Total Pageviews

Monday, October 13, 2014

நான்தான் பேசவேயில்லையே !





போலீஸ்: செல்போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா அபராதம்னு உனக்குத் தெரியாதா?

நபர்: தெரியும். ஆனா நான்தான் பேசவேயில்லையே சார்!,                                                                           

என் பொண்டாட்டி திட்டறத் தானேக் கேட்டுக்கிட்டு இருக்கேன்!

********************

தொண்டன்-1: எங்க நிக்க வச்சாலும் நிப்பேன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு!

தொண்டன்-2: ஏன், என்னாச்சு?

தொண்டன்-1: வீட்டு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு !

*************

தொண்டன்-1: தலைவர் எதுக்கு அனாவசியமா சலூன் போகும்போதெல்லாம் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்?

தொண்டன்-2: முடி வெட்டறதுக்கு முன்னாடி துண்டு போர்த்துவாங்கயில்ல, அப்போ கை தட்டுறதுக்குத்தான் !

***************

நிருபர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டுக்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்குன்னு அன்னிக்கு மீட்டிங்ல பேசினீங்களே, அது என்ன?

அரசியல்வாதி: மக்களோட பணம்!

*******************

நோயாளி: டாக்டர்! நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே, அந்த வேலை முடிஞ்சுதா?

டாக்டர்: இன்னும் இல்லை. நீங்க ஏன் தினமும் இதையே கேட்கறீங்க?

நோயாளி: என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்.

*********************

நர்ஸ்: டாக்டர்! இந்த நோயாளிக்கு ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயக்கமே வரலை.

டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு, உடனே மயங்கி விழுந்துடுவாரு.

*****


டாக்டர்: அந்த நோயாளிக்கு என் மேல கோபம் போல தெரியுது.

நர்ஸ்: எப்படிச் சொல்றீங்க?

டாக்டர்: நாக்கை நீட்டச் சொன்னா, துருத்திக் காட்டறாரே!

*****************
நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப சுவையா இருக்கே!

எழுத்தாளர்: கிச்சன்லே சமையல் பண்ணும்போது எழுதினதாச்சே!

*****************

1 comment:

  1. ஹாஹாஹா சூப்பர்! ரொமப்வே சிரித்தோம்!

    ReplyDelete

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...