Total Pageviews

Monday, October 13, 2014

ஒண்ணு எமன் ! ரெண்டாவது உமன்!



நபர் : எப்படியும் எல்லா ரயிலும் லேட்டாத்தான் வரப் போகுது. அப்புறம் எதுக்கு இந்த ரயில்வே டைம் டேபிள் வேற தண்டத்துக்கு?

ரயில்வே அதிகாரி : எந்த ரயில் எவ்ளோ லேட்டா வருதுன்னு தெரிய வேண்டாமா?

******************

நண்பர் - 1: படிச்சுக்கிட்டிருக்கிற பையனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்களே!
                        உங்களுக்கு என்ன பைத்தியமா?

நண்பர் - 2: அட நீங்க வேற, இவனுக்கு இப்ப  பரிட்சை நடந்துக்குட்டு இருக்கு!                          பரிட்சைக்கு போகாம இப்ப வந்து படிச்சிக்கிட்டிருக்காங்க!

******

மகேஷ்: வாழ்க்கையில ரெண்டு விஷயத்துக்கு பயந்தே ஆகணும்!

சுரேஷ்: அதென்ன ரெண்டு விஷயம்?

மகேஷ்: ஒண்ணு எமன் ! ரெண்டாவது உமன்!

******
நிருபர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்களில் கடைசியாக எடுத்த படம்தான் ரொம்பவும் சஸ்பென்ஸானதுன்னு எப்படி சொல்றீங்க?

டைரக்டர் : அந்தப் படத்துல கடைசி வரைக்கும் கதை என்னன்னு டைரக்டர் எனக்கேப் புரியலையே!

***************

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...