Total Pageviews

Saturday, August 25, 2012

தங்க மோதிரம்"யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து..
 

ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."

 "சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு." 


"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
----------------------------


"சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."


 "பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.." 


"நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."
------------------------------
"நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு" "ஏன்.. என்னாச்சு?"


 "கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்... 


கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்"
-----------------------------------

"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"


 "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"


 "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
----------------------------------


"காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?
 

காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.
 

 நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம்.
 

காதலன்: ? ? ? ? ?
----------------------------------

ஹோட்டல் பில்"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."

 "எதனால?" 


"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
----------------------------


"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு வந்தீங்க?....
 

வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?"
 

"அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....."
 

"இவ்வளவு சின்னதாவா நான் வக்கிறேன்?....
 

என்னிக்கு என் முகத்த நிமிந்து பாத்திருக்கீங்க..ம்ஹும்!"
----------------------------------


"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"


 "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
----------------------------
"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு."

 "ஏன்?"
 

"பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."
-------------------------------

மாமியார் மாதிரி"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்..."
 

"அடையாளம் சொல்லுங்க..."
 

"அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"
-----------------------------
"கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால்,
 

 ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.
 

 மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!
-------------------------------------------
அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
 

 "ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."
-----------------------------
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
 

 "பெண் அவ்வளவு அழகா?"
 

"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"
---------------------------------
"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
 

அவ்வளவு பாசமா மனைவி மேல?"
 

"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
------------------------------
உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான்
 

ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"
 

"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
----------------------------

டாக்டர்..


டாக்டர்.. என் கணவருக்கு இப்போ எப்படி இருக்கு?"
 

அவர் கவர்மெண்ட் ஆஃபீஸரா?
 

ஆமாம்" "அப்போ சந்தோஷமான விஷயம்தான்.
கவர்மெண்ட்ல இருந்து நிறைய பணம் உங்களுக்கு வரப்போகுது.
-------------------------------
 

போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"
 

 "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"
------------------------------------------
 

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
 

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது. டாக்டர்: ? ? ? ? ?
----------------------------
 

என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபக மறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."
 

 "இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"
"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!"
---------------------------
 

"பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா,
 மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர்,
 

என்ன செய்யறது?"
 

"ஆபத்துக்குப் பாவமில்லை.. என் ஷூ சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு!"
--------------------------

Saturday, August 11, 2012

நகைச்சுவை கீதை:-எதை நீ படித்தாய் மறப்பதற்கு;

எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;

என்று நீ கல்லுரிக்கு ஒழுங்காக வந்தாய் !

வருகை பதிவு குறையாமல் இருப்பதற்கு;

எந்த பிகர் இன்று உன்னுடையதோ !

அது நாளை மற்றொருவராகிறது !

மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...


Thanks to Baaneerjee!

Wednesday, August 8, 2012

கணவர் சந்தேகப்படுறாருவீட்டுக்காரருக்கு சந்தேகம்

பெண் : என்னோட கணவர் சந்தேகப்படுறாரு டாக்டர் !
டாக்டர் : அப்படின்னா மனநல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க
பெண் : டாக்டர் அவர் சந்தேகப்படுறதே நீங்க, போலி டாக்டரா இருப்பீங்களோன்னுதான்.! ...

சீரியல் பார்த்து தூங்கத்தான்

மகேஷ் : எங்க ஆபிஸ்ல புதுசா டிவி வாங்கியிருக்கோம்
சுரேஷ் : என்ன திடீர்னு?
மகேஷ் : தூக்கம் வராம கஷ்டப்படுறவங்க டி.வி. சீரியல் பார்த்து தூங்கட்டுமேன்னுதான். ...

பெட்ரோலை குடிச்சிட்டார்

பெண் : டாக்டர் என்னோட கணவர் நீங்க குடுத்த டானிக்கை குடிக்கிறதுக்கு பதிலா பெட்ரோலை குடிச்சிட்டார்
டாக்டர் : அப்புறம் என்ன ஆச்சு?
பெண் : நீங்க குடுத்த டானிக்கை வண்டிக்கு ஊத்திட்டார். ...

ஆர்டர் கொடுத்தா வந்திடும்

சுதா : ஹோட்டல் சர்வரை கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு விதத்தில நல்லதா போச்சுடி
மகா : ஏன் அப்படி சொல்றே சுதா : நான் ஆர்டர் செய்தா போதும் உட்கார்ந்திருக்கிற இடத்திற்கே எல்லாமே வந்திடும். ...

வயலின் மேதை

மாலா : உன்னோட கணவர் வயலின் மேதையாமே நல்லா வாசிப்பாரா?
கலா : அட நீ வேற!....
வயலைப் பற்றி ஆராய்ச்சி பண்றதாலே கிராமத்தில விவசாயிகள் அவரை அப்படி கூப்பிடுறாங்க. ...

எல்லாமே மங்கலா தெரியுது

மகேஷ் : கொஞ்ச நாளாவே எனக்கு எல்லாமே மங்கலா தெரியுது
சுரேஷ் : டாக்டரை பார்க்க வேண்டியது தானே?
மகேஷ் : பார்த்தேனே அவரும் மங்கலாத்தான் தெரிஞ்சார். ...

கேள்வி கேட்க கூடாது

அம்மா : இன்னிக்கு உனக்கு இன்டர்வியூதானே ஏன் போகலை
மகன் : நீங்கதானேம்மா நாலு பேர் கேள்வி கேட்கிற மாதிரி நடந்துக்கு கூடாதுன்னு சொன்னீங்க அதான் போகலை. ...

Thanks to One India.com

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...