Total Pageviews

Friday, March 20, 2020

பேர் அப்புறம் வைச்சுகலாம்…
ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு

"பாக்ட்டிரியா" படம் வரையுங்கள்..

நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா...

ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்டாயா..... ஆனால் உன் நோட்டில் எதுவுமே

இல்லையே....


நம்ம மாணவன் : ஐயா நீங்கள் தானே சொன்னீர்கள் பாக்ட்டிரியாவை வெறும் கண்களால்

காண முடியாது........நுண்ணோக்கியால்​ மட்டுமே காண முடியும் என்று......அதனால்

தான் உங்களால் அதை காண முடியவில்லை...

ஆசிரியர் : !!! எப்படியேலாம் யோசிக்கிறாங்க..

**********************************************************************************

நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் 
சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு

போட்டிருக்கீங்க.


டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின்

அப்படின்னு எழுதியிருக்கேன்!

**********************************************************************************


கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த

விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.


அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு

பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான

பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் 

கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

**********************************************************************************

அப்பா; என்னடா உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா..?

பையன்; அம்மா ''lipstick'' கேட்டாங்க நான் தெரியாம ''fevistick'' வாங்கி

கொடுத்துட்டேன்பா...

அப்பா; நீ என் மகன் இல்லடா.., என் சாமிடா....!!!!!!

**********************************************************************************

மனைவி:- உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?


கணவன்;- நீதான் வந்த..

மனைவி;- பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா பேசிகிட்டு இருந்த்தீங்களே..

**********************************************************************************

மனைவியை அடிக்கும் ஆண்களுக்கெல்லாம் என்ன தண்டனை தரலாம் மன்னா..?”

“தண்டனையாவது… உடனே அந்த வீரர்களை நம் படையில் சேர்த்துவிடுங்கள்!”

**********************************************************************************

மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?

கணவர்: முதல்ல வை… அப்புறம் பேர் வைச்சுகலாம்…

பழைய வீட்டுக்காரர்..!"

  
நகைச்சுவை தத்துவங்கள் | Comedy Quotes in Tamil
உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்  !
 
ஹா ஹா ஹா எதுக்கு சிரிக்கற?
 
 நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே? 
 
****
 
 ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க? 
 
 போய் ஏசி முன்னாடி உக்காருவேன். 
 
அப்பயும் முடியலேன்னா?
 
 ஏசியை "ஆன்" பண்ணுவேன். 
 
******
 
 காதலன்: எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங் !
 
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்? 
 
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
 
 ****
 
 ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம். அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
 
 MY CROW SOFT 
 
****
 

நடத்துனர்: விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?'' 
 
ஓட்டுனர்: இங்கே மட்டும் என்னவாம்...? 
 
பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். 
 
வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!'' 
 
**** 

 "வாங்க.. வாங்க..! 
 
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? 
 
பொண்ணு வீட்டுக்காரரா..?" 
 
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!" 
 
*****
 

Wednesday, March 4, 2020

அங்கேயும் குரங்கு தானா?

மனைவி: மாமா சொர்க்கத்துல ரெண்டு பேரும் ஒண்ணா இருக்க முடியாதாமே?

கணவன் : அடி லூசு அதுக்குத்தான் அதுக்கு பேரு சொர்க்கம்னு பேர் வச்சிருக்காங்க

மனைவி : மாமா சொர்க்கத்தில் யார் இருப்பாங்க?

கணவன் : சொர்க்கத்துல ரம்பா ஊர்வசி எல்லாரும் நான் போனாமனைவி: மாமா சொர்க்கத்துல ரெண்டு பேரும் ஒண்ணா இருக்க முடியாதாமே?

கணவன் : அடி லூசு அதுக்குத்தான் அதுக்கு பேரு சொர்க்கம்னு பேர் வச்சிருக்காங்க!

மனைவி : மாமா சொர்க்கத்தில் யார் இருப்பாங்க?

கணவன் : சொர்க்கத்துல ரம்பா ஊர்வசி எல்லாரும் நான் போனா வாங்க மாமா மாமு அப்படின்னு சொல்லி வரவேற்பார்கள்

மனைவி : நான் என்ன மாமா பண்ணுவேன்

கணவன் : நீ நரகத்தில் இருப்பே அங்கே பெரிய குரங்கு வந்து உன்ன புடிச்சுக்கும்

மனைவி : போங்க மாமா உங்களுக்கு மட்டும் இங்கேயும் அழகி அங்கேயும் அழகி எனக்கு மட்டும் இங்கேயும் குரங்கு அங்கேயும் குரங்கு தானா?
கணவன் மாமா ! மாமு! அப்படின்னு சொல்லி வரவேற்பார்கள்

மனைவி : நான் என்ன மாமா பண்ணுவேன்

கணவன் : நீ நரகத்தில் இருப்பே அங்கே பெரிய குரங்கு வந்து உன்ன புடிச்சுக்கும்

மனைவி : போங்க மாமா உங்களுக்கு மட்டும் இங்கேயும் அழகி அங்கேயும் அழகி எனக்கு மட்டும் இங்கேயும் குரங்கு அங்கேயும் குரங்கு தானா?

கணவன்: ????????????????????????????????????

முதல் கணவன் !

காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா,  கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? காதலன் ...