Total Pageviews

Thursday, October 29, 2020

முதல் கணவன் !

காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, 

கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?

காதலன் : ஏன்னா, நம்ம காதல் தெய்வீக காதல்! அதான்டா செல்லம்!

***********************

கல்லறையின் முன்னால் ஒருவன். "நீ  இறந்து ருக்கவே கூடாது.

நீ  இறந்ததனால் நான் எவ்வளவு கொடிய துன்பங்கள் அனுபவிக்கிறேன் தெரியுமா? 

என் வாழ்க்கையே நரகமாகி விட்டது.!

 நீ சாகாமல் இருந்திருக்கக் கூடாதா?" 

என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தான்!

அங்கு வந்த ஒருவர் அவனைப் பார்த்து இரக்கப் பட்டார். ஆறுதல் சொல்ல நினைத்தார்!

அவனருகே வந்த அவர் "இறந்து போனவர் உன் தந்தையா?" என்று கேட்டார்.

"இல்லை" என்றான் அவன்.

"மகனா?" என்று கேட்டார் அவர்.

"இல்லை" என்றான் அவன்.

வியப்பு அடைந்த அவர், "இறந்து போனவர் உனக்குத் தந்தையும் இல்லை மகனும் இல்லை என்கிறாய்.

எதற்காக இப்படி அழுது புலம்புகிறாய்? அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?" என்று கேட்டார்.

"இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்" என்று 

அழுதுகொண்டே சொன்னான் அவன்!


விஞ்ஞானி !

Comedy Quotes In Tamil | Tamil Funny Quotes | Funny Tamil Quotes Images| Tamil  Comedy Quotes | Tamil Jokes - Wishes Quotes in Tamilமனைவி சண்டையிட்டு சவுண்ட் குடுத்த உடனே...

கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்தறவன் - மனுஷன் !

டிவி.. வால்யூமைக் கூட்டறவன் - பெரிய மனுஷன் !

சட்டையை எடுத்து போட்டுக்கிட்டு வெளிநடப்பு செய்றவன் -- ஞானி!

நைஸ்/சைஸ் பண்ணி மனைவியை கூட்டிகிட்டு வெளியில போறவன் - விஞ்ஞானி !

*******************************

சார்..சார்.. என் பொண்டாட்டிய காணோம்..!

யோவ் இது போஸ்ட் ஆஃபீஸ்!

அய்யோ! அய்யோ!

சந்தோஷத்துல என்ன செய்யுறதுன்னே தெரியல சார்..!

***************************************************************************

மனைவி: டிபன் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு..!

கணவன்: அப்படியே என்னடி அது?

மனைவி: வேணுமா? வேண்டாமா?

**************************************************************************

நிருபர் : கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவ தான்

         உங்க கணவர் கிட்ட நீங்க சண்டை போட்டு இருக்கிங்களா?

         ஆச்சரியமா இருக்கே..?

நடிகை : ஆமா சார் !

நிருபர் : அவர பார்க்கலாமா ?

நடிகை : அந்த சண்டையில வீட்ட விட்டு போனவரு தான் 25 வருஷமாச்சு இன்னும் திரும்பி வரல..!

நிருபர் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

*************************************கறுப்பு குதிரை !

 டாக்டர் : "சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?"

 "எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"

 "நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்."

 "அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"

 "சரி எதனால வலி?"

 "நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!"

 


"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!"

 உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.

 "அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"

 "நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"

 "நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே.. அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது"

 "அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?"

 "வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்"

 அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.

 "பளார்!!"

 எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "எதுக்குய்யா என்னை அடிச்சே" என ஆவேசமாக கேட்டார்.

 "நீங்க ஒரு போலி டாக்டர்.!

நான் முழுங்குனது வெள்ளை குதிரை  !

ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"

டாக்டர் மயங்கி விழுந்தார்.


கொரோனா நகைச்சுவை !

 கொரோனா வைரஸும் மனைவியும் ஓன்னுதான் !

எப்படி சொல்லுறே!

சத்தம் போட்டு, சண்டை போட்டு பலனில்லை!

சோப்பு போட்டு பாரு! நல்ல பலன் கிடைக்கும்!

******

நோயாளி: வணக்கம் டாக்டர். உடம்பு சரியில்லை டாக்டர்.

டாக்டர்: ஆமாம். செக் பண்ணி பாத்ததுல. காய்ச்சல்னு தெரியுது.

நோயாளி: என்ன பண்ணலாம் டாக்டர்.

டாக்டர்: உங்களுக்கு ஒரு ஊசி போடணும். ஆமாம். சாதா ஊசியா? இல்லை ஸ்பெஷல் ஊசியா?

நோயாளி: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் டாக்டர்.

டாக்டர்: ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சிவிடுவாங்க. சாதான்னா கம்பவுண்டர் தேய்ச்சி விடுவாரு.

நோயாளி: ஹி... ஹி... ஹி...

******

உலகத்த நினைச்சேன் சிரிச்சேன்!

 


டேய் ஏன்டா சிரிக்குறே.!

 அண்ணே ! இவங்க நாளைக்கு செவ்வாய் கிரகத்துல கால் வைப்போம்னு சொன்னாங்க!

இன்னைக்கு வீட்டுக்கு வெளியில கூட கால் வைக்க முடியல! 

அத நினைச்சேன்!  சிரிச்சேன் !

*******

என்ன ஒரு காலக்கொடுமை கதிரவா!

போன வருஷம் சும்மா இருந்தேன் !

வேலைவெட்டிக்கு போகாம தண்டச்சோறு தின்னுதுன்னு சொன்னவங்க எல்லாம்....

இந்த கொரனா வந்த அப்புறம்....

என்னைய பாத்து , உன்னய மாதிரி எல்லோரும் இருந்தா மட்டும் தான் இந்த உலகத்தை காப்பாத்த முடியும் பெருமையா சொல்றானுங்க !

என்ன ஒரு காலக்கொடுமை கதிரவா!

*******


ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...