Total Pageviews

Tuesday, July 17, 2012

மாப்பிள்ளை அழைப்பு


ஏன் மாமா வீட்டிற்கு டி.வி. வாங்கலை?
 

பையன் படிப்பு கெட்டுவிடும் அதனால் டி.வி. வாங்கவில்லை.
 

பையன் எங்க மாமா போயிருக்கான்.?
 

பக்கத்து வீட்டிற்கு டி.வி.பார்க்க போயிருக்கான்.
---------------------------------
 

கல்யாண வீட்ல, ரொம்பநேரமா செருப்புகளை உத்து உத்து பார்க்கறீங்கேள, உங்க செருப்பை கானோமோ?
 

ம்ஹும், நல்ல டிசைன் செருப்பா தேடிக் கிட்டிருக்கிறேன
-----------------------------------
 

ஹேலோ அது நான் பார்த்து வெச்சிருக்குற செருப்பு, நீங்க வேற ஏதாச்சும் எடுத்துக்குங்க
 

அடப்பாவி இது என்னோட சொந்த செருப்புய்யா.
-------------------------------

மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!
 

சென்டரல் ஜெயிலில் இருந்து.
--------------------------------------
ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
 

போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்ச!
---------------------------------------

நூறாவது


என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்ச திருடன் கிட்ட இருந்து எனக்கு பார்சல் வந்திருக்கு! 

என்னன்னு!
 

அவன் அடிச்ச நூறாவது, பர்ஸ் என்னோடதாம். அதுக்காக எனக்கு ஸ்வீட் அனுப்பியிருக்கான்.
--------------------------------------
நம்ம கபாலி ரொம்ப சின்சியர்
எப்படி சார்?
நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
--------------------------------------

ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?
நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்!
------------------------------
உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு
 

என்னவாம்?
 

பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டாள்!.
------------------------------------

இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?
 

உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன!
-------------------------------------
திடீரென்று செருப்புக்கடை வச்சிருக்கியே எவ்வளவு மூலதனம் போட்டே?
 

மூலதனம் உழைப்புதான் எதிரே இருக்கிற கல்யாண மண்டபத்தில் 7 வருடம் வாச்மேனாக வேலை பார்த்தேன்.
 -------------------------

அதே தப்பை தான் சார்


ஆசிரியர்: உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?
 

கையை நீட்டு...?
 

நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!
---------------------
 

ஏண்டா லேட்டு...?
 

பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
--------------------------------
ஏண்டா பக்கத்து பையனை பார்த்து பார்த்து பரீட்சை எழுதுற?
 

பரீட்சையை நல்லா பார்த்து பார்த்து எழுதுன்னு எங்க அப்பாதான் சொன்னார் சார்!
------------------------------------------
ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
 

அது வாயில்லா பிராணி சார்.!
----------------------------
 

படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?
 

புத்தகத்தை முடிவிடலாம்னு இருக்கேன் சார் !.
---------------
-----------------

மசாலா படம்


நான் நடிகையா இருக்கிறதாலேயோ என்னேவா, என் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னை பார்த்துப் பயப்படறாங்க.
 

வீட்டுல இருக்கும் போது நீங்க மேக்கப் போட மாட்டீங்களோ என்னேமா.!
---------------------------
படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்?
 

மசாலா படம் ஆசசே!
--------------------------------
 

நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான்.
 

யார் அது?
 

ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன்.
---------------------------------
 

கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு 
சொன்னேனே...! கேட்டீங்களா?
 

ஏன்யா...! என்னாச்சு?
 

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.
-----------------------
 

ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!
 

சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை 
கழுதையாமத்திடறது மாதிரி எடுத்திடலாம்.
----------------------------

தொடாம காதலிங்க


உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.
 

ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.
--------------------------------------
அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு !
 

ஏன்?
 

காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிறாள்!
----------------------------------.
என்ன தொடாம காதலிங்க சுரேஷ் !
 

சரி சுதா கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன!
 

அப்ப சரி !
--------------------------------------
 

முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு. இப்ப ரொம்ப மாறிட்டாரு!
 

இப்படி எப்படி?
 

கடலை காண்பிக்கிறதோட சரி!
________________________________
டார்லிங் நம்ம கல்யாணம்?
 

சுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.
------------------------------------------

நாலாவது பெண் சினேகாதான்.!


