Total Pageviews

Tuesday, October 7, 2014

அவ தினமும் எனக்கு அர்ச்சனை பண்றாளே!




வாடிக்கையாளர் : எனக்கு 2015 காலெண்டர் குடுங்க!

கடைக்காரர் : சாரிங்க! எங்ககிட்டே மொத்தமே ஆயிரம் காலெண்டர்தான் இருக்கு!


*************

நண்பன் - 1 : டேய்! பெட்ரோல் விலை மறுபடியும் 3 ரூபாய் ஏத்திட்டாங்களாம். கொடுமைடா!

நண்பன் - 2 : எனக்கு அந்தக் கவலையே இல்லடா. நான் எப்பவுமே என் வண்டிக்கு 100 ரூபாய்க்குதான் பெட்ரோல் போடறேன் !

**************
வக்கீல்: ஏன் கபாலி உன் மனைவியை விஷம் வச்சி கொல்லப் பார்த்தே?

கபாலி:
 அவ என்னை ரசம் வச்சி கொல்லப்பாத்தா எசமான்!

************

நண்பன் - 1: ஏன் தினமும் கோயில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?

நண்பன் - 2: வீட்டுல அவ தினமும் எனக்கு அர்ச்சனை பண்றாளே!

       அதான் திருப்பி நான் கோயில்ல அர்ச்சனை பண்றேன்!

*****

1 comment:

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...