள் கணவர்
நல்ல ஓய்வு எடுக்கவும், விரைவில் குணமாகவும் இதுதான் ஒரே வழி".
என்ன
சார் கல்யாண வீட்டில வந்து என் செருப்பைப் போடறீங்க...?" "உங்களுக்கு முன்னாடியே
இதை நான் பார்த்து வைத்து விட்டேங்க...!"
ஒருவர்:
"ஏதாவது தேவைன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யணும் புரியுதா?"
மற்றவர்:
"அப்ப உங்க பேங்க் பேலன்ஸ்லப் பாதியைக் கொடுத்துட்டு போங்க...!"
பல்
டாக்டர்: "வரவர இந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியல."
மற்றவன்:
"ஏன் என்னாச்சு.
"பல்
டாக்டர்: "பல்வலின்னு வந்த ஒருவர் பல்செட்டைக் கழட்டிக் கொடுக்கிறாரு..."
No comments:
Post a Comment