Total Pageviews
Wednesday, October 14, 2026
எனக்கு லீவே வேணாம்! ஆளை விடுங்க சாமி!
அடேய் இது என்ன புது கணக்கா இருக்கு ஒருநாள் லீவு கேட்டது ஒரு குத்தமாயா 🙄🙄🙄🙄🙄😫
வேலை செய்யும் அலுவலகத்தில் ஒருவர் முதலாளியிடம் போய் ஒரு நாள் லீவு கேற்கிறார்.
முதலாளி: வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா????
365 நாள் ஐயா
முதலாளி: அதில் மொத்தம் எத்தனை வாரம்?
52 ஐயா
முதலாளி: ஒரு வருஷத்தில் எத்தனை சனி,ஞாயிறு வரும்???
104 ஐயா
முதலாளி: மொத்தத்தில் 261 நாள்தான் Balance இருக்கு.
சரி நீ ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணி நேரம் வேளை செய்கிறாய்??????
8 மணி நேரம் ஐயா
முதலாளி: அடுத்த 16 மணி நேரம் என்ன செய்ற???
வீட்லதானே இருக்கிற????
ஆமாம் ஐயா
முதலாளி: 16 மணி நேரத்தையும் கூட்டி ஒரு வருஷத்துக்கு பாரு?
175 நாள் நீ வீட்ல இருக்கிற???
இப்போ சொல்லு மிச்சம் எத்தனை நாள் இருக்கு??
91 நாள் இருக்கு ஐயா
சரி ஒரு நாளைக்கு நீங்க tea 🍵 குடிக்க 30 நிமிஷம் சராசரியாக எடுப்பீங்க
இப்போ 30 நிமிஷம் படி ஒரு வருஷத்துக்கு பாரு
23 நாள் ஐயா
அப்போ மிச்சம்???
78 நாள் ஐயா..
அதில சாப்பாட்டுக்கு 1 நாளைக்கு 1 மணி நேரம் . இதன் படி
46 நாள்.
அப்போ மிச்சம் எத்தனை நாள்?
22 நாள் ஐயா
இதில் உடல் நிலை சரியில்லை என்று எப்படியும் 2 நாள் லீவ் எடுத்துக்குவ.
இப்போ எத்தனைநாள்??
20 நாள் ஐயா
இதில் 5 நாள் எப்படியும் Personal work அப்படீனு லீவ் எடுத்துக்குவ???
இப்போ எத்தனை நாள்???
15 நாள் ஐயா
இதில Annual லீவுனு 14 நாள் எடுப்ப????
இப்போ எத்தனை நாள் ???
1 நாள் ஐயா
ஆஹ அந்த ஒரு நாளையும் லீவு கேட்டு வந்திருக்க. ?
எனக்கு லீவே வேணாம்! ஆளை விடுங்க சாமி!
Monday, October 12, 2026
Thursday, October 1, 2026
தமிழ்நாட்டிலே பிறந்துவிட்டேனா. !

புதிதாகப் பிறந்த குழந்தை Nurse ஐ பார்த்துக் கேட்டது !
கரண்ட் இருக்கா?
Nurse: இல்லை.
குழந்தை: அடக் கடவுளே ! நான்
மறுபடியும் தமிழ்நாட்டிலே பிறந்துவிட்டேனா. !
_________
பையன்: அம்மா நம்ம எதிர் வீட்டு Aunty பேரு என்ன?
அம்மா: ராதா டா.!
பையன்: அப்பாவுக்கு அது கூட தெரியல அம்மா,
டார்லிங்’னு கூப்பிடுறாரு.!
___________
ஆள் 1 : நான் பிறந்தது சென்னையில் !
ஆனால் படிச்சது மும்பையில்.!
ஆள் 2 : அப்போ ஸ்கூல்’ க்கு போக
ரொம்ப நேரம் ஆகியிருக்குமே?
_________________
சார்… ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே… என்ன ஆச்சு?
நிதி நிறுவனம் : இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம்.. !
திருப்பித் தர்றதா சொல்லலையே!
என்ன கடனா?
இஞ்ஜினியரிங் Class Room-ல்..
ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம்,
என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான்,
இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்”
மாணவர்: என்ன கடனா?
————————————————————————————-
“தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்னு சொல்வாங்க…
நீங்க இப்படி சிரிக்கிறீங்களே…?”
“தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு…!”
————————————————————————————
திருடன் 1: டேய் நேத்து நாம திருடுன பணத்த எண்ணாமகூட ஒளிச்சி வச்சிட்டோமே…..
திருடன் 2: அதுனால என்ன !
நாளைக்கு பேப்பர்ல வரும்ல… அப்ப பார்த்துக்கலாம்.
————————————————————————————
“என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”
“எப்படிக் காப்பாத்தினா?”
“ஆபரேசன் ரூமிலேயிருந்து பின் வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!”
———————————————————————————-
அதை அடமானம் வைக்க முடியாதே”
![]() |
டிராபிக் கான்ஸ்டபிள்:
யோவ் நடுரோட்டை விட்டு ஓரமா போய்யா.
வண்டிக்காரனுங்க வந்து மோதிடப் போறானுங்க.
குடிகாரன்: என்னை ஓரமா போகச் சொல்லிட்டு
நீங்க மட்டும் நடுரோட்டிலே நின்னா எப்படி.
————————————————————————————–
“நான் ஒரு முட்டாள். உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே?”
“அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்…
அதனால தான் சம்மதிச்சேன்…!”
————————————————————————————–
“டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா,
நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?” “
அதை அடமானம் வைக்க முடியாதே”
————————————————————————————–
“வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்”
“நாலு செண்ட் தான்”
“ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே…”
————————————————————————————–
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால்
வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு
நான் மூடு அவுட்
————————————————————————————–
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு! Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம் !
————————————————————————————-
“டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானே…
இதையேன் பெரிசா சொல்றீங்க…?”
“அட! நீங்க ஒன்னு !
கரண்ட் இல்லைன்னாலும் டி.வியைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்
திருக்காங்க.!”
————————————————————————————
ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது.
மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
————————————————————————————
“சென்னையிலே தண்ணிக் கஷ்டமாமே?”
ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்க!”
———————————————————————————–
-
இஞ்ஜினியரிங் Class Room-ல்.. ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம்...
-
புதிதாகப் பிறந்த குழந்தை Nurse ஐ பார்த்துக் கேட்டது ! கரண்ட் இருக்கா? Nurse: இல்லை. குழந்தை: அடக் கடவுளே ! நான் மறுபடியும் தமிழ்நாட்ட...
-
"வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...






