Total Pageviews

Thursday, October 31, 2013

என் மனைவி பயந்து நடுங்கறத பார்க்கனும்!
வீட்டுக்காரர்: ஏம்பா வாரம் ஒரு தடவையாவது  என் வீட்டுக்கு வந்து போப்பா!

திருடன் : எதுக்கு!

வீட்டுக்காரர்: என் மனைவி உன்னப்பார்த்து பயந்து நடுங்கறத வாரம் ஒரு முறையாவது பார்க்கனும்!

திருடன்: ??????

-------------------------------------------------

கணவன்: நம்மளை அடி அடின்னு அடிச்சுட்டு, திருடிட்டு போற திருடன் கிட்டே
என்னடி பேச்சு உனக்கு!

மனைவி: உங்கம்மா ஊர்ல இருக்கிறப்ப ஒரு தடை வந்துபோகச்சொன்னேன்!

-----------------------------------------------

 எங்க ஆபீஸ்ல கூட்டி பெருக்க ஒரு ஆள் வேணும்..."

"முன் அனுபவம் இருக்கணுமா?"

"ஏதாவது ஒரு கம்பெனில அஞ்சு வருஷம் குப்பை கொட்டிருந்தா போதும்!"
------------------------------

கணவன் : எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"

மனைவி: "அப்படியாவது நீங்க என்னைப் பார்த்து பல்லைக்காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்...!"

---------

"மாப்ளே, ஒரு பஞ்ச் டயலாக் சொல்லு பார்ப்போம்''

"புலிக்குப் பின்னாடி போன மானும்

ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்

பிழைச்சதா சரித்திரம் இல்லை''
-----------------------

இது தலை தீபாவளி…!
ஜெயில் வாசல்ல எதுக்கு வெடி வெடிக்கறாங்க?

உள்ளே போன தலைவருக்கு இது தலை தீபாவளி…!

------------------------------------

உங்க மனைவிக்கு  இனிமேல் பேச்சே வராது...!

டாக்டர் : இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் உங்க மனைவிக்கு பேச்சே வராது...!"

கணவன் :  நன்றி டாக்டர் !  "நீங்க இவ்வளவு கைராசியானவர்னு முன்னாலயே தெரியாமப் போச்சே டாக்டர்...!"

-----------------------------------------------------------

நகைக்கடைக்காரர்: ஏண்டா உனக்கு என்னா தில் இருந்தா என் கடைல திருடின நகைய என் கடைலயே கொண்டு வந்து விற்பே!

திருடன்: உங்க கடை சீலை பார்த்து எவனும் வாங்க மாட்டேங்கிறான் !

--------------------------

எஸ்.ஐ: ஏன்யா இவரோட லூனாவை திருடினே!

திருடன்: எனக்கு கீயர் வண்டி ஓட்டத்தெரியாதே!

--------------------------

நீதிபதி: பேங்க்ல இருந்து திருடின பணத்தை அதே பேங்க்லயே டிப்பாசிட் பண்ணியிருக்கே,

   ஏன் மறு நாளே வித்ட்ரா பண்ணியிருக்கே ?

திருடன்: பணம் போட அது பாதுகாப்பான இடமில்லேனு கொஞ்சம்லேட்டா ஸ்பார்க் ஆச்சு எஜமான்! அதான்...
-----------------------------------------------

சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்!

என் அம்மாவும் மனைவியும் சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க.

அப்படியா? எங்கே?

என் அம்மா எதிவீட்டுக்காரிகிட்டேயும்,

மனைவி பக்கத்துவீட்டுக்காரிகிட்டேயும்!

------------------------

மனைவி :  வேலை செய்யும்போது இடுப்ப கிள்ளாதீங்கன்னு  எத்தன தடவ சொல்றது?

வேலைக்காரி  : நல்லா சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்!

------------------------------

என்ன,  கட்சி ஆரம்பிக்க சொல்லி உங்க மனைவி நச்சரிகிறாங்களா.. ... ஏன்?

கடந்த ஏழு ஆண்டில் அரசியல் கட்சிகளின் வருமானம்

நாலாயிரம் கோடின்னு செய்தியில சொன்னாங்களாம்!

--------------------------------

என் மாமியார் இறந்துட்டாங்க.

நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?