வாசகர்: உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?
எழுத்தாளர்: எதுங்க?
வாசகர்: உங்க நாலாவது பெண் சினேகாதான்.!
-----------------------------
அந்த எழுத்தாளர்க்குப் பாராட்டு விழா நடத்தறாங்களே, அவங்க எல்லாம் யாரு?
பழைய பேப்பர் வியாபாரிங்க.
-------------------------------
பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்கேள
அதை ஏன் வெளியிடலை?
அதை வெளியிடறத்துக்கு காசுக்குதான் அலையேறன்.
-------------------------
ஒரு செய்தித் தாளுக்கு வந்த விளம்பரம்
நீங்கள் தற்குறியா எழுதப்படிக்கத் தெரிந்தவரா?
அப்படி இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.
நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.
--------------------------------------
இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை
அப்படியா...! வெரிகுட்.
என் அட்ரஸை எழுதினாத்தானே...!
--------------------------------------

போன மாசம் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்ச


அப்பா தன் குழந்தையிடம் என்ன புக் படிக்கிறாய் என்று கேட்டார்?
 

அதற்கு குழந்தை குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னது.
 

அதற்கு அதை ஏன் நீ படிக்கிறாய் என்றார்?
 

நீங்கள் ஒழுங்காக என்னை வளர்க்கிறீர்களா என்று பார்ப்பதற்க்குத்தான்!
--------------------------------------------
 

அப்பா - ஏண்டா மண்ணு மாதிரி இருக்க?
 

மகன் - கற்றது கை மண் அளவு அப்பா !
-------------------------
 

என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்.

ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க.
 

செகண்ட் கிளாஸ்தான்...!
------------------------------------
 

திடீரென்று உங்க பையன் ஊமையாயிட்டானே
 

என்னாச்சு?
 

போன மாசம் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்ச
----------------------------------
 

தோல்வியை கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் 
பண்ணினது தப்பாய் போச்சு?
 

ஏன்?
 

டுட்டோரியல் காலேஜ்பீஸுக்கு பணத்தை ரெடிபண்ணி வைங்கன்னு சொல்லிவிட்டு பரீட்சைக்குப் போறான

சரி, டா டி !இந்த பரீட்சையில பாஸ் ஆயிடுவியாடா?
 

எதிர் பெஞ்ச் சுரேஷ், பக்கத்து பெஞ்ச் ரமேஷ் இரண்டு பேரும் பாஸாயிட்டா, நானும் பாஸ் தாம்பா...!
-------------------------------

மகனிடம் தந்தை யாரிடம் பேசினாலும் டி,.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?
 

மகன் சரி, டா டி
----------------------------------
 

ஏன்டா காலேஜுக்கு போகலை?
 

இன்னிக்கு காலேஜு லீவ்!
 

உனக்கா, காலேஜுக்கா?
 

எதிர்வீட்டு பத்மாவுக்கு!
---------------------

ஏன் உங்க பையன் படுத்துகிட்டு சாப்பிடுகிறான்?
 

வேலைவெட்டி போகாம உட்கார்ந்துகிட்டு சாப்பிடுறியே வெட்கமா இல்லையான்னு கேட்டேன்.
 

அதான் படுத்துகிட்டு சாப்பிடுகிறான் !

------------------------------
என் பையன் செய்த காரியத்தால் என்னால் தலையை வெளியில் காட்ட முடியவில்லை?
 

ஏன்?
 

என் விக்கை அவன் எடுத்து போட்டுப் போய்விட்டான்.
--------------------------

பியூன் எழுப்ப மறந்துட்டான்.


5 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுவீங்களே 7 மணிக்கு வர்றீங்களே ரொம்ப வேலையா? 

ஊஹும் பியூன் எழுப்ப மறந்துட்டான்.
----------------------------------
என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
 

எப்படிச் சொல்றே
 

பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.
------------------------------------------
ஆபீஸ்க்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?
 

என் குழந்தைகளோட தூங்கிதான் எனக்கு பழக்கம் சார்...!
------------------------------------------

ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
 

கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.
---------------------------------------
 

உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?
 

வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!
-----------------------------------

ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்.


டீ குடிச்சதும் டம்ளரை கழுவறீங்க?
 

டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதி ரி தான் சார்...!
--------------------------------------------
அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு கொண்டு போய் சாப்பிடுகிறார்?
 

ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்.
----------------------------------

உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
 

என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!
----------------------------------------
தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!
 

எப்படி?
 

ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!
--------------------------------

ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா


அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?
டீ கடையில் டீ ஆற்றுபவர்.
-------------------------------

ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்.
---------------------------
நான் எப்பவும் சீப்பாதான் வியாபாரம் பண்ணுவேன்.
எப்படி கட்டுபடியாகும்?
கட்டுபிடியாகுங்க வாழைப்பழத்தை சீப்பாதானே கொடுத்தாகணும
---------------------------------------
ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.
ஏன்.
எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்.
--------------------------------------------

Monday, July 16, 2012

மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'


அந்த டைரக்டர் படத்தோட கதையை ரொம்ப ரகசியமா
வெச்சிருப்பாராமே ?'
 

'ஆமாம் ! படத்துலகூட காட்டமாட்டார் !'
--------------------------------------------------------------------------------------------------
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
 

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'
 

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு திருமணம்   வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா?

 அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'
 

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
 

'??????'
---------------------------------------

எப்படித்தான் பழி வாங்கறதுஎதுக்கு நீங்களே ஒரு ஆளை செட் பண்ணி ’உங்க படத்தோட
கதை என்னோடது’ன்னு கேஸ் போட வெச்சிருக்கீங்க ?'
 

அப்பதானே படத்துல கதை இருக்குன்னு ஜனங்க நம்புவாங்க !'
--------------------------------------------------------------------------------------------------
உங்க பாட்டில் ரெட்டை அர்த்தம் இருக்கே?'
 

'தேவலாமே... எவ்வள்வோ பேர் அர்த்தமே இல்லா பாட்டு எழுதலியா?'
-------------------------------------------------
ஒரு வேளை நா‌ன் இ‌ந்த ஆபரேஷ‌ன்ல செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.
 

என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?
 

என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடு‌த்த அந்த மேனேஜரை நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு.
-----------------------------------------

உங்க ந்ர்ஸ் பெயர் தான்உங்க புணைப்பெயர் கீதாப்பிரியாங்கிறிங்களே
கீதா ங்கிறது உங்க மனைவி பெயரா?'
'இல்லை,  உங்க ந்ர்ஸ் பெயர் தான் டாக்டர்!'
-------------------------------------------
என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
நேத்துதான் தெரிஞ்சது !
'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'
'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன்
-------------------------------------------
அந்தப் பல் டாக்டர் வீட்ல
ஏன் ரெய்டு நடக்குது ?'
'வருமானத்துக்கு அதிகமா
’சொத்தை சேர்த்துட்டாராம்
------------------------------------
தொடர்ந்து தாதா கேரக்டர்ல நடிச்சது
தப்பாப்போச்சா, ஏன் சார் ?'
'போலீஸ்காரங்க என்கவுன்ட்டர்ல
என்னைப் போடுத் தள்ளிடுவாங்களோன்னு
பயமா இருக்கு !

கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே


ஜெயிலில்........

'சாப்பிடும்போது ஏம்பா சிரிக்கறே?'

'சிக்கன் செய்து தரலைன்னு மனைவியை அடிச்சேன்...
இப்ப வாரம் ரெண்டு தடவை சிக்கன் கிடைக்குது
--------------------------------------
தலைவருக்கு இன்ஃபீரியாரிட்டி
காம்ப்ளெக்ஸ் அதிகமா ?
சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதிகமா ?
'எனக்குத் தெரிஞ்சு, அவருக்கு
சாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் அதிகம் !'
----------------------------------------
ஜெயில்ல நடந்த விழாவுல கலந்துக்கப்போன தலைவர் மானத்தை வாங்கிட்டாராமே ?'
'ஆமாம், பழக்கதோசத்தல தரையில உட்கார்ந்துட்டார் !'
------------------------------------------------------------------------------
தலைவரே உங்க சொத்து விவரத்தை
ஏன் வெளியிட மாட்டேங்கிறீங்க ?'
அப்புறம் என்னை வெளியில விடமாட்டாங்க !
-----------------------------------------------
ஆப்ரேசன் தியேட்டலேர்ந்து பேசன்ட் ஏன் பயந்து ஒட்றாரு?..'
'ஆப்ரேசன் தியேட்டர் உள்ளே ’கடமையை செய் பலனை
எதிர் பார்க்காதே’ அப்படின்னு எழுதி வச்சிருக்கராம்

தலைவர் பழசை மறக்காதவர்'எங்கம்மாவுக்கு மூச்சுவிட

ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !'

