Total Pageviews

Thursday, January 22, 2015

மருந்து சீட்டு - prescriptionமனைவி : "என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?"

கணவன் :அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!"

*************************

நிருபர் : மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?''

'வாசகர்: அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!''

**************************

 மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற.....

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் "சாதிக்"-ஐ விரும்பறேன்....... 

*************************

ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?

ஏன் .. என்னாச்சு..?

சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________

ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்..

அய்யா சயனைட் இருக்கா..?

என்ன..? சயனைடா.. எதுக்கு..?

என் கணவனை கொல்லுவதற்கு..

அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்..

இதைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில் அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கிறார்கள்)

ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா வாங்கிட்டு போ..!

Monday, January 12, 2015

மரியாதை !ஓனர் : "வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

குடியிருப்பவர்:  "சம்பளம் கைக்கு வந்ததும்..." 

ஓனர் :"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

குடியிருப்பவர்:"கேனத்தனமா கேக்காதீங்க... சார்,  நான் வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

ஓனர் : அடப்பாவி !

____________________


பேராசிரியர் : "ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

மாணவர் : "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் !  ஓரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு ! அதான்.......!

____________________

"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏண்டா?" 

என் மனைவி சொன்னா எங்க அம்மா, "கேரட் அல்வான்னா உயிரையே விட்டுடுவாங்கன்னு. அதான்..... !

------------------------------------

கல்யாணத்திற்க்கு வந்தவர் : "என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே இருக்கு?"

மாமனார் : "ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப் பிடிக்குமாம்.. அதான்..!"

__________________________

கண்டக்டர் : படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா... 

மாணவர்கள்: ஏன் சார் இதே தொல்லையா போச்சே!. 

கண்டக்டர்  பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும்,  பஸ் நம்ம மேல ஏறினாலும் 'டிக்கெட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?... அதான்.... !

_______________________

Thursday, January 8, 2015

டிக்கெட்டு!

நண்பர் 1  : ஏண்டா மாப்பிளை, உன் மனைவி காட்டு கத்தா கத்துறா ?

நண்பர் 2 : அவ  போட்டோவ (What'sup, facebook) போடுறேன் சொல்லிட்டு, OLX  போட்டா கத்த மாட்டாளா !

--------------------------------

நண்பர் 1  : திருவள்ளுவர் இரண்டடி குறள் விளக்கத்தை 

என் மனைவி ஓரே அடி யில் அடிச்சு புரிய வச்சுடுவாகடா !
_______________________


பரிசோதகர் : கல்லூரி மாணவரிடம், உன் டிக்கெட் எங்கப்பா?

மாணவன் :  நான்  கொஞ்சம் லேட்டு, என் டிக்கெட் போன பஸ்லேயே போயிருச்சு சார் !
______________________

 கண்டக்டர் : நீ எங்கப்பா போகனும் !

மாணவர் : என் டிக்கெட் இருக்குற இடத்துக்கு போகனும் !

கண்டக்டர் : டிக்கெட் வாங்கிட்டுப் போப்பா !

மாணவர் : எனக்கும் சேர்த்து அந்த டிக்கெட்டு!  டிக்கெட்டு வாங்கிறுச்சு சார் !
______________________

மகன் : அப்பா,  உலகில் ஆக்ஸிஜன் இருப்பது 1773 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது !

அப்பா  : கடவுளுக்கு நன்றி ! நல்ல வேளைடா மகனே!  நான் 1973 ஆம் ஆண்டு தான் பிறந்தேன்!

------------------------------

Wednesday, January 7, 2015

உனக்கு என்ன தகுதி இருக்கு..? மனைவி:"ஏன் இப்படி பேயடிச்சமாதிரி இருக்கிறீங்க?"

கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே அடிச்சே !
____________________________

டாக்டர் : என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?

நோயாளி: இனிமே 'அடிக்கவே மாட்டேனு' என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணிட்டா! டாக்டர் !
-----------------------------------------------"செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"

"அயர்ந்து தூங்கும் போது கூட, சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுடுவேன் சார்!"
_________________________

வாணி: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் 'குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே... ஏன்?

ராணி: அங்க போறது  தூங்கத்தானே !
_________________________

நம்ம அப்பா முட்டாளாம்மா?"

"எதுக்குடா இப்படி கேட்கிறே?"

"எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே"
__________________________


 ராப்பிச்சை : ஐயா, சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. ஏதாவது சாப்பாடு போடுங்க!
 .
வீட்டுக்காரர் : ஒரு அஞ்சு நிமிஷம் இரு...

ராப்பிச்சை :  சரிங்க சாமி ...

வீட்டுக்காரர் : இப்ப நான் சாப்பிடப் போறேன்... பார்த்துட்டுப் போய்டு !
__________________________


நீதிபதி : "வாடகைக்கு குடியிருந்த வீட்டை எதற்கு இடித்தாய்?"

குற்றவாளி: "வீட்டு ஓனர்தான் விடியுறதுக்குள்ள வீட்டைக் `காலி`பண்ணுனு சொன்னார் யுவர் ஆனர்"
____________________________

Friday, January 2, 2015

சிரித்து............ சிரித்து !
டேய், நான் திருடன்... மரியாதையா எடுடா 
பர்ஸை ...............

டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடுடா மாமூலை ...........

-------------------------

டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?

உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..... அதான் !
---------------------------

மனைவி:- நேற்று நான் பார்த்தது முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.

சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.

கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்!

மனைவி:- ஏன் ?

கணவன்:-  மீதி உயிர் போக வேண்டாமா ?

___________________________

நாய்க்கு ஹார்லிக்ஸ் !

சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

எடுக்கறவங்க அழுதா அது சினிமா ! 


பாக்கறவங்க அழுதா அது சீரியல் !

------------------------------

கணவன்:  நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்

மனைவி: அப்புறம் ?

கணவன் : களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது.

சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...

----------------------------------

உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?

அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு

-------------------------

"திடீர்னு என் மாமியாருக்கு வலிப்பு வந்துடுச்சு.."

"உடனே சாவிக்கொத்தைக் கையில கொடுத்துட்டியா?"

"அவ்வளவு மடச்சியா நான்.. சூடா இருந்த இரும்புக் கரண்டியைக் கொடுத்துட்டேன்"

---------------------------------

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? 

நாய்கூட இதை குடிக்காதுடி............

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

----------------------------------

வேலைக்காரி மட்டும்..........

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல!  டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

_____________________


"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"

"பெண் அவ்வளவு அழகா?"

 "இல்லடா... மாப்பிள, விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

______________________

நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுக்கிறா...

நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?

நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தாண்டா மச்சான்....................

நண்பர் - 2: ?!?..............

_____________________


டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"

டாக்டர் : "ஏன் என்னாச்சு?"

"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!" அதான்!

--------------------------------------

மனைவி: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"

கணவன்: "நீங்க ரெண்டு பேருமே கிள்ம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."

----------------------------------

போலி டாக்டர் !
டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?

ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

____________________

காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...

காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....

காதலி: ?!?........ ?.........

___________________

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்;
                    இனிப்பைக்  குறைக்கணும்; 
                    காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"

_____________________

ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,  அவங்களுக்கு காட்டத்தான்"

______________________

தொழிலுக்குப் போலாங்களா?
ஓருவர் : நானும் பாத்துக்கிட்டு வரேன் மதுரையிலிருந்து சென்னை வர்றீங்க!

 எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா டிக்கெட் வாங்கிற வேண்டியதுதானே !

மற்றவர்: டாக்டர் என்னை லாங் ஜர்னி பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்லா அதான்......?!?!
------------------------------------
மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க !

கணவன் : எதற்க்காக ?

மனைவி : கேஸ் ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சிடப் போகுது....

கணவன் : கவலையே படாதே  கண்ணு ! அதற்க்காகத்தான் குழாய மூடாம வந்துருக்கேன்ல்ல.....

மனைவி : ........................?!
----------------------------------

போலிஸ் : டெய்லி ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?

திருடன் : கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல தொழிலுக்குப் போலாங்களா?

---------------------

காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

காதலன் : லட்டு, ஜிலேபி. ஜாங்கிரி.................. !

______________________

Thursday, January 1, 2015

இன்னிக்கு நம்ம கல்யாண நாள் !


மனைவி : என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள்… கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா?

கணவன் : நான் செஞ்ச தப்புக்கு
கோழிக்கு ஏன் ... தண்டனை !

_______________

மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?

கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே.!

______________

கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள் !.

மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர்.

ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...!
_________________

முதல் கணவன் !

காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா,  கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? காதலன் ...