Total Pageviews

Friday, December 26, 2014

பெயர் கெட்டு போகாம பார்த்துக்கோன்னு சொன்னதாலே !


தாத்தா மாதிரி !


அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !

  பெண்: டாக்டர், என் புருஷன் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார் !.

டாக்டர்: நீங்க ஏன் அவரையே பார்க்கறீங்க?

*****

மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு.

கணவன்: எப்படி சொல்ற?

மனைவி: சர்க்கரை, பால் போடாத என்  காபியை இப்படி புகழ்றாரே!...

******

கணவன்: ஏண்டி!, பூனை பாலையெல்லாம் குடிச்சிட்டு போற வரைக்கும் என்னடி பண்ணிட்டிருந்தே?

மனைவி: இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தேனுங்க!

*****

அப்பா: டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காசை முழுங்கிட்டான்.

டாக்டர்: அப்படியா! அப்ப ஸ்கேன் எடுக்கணும் !.

அப்பா: காசை மட்டும் எடுங்க டாக்டர்.

*****

நபர்: என்ன இது! பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா?!

பிச்சைக்காரன்: வீட்டிலே போய் பிச்சை கேட்டேனுங்க ! அம்மாதான் சொன்னாங்க!

                              அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !

*****

Tuesday, December 2, 2014

புதையல்!என்ன சார்  கிணற்று மேட்டுல உட்கார்ந்து கிட்டு 11..........., 11..................11,............, அரைமணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க !

பக்கத்துல வா !

வந்தேன் ! 

வந்தவரை கிணற்றில் தள்ளி விட்டு விட்டு !  12.......12........ 12...............

கிணற்றில் விழுந்தவர் : அடப்பாவி ! இப்பல புரியுது !


*******************************

மனைவி : இந்த கிணற்றில் ஒரு ருபாய் நாணயம் போட்டு ! கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், வேண்டியது உடனே நிறைவேறும் !

கணவன் : அப்படியா !  உடனே ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட்டு வேண்டுதல் செய்தார் !

மனைவி : ஆவலாக தள்ளுங்க நானும்.......... ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட வந்தவர் தவறி கிணற்றில் விழுந்தார் !

கணவன் : மனைவியிடம் ! என் பிரார்த்தனை  நீ சொன்னபடி உடனடியாக நிறைவேறி விட்டது !

-------------------------------------------

திருடன்: என்னங்க உங்க குடும்ப புதையலை உங்க தாத்தா இந்த கிணத்துல தான் புதைத்து வச்சதா சொன்னீங்க !
 
நானும் 30 அடி வரைக்கும் தோண்டிப்புட்டேன்  ஓண்ணும் கிடைக்கலயே !

உரிமையாளர் : 35 அடியில் தான் எங்க தாத்தா புதையலே வச்சாராம்!கனவுல வந்து சொன்னாரே !

திருடன்:  அய்யோ ! தண்ணி பீச்சி அடிக்குதே !

உரிமையாளர் :   இது தான் எங்க தாத்தா சொன்ன புதையல்!

***********************************

Thursday, November 27, 2014

காது கேட்கவில்லை !

டாக்டர்: நோயாளியிடம்,  ஏம்பா.. எதுக்கு நர்ஸ் கையை தடவி பார்க்கிரற..?

நோயாளி: நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

டாக்டர்: (மைன்ட் வாய்ஸ்ல்) நல்லவேளை இடுப்பில் ஊசியை போட சொல்லலை!!

 இல்லாட்டி  இடுப்பல்ல.. தடவிபார்த்திருப்பான் !

************************

மனைவிக்கு காது கேட்கவில்லை

கணவன் : 10 அடி தொலைவில் நின்றுகொண்டு "சமையலறையில் என்ன செய்கிறாய்" என்று ராமு கேட்கிறார்.     பதில் வரவில்லை.

 மறுபடியும், 5 அடி முன்னே சென்று அதே கேள்வியை கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை.

மனைவியின் மிக அருகே சென்று நின்றுகொண்டு, மீண்டும் அதே கேள்வி.

மனைவி : "சிக்கன் சமைக்கிறேன்ங்க.. இத்தோடு மூன்றாவது முறை சொல்லியாச்சு"     உங்க கா சரி பண்ணுங்க! எத்தனை தடவதான் சொல்வது என்று சலித்துக் கொண்டார் ராமுவின் மனைவி.

*********************
பிரச்சனை

பெண்: என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா உங்க எல்லா துக்கத்திலும் நான் பங்கெடுத்துக்குவேன் !

ஆண்: சந்தோசம்...

ஆனா, எனக்கு இப்போ ஒரு பிரச்சனையும் இல்லையே....

பெண்: நீங்க இன்னும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே... 

கல்யாணம் மட்டும் செஞ்சு பாருங்க! எல்லாமே உங்களூக்கு பிரச்சனைதான் ! 

ஆண்: ஞே ஞே ஞே!!!!!

*********************
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்) அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?"

 என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

 எனக்கு இன்று முதல் விடுதலை கிடைக்குமா!

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

நன்றி
thatstamil.com

Tuesday, November 25, 2014

தேவதை !


நண்பன் 1: என்னோட மனைவி ஆறு மாசமா எங்கூட பேசறதே இல்லை. அவளை விவாகரத்து செய்துடலாம்ன்னு முடிவு செய்திருக்கேன்.

நண்பன் 2: நல்லா யோசிடா மச்சான். இந்த மாதிரி மனைவி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
******

மனைவி: எனக்கு வயசாகிடுச்சு, நான் குண்டாயிருக்கேன், என்னுடைய முகத்துல சுருக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் என்னைப் பாராட்டி நீங்க ஏதாவது சொன்னா எனக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.