'அவ்வளவு சிரமப்பட்டு

எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !'
----------------------------------------------------------
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை
என்று அறிவித்து விடலாமா அரசே?'

'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்
----------------------------------------
அரசியல்வாதியைக் கட்டியிருக்கக்கூடாது !'

'ஏன்?'

'சின்ன பிரச்னை வந்தா கூட வீட்டு வாசல்ல என் கொடும்பாவி
கொளுத்தறார் !'
-----------------------------------------------------------------------------------------------
தலைவருக்கு ரொம்பவும் தான் ஈகோ !'

'என்னவாம்?'

'அவரோட சிலைக்கு கூட தினசரி ஒரு பொன்னாடை போர்த்தச் சொல்றார் !
-----------------------------------
பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு

குடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு?

'தலைவர் பழசை மறக்காதவர்'
----------------------------------------------

பேரழகன்


நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?
எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல டாக்டர் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லிட்டார் !
----------------------------------
பையன் சூர்யா மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி
கல்யாணத்துக்கு சம்மதிச்சது தப்பா போச்சுடீ'

'என்னாச்சு டீ...'

'பேரழகன் சூர்யா மாதிரி இருக்கான்டி
------------------------------------------
போஸ்ட் மேனை காதலிச்சது தப்பாபோச்சுடி..

ஏன் என்னாச்சு..?

ரெஜிஸ்டர் கல்யாணம்தான் பண்ணிக்கனும்னு
அடம்பிடிக்கிறார்..
-----------------------------------
ஒரு நாள் கண்ணகியும் கோவலனும் பஸ்ல போயிட்டு இருந்தங்களாம் .
அவங்க ஸ்டாப் வந்த உடன கோவலன் இற்ங்கிட்டானாம் .
 கண்ணகி மட்டும் இற்ங்கவேமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தாங்கலாம் ஏன் ?
கண்ணகி படி தாண்டாத பத்தினி ஆச்சே ! அதனால் தான் இறங்கலே

------------------------------------------
ஒரு அண்ணனும் தங்கச்சியும் ஓடி வர்றாங்க.
அண்ணன் மேல்மூச்சு  (MALE)  வாங்கறான்.
 தங்கச்சி?
அவ Female மூச்சு வாங்குவா.
----------------------------------------------------

மிரட்டல் கடிதம்அந்த நடிகை தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு டாக்டராகவோ அல்லது
வக்கீலாகவோ நெனைச்சுட்டேதான்  நடிப்பாங்களாம்...!'
'ஆமாம் ! டாக்டர்கிட்டேயும். வக்கீல்கிட்டேயும் எதையும்
மூடி மறைக்கக் கூடாதே !'
-----------------------------------------
ஒருவர் :- நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?

மற்றவர் :- 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்
------------------------------------------------
டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.....

காட்டுங்க உங்க பர்ஸை !'
---------------------------------------------------------------------------------------------------------------
மூக்குல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணச் சொன்னா,

எலாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டீங்களே டாக்டர் !'

'என்ன மேடம் சொல்றீங்க ?'

'இழுத்தா.. ஒரு மீட்டர் நீளத்துக்கு வருது பாருங்க !'
--------------------------------------
மருமகள்: ஐயா! எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு?

போலிஸ்: யாரிடம் இருந்து?

மருமகள்:என் மாமியாரிடமிருந்து! உடனே கிளம்பி என் வீட்டுக்கு வ‌ராங்களாம்!
-----------------------------------

எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது


ஓருவர்:  நான் வேலைக்காரியோட சிரிச்சுப் பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !'

மற்றொருவர்: இது பரவாயில்லையே !    என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா

எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !'
------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !'

'ஏன்... கட்டின புடவையோட வந்தா போதும்னு சொல்லிட்டானா ?'

'அட, கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
------------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம காதல் புனிதமானது சிவா !'

'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப் புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
------------------------------------------------------------------------------------------------------------------------
ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'

'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'
---------------------------------------------------------------------------------------------------------------
'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'

'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'
---------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு தலைவலி இருக்கா ?

