Total Pageviews

Tuesday, August 20, 2024

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

 


ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.

ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!

கடுப்பானவர் அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்

மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!

மூன்றாம் நாள்…

காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார்.வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்.

இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார்.

இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய் வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டார்.

இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றார் மனைவி

*அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

🤣🤣🤣🤣🤣🤣🤣

தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...

 


நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...


நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?


நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தான்....


நண்பர் - 2: ?!?.............. 

*******************

ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
 
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை...
 
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல...
 
ஆசிரியர் அடிக்கிறார்...
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது.... 

***************

காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...

காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....

காதலி: ?!?........ 

****************
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" 

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா" 

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு" 
 
******************

டாக்டர், நீங்க [FEES] பீசை குறைக்கணும்!

  


ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்:

 "இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே? " 

வாட்ச்மேன்: "அப்படித்தான் நினைக்கிறேன். இங்குதான் நான் இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. 

உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது"

 ********************

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்! 

*********************

 ஹார்ட் அட்டாக்'னா என்ன?

பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு... 

அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்....... 

*****************

"இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"

"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் 
எழுப்பிவிடலை" 

*************************

"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?" 

"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.." 

********************

"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"

"பெண் அவ்வளவு அழகா?" "இல்லடா... 
 
விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!" 

பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் போய் விடலாம்...
 
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....

பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...

கேர்ள்: ?!?.... 

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்" 

*******************

Saturday, March 25, 2023

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!



 

மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..?


பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!🟢

 

 தகுதியான குடும்ப தலைவியை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....

- கூடை வச்சிருக்க அளவுக்கு உனக்கு தகுதியிருக்கு...

உனக்கெல்லாம் கிடையாது போம்மா.   😂😂

 தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்

 குடும்ப தலைவிக்கான தகுதிகள்

அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும்.  

👩‍🦰 : Next....

சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டுவேலைகளை முடித்துவிட்டு, சுப்ரபாதம் பாடி இறைவனை வணங்கிவிட்டு சமைக்க வேண்டும்.

👩‍🦰 : Next....

வேலைக்கு செல்லும் கணவனுக்கும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அவர்களை பணிக்கு அனுப்பிவிட்டு பிறகு உண்ண வேண்டும்.

👩‍🦰 : Next....

3 வேளை உணவையும் பய பக்தியுடன் சமைத்து கணவனுக்கு வழங்க வேண்டும். ஹோட்டலில் வாங்கவே கூடாது.

👩‍🦰 : Next....

கணவனை தெய்வமாக வணங்க வேண்டும்.

👩‍🦰 : Next....

நாடகம் பார்க்க கூடாது.  மொபைல் நோண்டிக் கொண்டே இருக்கக்கூடாது.

👩‍🦰 : Next....

தனிக்குடித்தனம் போகக் கூடாது.

👩‍🦰 : Next....

கணவன் வீட்டில் தான் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது

👩‍🦰 : Next....

வயதான மாமனார் மாமியார்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் பராமரித்துக் காக்க வேண்டும்.

👩‍🦰 : Next....

கணவன் வீட்டு உறவுகளை தனது உறவாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

👩‍🦰 : Next....

ஊர் கதை பேசக் கூடாது.  அடுத்த வீட்டோடு தன்னை ஒப்பிட்டு கணவனுக்கு மன உளைச்சலைத் தரக் கூடாது.


மனைவிகள் பதில் அடேய் அந்த 1000 ஓவா நீயே வைச்சுக்கோ வேணாம்!

 😁😁😍😍😂😍

 

Thursday, March 9, 2023

உனக்கு ஃபைன் இருக்கு!

 ஹெல்மெட் காமெடி!

 

போலீசார் - உன் செயினை பறிச்சது யாருமா?

பெண் - கருப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார் !

போலீசார் - வண்டியை அவன்தான் ஓட்டினானா?

 

பெண் - இல்ல சார்..

 

 ஒட்டுனவன் பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான் சார்!

 

போலீசார் - சாட்சி யாராவது இருக்காங்களா?


பெண் - சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்தவரு இதை கண்ணால பார்த்தாரு சார் !

 

போலீசார் - இப்படி சொன்னை எப்படிம்மா..


பெண் - பின்னாடி உட்கார்ந்து இருந்த பொண்ணு வெள்ளை நிற ஹெல்மெட் போட்டு இருந்தாங்க சார்!


போலீசார் - அட  போம்மா.. ஹெல்மெட் போடாத ஆளு யாருமே பார்க்கலையா?!


பெண் - நான் மட்டும் தான் சார் ஹெல்மெட் போடல...


போலீசார் - அப்ப உன்னோட லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் எடு..

உனக்கு ஃபைன் இருக்கு!

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...