கணவன்: இன்னும் உனக்கு கண் நல்லாவே தெரியுது! 
******

கணவன்: டார்லிங், என்னோட ஃபிரெண்டை நம்ம வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்.

மனைவி: என்ன விளையாடறீங்களா? வீடு முழுக்க குப்பை, துணி துவைக்கலை, பாத்திரம் தேய்க்கலை. என்னால சமைக்க முடியாது.

கணவன்: எனக்கு உன்னைப் பத்தியும் நம்ம வீட்டைப் பத்தியும் தெரியாதா! ஆனா அந்த முட்டாள் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான். அதனாலதான் நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன்.
******

நபர் 1: என்னோட மனைவி ஒரு தேவதை தெரியுமா?

நபர் 2: நீ கொடுத்து வைச்சவன். என்னோட மனைவி இன்னும் உயிரோட இருக்கா!
******

தினமும் நள்ளிரவு வரை பணிபுரிபவரிடம்,

மேலாளர்: ஏன் தினமும் இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீங்க?

பணிபுரிபவர்: வீட்டுக்கு சீக்கிரமா யார் வராங்களோ அவங்க சமைக்கணும்னு என்னுடைய மனைவி சொல்லியிருக்கா. அதனாலதான் தினமும் லேட்டா வீட்டுக்கு போறேன்.
******

Monday, November 24, 2014

பொய் கண்டு பிடிக்கும் எந்திரம் !

அது ஒரு பொய் கண்டு பிடிக்கும் எந்திரம்! 

யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும்.

 அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் 

அப்பா. பிறகு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல். 

அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...? 


மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா. 

ரோபோட் - "பளார்" மகன் - இல்லை அப்பா.. நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன். 

அப்பா - என்ன பார்த்தே...? மகன் - குங்பூ பாண்டா ரோபோட் - "பளார்" 

 மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்.. அப்பா - என்னது ஆபாசப் படமா..

 உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?

ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்" 

அம்மா - ஹாஹாஹாஹா.. 

அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.? 

ரோபோட் (அம்மாவுக்கு) "பளார்"

குப்புமி...

பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது? 

விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்!


விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்! 


பயணி: ஞே ஞே ஞே ஞே !!!!
****************
ஒரு ஊரில் குப்புசாமி என்ற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சாகா வரம் பெற வேண்டும் என ஆசை. உடனடியாக கடவுளிடம் வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். 

குப்புசாமியின் தவத்தால் மனம் மகிழ்ந்த கடவுள் அவர் முன்னே தோன்றினார்.

  
கடவுள்: பக்தா என்ன வரம் வேண்டும் கேள்? 

குப்புசாமி: கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது. 


கடவுள்: சரி பக்தா அப்படியே ஆகட்டும். 

 குப்புசாமி ஹேப்பி....................

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது வழியில் ஒருவர் குப்புசாமியிடம் பேச வந்தார்.  

வழிப்போக்கர்: உங்க பேரு என்ன? 

 குப்புசாமி: குப்புமி... குப்புமி... குப்புமி... 

நீதி... பாவம், எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை குப்புசாமிக்கு "சா" வே வரலையாம்... நீதி: கடவுள் நம்மை விட புத்திசாலி

  Thanks to : http://tamil.oneindia.com/jokes/

Friday, November 21, 2014

அப்படி மட்டும் நடந்திருந்தா !மனைவி: ஹூம்... உங்க கையில இருக்கும் மொபைலா பிறந்திருந்தா எப்பவும் உங்க கூடவே இருந்திருப்பேன்.

கணவன்: ஹூம்... அப்படி மட்டும் நடந்திருந்தா, மார்க்கெட்ல புது மாடல்கள் வரும்போது பழசை மாத்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைச்சிருக்குமே!!

*************
கணவன்: அடுத்த ஜென்மம்னு ஒன்னிருந்தா நான் பூனையா பிறக்கணும்னு ஆசைப்படறேன்.
 
மனைவி: பூனையாவா? ஏங்க?
 
கணவன்: பூனையைப் பார்த்தா மட்டும்தானே நீ பயப்படறே?
 

******


ஹன்சிகா மேத்வானி !மனைவி: நான் பேசறது எதையுமே கேட்க மாட்டேங்கிறீங்க. இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடறீங்க. ஏன் இப்படி இருக்கீங்க?

கணவன்: நீ கூடத்தான் நான் சொல்றது எல்லாத்தையும் இரண்டு காதுலேயும் வாங்கிட்டு வாய் வழியா விட்டுடறே. நீ ஏன் இப்படி இருக்கேன்னு நான் என்னைக்காவது கேட்டிருக்கேனா?

*******************

மனைவி: நீங்க எவ்வளவு குண்டாகிட்டீங்க தெரியுமா?

கணவன்: நீ கூடத்தான் குண்டாகிட்ட.

மனைவி: நான் அம்மாவாகப் போறேன். அதனாலதான் குண்டாயிருக்கேன்.

கணவன்: நான் அப்பாவாகப் போறேன். அதனாலதான் நானும் குண்டாகியிருக்கேன்.


********************

தன்னுடைய மடியில் படுத்திருக்கும் கணவனிடம்,

மனைவி: இப்போ உங்களுக்கு எப்படியிருக்கு?

கணவன்: நடிகை ஹன்சிகா மேத்வானி மடியிலே படுத்திருக்கிற மாதிரி இருக்கு!


**************
 ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...