இருக்கு டாக்டர் ! எப்ப இருந்து ?
என் கல்யாணத்துல இருந்து,
 ---------------------------------------------------------------------------------------------------------------

கமலா, கிருத்திகா, சரிகா, காயத்ரி..


காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு? 

காதலன்: என்ன பேசற நீ?
 

கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன்  என்னை உதைக்க மாட்டானா?
------------------------
டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கோயில்ல நேத்து பிரார்த்தனை பண்ணிகிட்டேன் பலிக்குமா?'
 

'ஜம்பது சதவிகிதம் பளிச்சிடுச்சி!  வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க!
--------------------------------------
ஜோசியர்:    தம்பி, நீ விரும்புற பெண்ணே உனக்கு மனைவியா அமைவா! 
 

தம்பி :சரி,  'கமலா, கிருத்திகா, சரிகா, காயத்ரி..இவங்கள்ல யாருன்னு குறிப்பா சொல்ல முடியுமா ஜோசியரே...?'
------------------------------------
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !

டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா?
--------------------------------------
நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல  யாருக்குமே விருப்பமில்லை !'

'உனக்கு ?'

'இதென்ன கேள்வி.. நானும் எங்க வீட்லதானே இருக்கேன்
---------------------------------------------

வரிசையில் போய் நில்லுங்கள்


ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார்.


 அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,

அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். 

இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

 நாய் வைத்திருந்தவரை அணுகி, "இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த  அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?" 

"முதலில் செல்வது எனது மனைவி."
 

"என்ன ஆயிற்று அவருக்கு?"
 

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"
 

"இரண்டாவது பிணம்?"
 

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற 

அவரையும் கொன்றுவிட்டது"
 

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"
 

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்

Saturday, July 14, 2012

கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!
-------------------------------------


ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு

கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்
---------------------------------------

அப்பா : என்னம்மா சமையல் இது.

சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா.

இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா
எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்.
--------------------------------------

தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே.எப்படி?

காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !!!
----------------------------
போலீஸ் அடிச்ச அடியிலே

அவருக்கு பேச்சே வரலை ஏன்?

அடிச்ச அடியில் அவருக்கு ஊமைக்காயம் ஏற்பட்டுச்சாம்
--------------------------

கத்தி எடுத்து குத்தினதும் ரத்தம் ஏன் வேகமா வெளியவருதுன்னு தெரியுமா?

யாரு குத்தியதுன்னு பார்க்க வேகமா வெளியேவருது

-------------------------------
எஜூகேஷன் லோன் போட்டு படிக்கிற உங்க பையன்

இப்ப எப்படி படிக்கிறான்

கடனேன்னு படிக்கிறான்

அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?கணவன்:அன்பே,உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா,கோவில் எழுப்பவா?
 

மனைவி:நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுப்புங்கள்.ஆனால்
தூங்கும் போது மட்டும் எழுப்பாதீங்க.
**********
இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.
 

ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.
 

மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது!
************
''அடடா,உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன்,கமலா''
'சரி,அதனாலென்ன?'
 

''எங்க அம்மா ஒரு சதிகாரி,மோசக்காரி,கூனி.....''
 

'இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க?'
'

'அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே!''
************
டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
 

நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி.
**************
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
 

மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
**********
''ஆபீசுக்கு குடிச்சிட்டு போதையில் போனது தப்பாப் போச்சு.''
'

ஏன்?என்ன ஆயிற்று?''
 

''இப்ப என்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க.''
********

ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்


ஒருவன்: என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு..?
மற்றவன்: ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்
-----------------------------

ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
---------------------------------------
ஒருவன்: எங்களுக்கு இரண்டு வீடு, பத்து ஏக்கர் நிலம், கார் எல்லாம் இருக்குடா.
மற்றவன்: அப்புறம் ஏண்டா இப்படி கஷ்டப்படற.

ஒருவன்: அதெல்லாம் அடமானத்துல இருக்கு.
*********
"வீட்டுக்காரர்: என்னோட வீட்டுல நிறைய காலியா இருக்கு. உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அங்க குடியேறலாம்.
மற்றவன்: உங்க பொண்ணு மனசு காலியாக இருக்கா?

