ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொன்னார்.
இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர்.
கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.
ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?
சேலத்துல் 3 குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரோடுல 6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரா இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.
ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு
சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை
ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.
பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!
எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக்கும்.
சாப்பிட முடியாத மீன் எது?
விண்மீன்