ஒண்ணும் செய்யவேண்டாம்.

அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.

-------------------------------

ஒரு சொட்டுகூட வைக்கலைடா!எங்கப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடியிலே அழிச்சிட்டார்டா!.

அடப்பாவமே, உனக்கு ஒண்ணும் விட்டுவைக்கலையா?

ஒரு சொட்டுகூட வைக்கலைடா!

------------------------------

டாக்டர் : உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே குரூப் ரத்தமாயிருக்கே சபாஷ்!

கணவன் : பின்னே இருக்காதா டாக்டர்! பத்து வருஷமா அவ என் ரத்தத்தை

உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர் !


-------------------------------------------------

அப்பா,- “ நீ வளர்ந்த பின் யாரைப் போல இருக்க விரும்புகிறாய்?”

பையன் ;” காந்தியைப் போல”

“ வெரி குட், காந்திட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்ன?

“ அதா? அவரு 13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்”””

---------------------

காலைல தூங்கி எழுந்ததும் நான் என் மனைவி முகத்தைப் பார்ப்பேன்!

அவ்வளவு பாசமா?

அதெல்லாமில்லை, நரி முகத்துல விழிச்சா நல்ல நடக்கும்ங்கற நம்பிக்கைதான்!

--------------------------

Wednesday, October 23, 2013

தீபாவளி நகைச்சுவை - 2கொஞ்ச நேரத்துக்கு முன்னால பயங்கர சத்தத்தோட வெடிச்சதே,
அந்த வெடி ஒண்ணு கொடுங்க.. .

யோவ், விளையாடுறியா! அப்ப வெடிச்சது  EB  டிரான்ஸ்ஃபார்மர்*

---------------------------

மனைவி:எனக்கு தீபாவளிக்கு பருத்திப்புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்   வாங்கியிருக்கீங்களே! ஏன் ?

கணவன் : இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.
                  
ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்!

----------------------------

சங்கு சக்கரம் மாதிரி நீ வளைய வளைய வர்றதையும் மத்தாப்பு மாதிரி நீ சிரிக்கிறதையும் பாத்துட்டு, ராக்கெட் வேகத்துல என்னை லவ் பண்றேன்-னு அந்தப் பட்டாசுக் கடைக்காரர் பெண்ணுக்கு லவ் லெட்டர் எழுதினியே.. . என்ன ஆச்சு ?

புஸ்வாணமாதான் *
--------------------------

அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. 

அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?

அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும்  அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறhங்க
---------------------------

என்னப்பா...கம்பி மத்தாப்புல இவ்ளோ பெரிய கம்பியெல்லாம் இருக்குது 

இந்த மத்தாப்பை நீங்க வெடிச்சு முடிச்சவுடனே, கம்பிகளைக் கட்டட வேலைக்குப் பயன்படுத்திக்கலாம். 
----------------------------

பட்டாசுக் கடையிலே கோழி புகுந்துட்டதுக்கு இப்படிப் பதர்றியே ?

புகுந்தது நெருப்புக் கோழியாச்சே!
-----------------------------------

எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?

ஆபீஸ்ல நீங்க நிறைய பேரோட வேலைக்கு வேட்டு வெச்சிருக் கீங்கன்னு கேள்விப்பட்டேன்.
அதனாலதான் ............

-----------------------------

எப்புடிடா உனக்கு தீக்காயம் ஏற்பட்டது ?

ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழை தூறியதால்  வெடி நனையாம இருக்க  பக்கத்துல நின்னு குடை பிடிச்சேன் அதான்!
------------------------

Monday, October 21, 2013

பிரியாணி பட போஸ்டரைஉண்ணாவிரதப் பந்தல்ல தலைவர் ஏன் கடுகடுன்னு
இருக்கார்?

யாரோ பந்தலுக்கு முன்னாடி பிரியாணி பட போஸ்டரை
ஒட்டியிருக்காங்களாம்…


கணவன் என்னடி, பிச்சைக்காரனை வீட்டுக்குள்ளே டீ.வி.
பார்க்கவிட்டிருக்கே?

 மனைவி    பாவம் அந்தக்காலத்துல அவர் தயாரிச்ச படமாம்,  பார்க்க ஆசைப்பட்டார்…!  அதனால்தான் !