*********
ஒருவன்: உன் பேரு கருப்புசாமிதானே... உன் மனைவி உன்னைய கரும்புன்னு கூப்பிடுறாங்களே...
மற்றவன்: என்னைய சக்கையா பிழிஞ்சு எடுக்கத்தான் அவ அப்படி கூப்பிடுவாரு"
*********
மகன்: அப்பா அம்மாவும் கரண்ட்டும் ஒண்ணுன்னு சொல்றீங்க... ஆனால் வித்தியாசமிருக்குன்னு சொல்றீங்க...
அப்பா: கரண்ட் தொட்டால் ஷாக்கடிக்கும். உங்க அம்மா பேரைக் கேட்டாலே ஷாக்கடிக்கும்.
*********
ஒருவன்: கூட்டத்தில உன் மனைவி பேரைச் சுருக்கிச் செல்லமாக் கூப்பிட்டதுக்கு அங்கிருந்தவங்க எல்லோரும் ஓடிட்டாங்களா....?
மற்றவன்: ஆமாம். பாமாங்கிற அவ பெயரை பாம், பாம்னு சொல்லிக் கூப்பிட்டேன்.

*************
ஆசிரியர்: மூன்றையும், மூன்றையும் கூட்டினால் ஆறு வரும். புரியுதா?
மாணவன்: காவேரியா, வைகையா சார்?
****************

Tuesday, July 10, 2012

கிரைண்டர்ல அரிசியைப் போடுங்க!


சின்ன மாத்திரை."

என்னோட ஞாபக மறதியைப் போக்க, பெரிய மாத்திரை கொடுத்தீங்க, சரி, எதுக்கு டாக்டர் இந்தச் சின்ன மாத்திரை?"

"பெரிய மாத்திரையை ஞாபகமாக போட்டுக்கத்தான்,
 இந்தச் சின்ன மாத்திரை."
 ----------------------------------

குற்றப்பத்திரிகை


"நம்ம தலைவரு, வக்கீல்கிட்டே என்ன கேட்டுக்கிட்டு இருக்காரு?"

"குற்றப்பத்திரிகைக்கு ஆயுள் சந்தா உண்டான்னு கேட்டுக்கிட்டு இருக்காரு!"
 -----------------------------------------------------

எங்கப்பா மிரட்டறாரு."

ரமேஷ் எனக்கு நீச்சல் கத்துக்கொடுங்க."

"எதுக்கு டார்லிங்?"

"என்னை உங்களுக்குக் கட்டி வைக்கிறதுக்குப் பதிலா, பாழுங்கிணத்துல என்னைத் தள்ளிவிட்டுடுவேன்னு எங்கப்பா மிரட்டறாரு."
----------------------------------------------------

வேண்டாத பொருள்

"எதுக்கு சார் பரண் மேலே உட்கார்ந்துகிட்டிருக்கீங்க?"

"வேண்டாத பொருளை எல்லாம் பரண் மேலே தூக்கி வைச்சுடுன்னு என் பொண்டாட்டிகிட்டே தெரியாத்தனமா சொல்லிட்டேன்! முதல்ல என்னைத் தூக்கி வைச்சுட்டா!"
----------------------------------------------

பில் போடலாமா?

சர்வர்: சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?

சாப்பிட்டவர்: வேண்டாம், கிரைண்டர்ல அரிசியைப் போடுங்க!

Saturday, July 7, 2012

நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்.


மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்?
 

டாக்டர் மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம். ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான
--------------------------------------------

ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?
 

மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க சொ ன்னாருங்க அதான்.
-------------------------------------------

டாக்டர் நீங்க இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பி ச்சு ஓடிட்டார்.
 

சரி பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்.
-----------------------------------------------

டாக்டர்: இன்னிக்கு உங்களுக்கு ஆப்ரேஷன்
நோயாளி: போங்க டாக்டர் இன்னிக்தான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க.
                        இப்படி சொல்லி என்னை கஷ்டப்படுத்திறீங்க.
---------------------------------------------
டாக்டர் நான் செத்து போய்விடுவேனா டாக்டர்,
இல்லை...! இல்லை...! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக்கு ஒன்பது பேர்தான்  சாவாங்க...! நீங்கபொழச்சிப்பீங்க! ஏன்னா ஏற்க்கனவே 9 பேர்  போய் சேர்ந்துட்டாங்க.
-----------------------------------------
ஆஹா, நான் பிழைச்சுட்டேன் ஆப்ரேஷன் சக்ஸஸ்.
 

