Total Pageviews

Tuesday, October 7, 2014

மறுபடியும் கல்யாணம் !



கணவன் : நான் இறந்துபோனா நீ மறுபடியும் கல்யாணம் செய்துக்குவியா?

மனைவி : மாட்டேங்க! நான் என் தங்கச்சி கூடவே இருந்துடுவேன். 


நான் இறந்துபோனா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா?

கணவன் : சேச்சே! நானும் உன் தங்கச்சி கூடவே இருந்துடுவேன் !

*********

நண்பர் - 1 : தினமும் எனக்காக காலையில் 50 பொண்ணுங்க காத்திருக்காங்க தெரியுமா?

நண்பர் - 2 : குடுத்து வச்சவன்யா நீ! ஆமா… என்ன வேல பாக்கறே?

நண்பர் - 1 : லேடீஸ் காலேஜ்ல பஸ் டிரைவர் !

*********


விருந்தினர்: என்ன சார், உங்க வீட்டு ஸ்டூல் ரொம்ப வித்தியாசமா இருக்கே! எங்க வாங்கினீங்க?

வீட்டுக்காரர்: என் பொண்டாட்டி செஞ்ச மைசூர்பாகு சரியா வரலே. அதை வீணாக்க வேண்டாம்னு ஸ்டூலாக்கிட்டோம் !


***********

நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கதை எழுதியிருப்பீங்க?

சரியா சொல்லணும்னா 10 கிலோ 450 கிராம்.

                                                                       ******

தொண்டன் - 1: நேத்து விழாவுக்குத் தலைவர் கொஞ்சம் அதிகமாவே குடிச்சிட்டு வந்துட்டார்.

தொண்டன் - 2: எப்படி சொல்றே?

தொண்டன் - 1: தேசிய கீதத்துக்குக் கைதட்டினாரே!

                                                                        ******


No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...