----------------------------------------

 
ஆபிசுக்குப் போறப்ப பாக்கெட்ல சீப்பு வச்சிக்கிட்டு போறது
சகஜம்தானே, அதுக்கு ஏன் உன் கணவரை சந்தேகப்படறே..?

தோழி :அவர் எடுத்துக்கிட்டுப் போறது பேன் சீப்பாச்சே…!
 
------------------------------------
 
 
திருடன் : மரியாதையா நகையைக் கொடுக்கறியா? இல்லை கழுத்தை அறுக்கவா?

மருமகள் :அத்தை! அவன் என்ன சொன்னலும் சரி, நகையை மட்டும் கொடுத்துறாதீங்க!
 
 
----------------------------------
 
முதியோர் இல்லத்துக்குப்போன ஹீரோயின் ஏன்
கடுப்பாயிட்டாங்க?
-
நீங்க புது மெம்பரான்னு யாரோ கேட்டுட்டாங்களாம்..!
-----------------------------
 
 
இன்னும் ஒரு மாசத்துல ரிடையர்மென்ட்…அதுக்குள்ளே தப்பு  செய்து மாட்டிக்கிட்டாரு…!
-
என்ன தப்பு செஞ்சிட்டாரு..?
-
பேக்டரியிலிருந்து டிபன் பாக்ஸில் வீ‌ட்டுக்கு தண்ணி கொண்டு வந்து மாட்டிக்கிட்டாரு…!
 
 

‌‌புடவை செலக்சனுக்கு மட்டும் -தீபாவ‌ளி நகைச்சுவை !


நீதிபதி : ஜவுளிகடையில் திருடுவதற்க்கு உன் மனைவியுடன் சென்றாயா!

திருடன் : ஆமாம் யுவர் ஆனார்!

நீதிபதி : உனக்கும் உனது மனைவிக்கும் ஆறு மாத கடுங்காவல் தண்டனை!

திருடன் யுவர் ஹானர், எனது மனைவிக்கும் திருட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!

நீதிபதி : அப்புறம் ஏன் அவளை அவ்விடம் அழைத்துச்சென்றாய்!

திருடன்  நான் எத்தனை கடைகளில் புடவைகளை திருடி கொடுத்தாலும்,
                     டிசைன்  சரிய்ல்லை, பாடர் சரிய்ல்லை, கலர் சரியில்லை என்கிறாள்!
                     அதனால் தான் யுவர் ஆனர் புடவை  செலக்சனுக்கு மட்டும் அவளையும்........................


----------------------------------------------------

மனைவி: என்னங்க தீபாவளிக்கு ஒண்ணுமே எடுக்காம எது கேட்டாலும் சிரிக்கிறீங்களே?

கணவன்: "நான் சிரிச்சா தீபாவளி ஹோய்..."


-------------------------------------------------------------

டே‌ய் எ‌ன் மாமனாரு‌க்கு ரொ‌ம்ப‌த்தா‌ன் குசு‌ம்புடா..

ஏ‌ன்டா..  அ‌ப்படி சொ‌ல்ற?

இந்த தீபாவளிக்கு, நானு‌ம் உ‌ங்க பொ‌ண்ணு‌ம் அலு‌ங்காம, குலு‌ங்காம போற மாதிரி ஒரு வண்டி வாங்கிக் குடுங்களேன்னு சொ‌ன்னது‌க்கு

ரோடு ரோல‌ர் வா‌ங்‌கி வ‌ச்‌சிரு‌க்கே‌ன்னு எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். அனு‌‌ப்‌பி‌யிரு‌க்காருடா.

---------------------------------------------------------

ஏ‌‌ம்பா ‌தீபாவ‌ளி அதுவுமா ந‌ம்ம ‌வீ‌ட்டு தெருவயே மொர‌ச்சு மொர‌ச்சு பா‌ர்‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்க?

இ‌ல்லடா.. போன ‌தீபாவ‌ளி‌க்கு து‌ணி எடு‌க்க போன உ‌ங்க அ‌ம்மா இ‌‌ந்த ‌‌தீபாவ‌ளி‌க்காவது ‌திரு‌ம்‌பி வீ‌ட்டுக்கு வராளா‌ன்னு பா‌ர்‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.

-----------------------------------------------------

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...