யோவ் கத்தாத இது எமலோகம்.
-----------------------------------------
ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்!
எது?
 

நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது!
--------------------------------------------
உங்களுக்கு அல்சராமே?
 

அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?
------------------------------------------
இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
அப்படியா ...! எப்படி...!
 

இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!
--------------------------------

பேய்க் கதைதான்


உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே?
யார் சொன்னா?
 

என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!
----------------------------------------
 

என் கணவருக்கு சர்க்கரை வியாதி இருக்குமோன்னு பயமா இருக்கு.
ஏன்?
 

அவரை சுத்தி எப்பவும் எறும்பு மொய்க்குது.
--------------------------------------
 

ஓட்டப் பந்தயத்துலு எப்படி சார்  தங்கபதக்கம் வாங்கினீங்க?
அதன் ரகசியம் சொல்லுங்க, இதற்கு யார் காரணம்?
 

என் மனைவிதான் தினமும் என்னை துரத்தி துரத்தி அடிக்க ஓடி வருவா
இப்படி ஓடி ஓடி பழக்கப்பட்டு முதல் பரிசு வாங்கிட்டேன்.
--------------------------------
 

திருமணமானவர்களையே ஏன் சேல்ஸ் மேனாக வைத்திருக்கிறீர்கள்?
 

அவர்கள் தான் மகிழ்ச்சியுடன் வெளியூர் செல்கிறார்கள்!
----------------------------------------
 

என் மனைவி தன் கையாலேயே எனக்கு பரிமாறுவாள்!
 

கொடுத்துவைத்தவண்டா  நீ
 

ம்ஹும் சமையல் மட்டும் என்னை செய்ய சொல்கிறாளே!
----------------------------------------
 

என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியனும் !
 

மகனே, அது முடியாமத்தானே நானே சாமியாராகிடேன்.
--------------------------------------
 

என்னங்க மாப்பிள்ளை, உடம்புபூரா ஒரே தழும்பா இருக்கு?
 

நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்ன
---------------------------
 

ஒருத்தி: உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா?
 

மற்றொருத்தி: சே,சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...
                            அப்பப்ப அடிக்கறதோடு சரி!
-------------------------------
 

உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க?
 

என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.
-----------------------------------
உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
 

ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
--------------------------------
 

உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை?
 

பேய்க் கதைதான்...!

Friday, July 6, 2012

நெஞ்சுல ஈரேமே இல்லைனு


தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல். என்னவாம்?
 

எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!
-------------------------------
தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்?
 

அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.
----------------------------------------------
தலைவர் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுறாரே, ஏன்?
 

கறை படியாத கை என்று மக்களுக்கு காட்டனுமே.
-------------------------------------------------------------
நடை பயணத்தை ஒரே நாளில் ரத்து செய்து விட்டீர்கேள, ஏன் தலைவரே?
 

ஒத்தையிலே நடந்து போக பயமா இருந்துச்சு அதான்.
-----------------------------------------------------------
மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?
 

போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்ச நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.
-------------------------------------------------------------
எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
 

எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேமே இல்லைனு சொல்றாங்களாம
------------------------------------------------------------
Thanks online tamil.com

மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி


ஓருவர்: வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...!      என்ன தப்பு செஞ்சீங்க?
 

மற்றவர் : நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!
-------------------------------
திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!
 

போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!
--------------------------------------------
ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
 

தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!
--------------------------------
சிறைச்சாலைக்குள் ஒரு புதிய கைதி தள்ளப்பட்டான். அவனிடம் அங்கிருந்த பழைய கைதி என்ன குற்றத்திற்காக நீ சிறைக்கு வந்தாய் என்று கேட்டான்.
 

கைதி - நான் ஒருவருடைய தோட்டத்திலிருந்து கயிறு ஒன்றை என் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தேன்.
 

ப.கைதி - கயிறு திருடியதற்காகவா உனக்கு சிறைத் தண்டனை தரப்பட்டது?
கைதி - அந்த கயிற்றின் மறுமுனையில் ஒரு பசு  மாடு  மட்டும்  தனது கழுத்தை  நுலைத்திருந்தது.
--------------------------------

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...