Total Pageviews

Friday, March 29, 2013

தென்கச்சியின் நகைச்சுவை



அது அப்படித்தான்!

ஒருத்தர் தன்னுடைய நண்பர் வீட்டுக்குப் போயிருந்தார்.

அன்பாக உபசரித்தார்கள்.

அவசியம் எங்க வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள்.

சரி - என்று உட்கார்ந்தார்.

சாப்பாடு போட்டார்கள்.

சாப்பிட்டார்.

அவர்கள் வீட்டிலே கட்டிக்கிடந்த நாய்க்குட்டி இவர் சாப்பிடுவதை முறைத்துப் பார்த்தது.

''ஏன் இப்ப என்னை முறைக்குது உங்க நாய்க்குட்டி?''

அவர்கள்கள் சொன்னார்கள்:

''அதுகிட்டே ஒரு கெட்ட பழக்கம்ங்க... தன்னோட தட்டுலே யார் சாப்பிட்டாலும் அது அப்படித்தான் முறைக்கும்!''
--------------------------------------------------

வரிசையில் வா!

ஒரு ரேஷன் கடை வாசல்.

கடை திறக்கறதுக்கு முன்னாடியே எல்லாரும் வந்து வரிசையாய் நின்னுட்டாங்க.

கடைசியா வந்த ஒருத்தர் கியூவிலே முன்னாடி போறதுக்கு முயற்சி பண்ணினார்.

ஏற்கனவே நின்னக்கிட்டிருக்கிறவங்க... அவரை முன்னாடி போறதுக்கு விடலே.

'கடைசியா போயி நில்லுய்யா!' என்று கத்தினார்கள்.

அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

முண்டியடித்துக்  கொண்டு முன்னால் போக முயற்சி பண்ணினார்.

எல்லாரும் சேர்ந்து அவரை

வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுவந்து பின்னால் நிறுத்தி விட்டார்கள்.

''இதோ பாருப்பா! நாங்க இருக்கிற வரைக்கும் நீங்க முன்னாடி போய் எதையும் வாங்க முடியாது.... தெரிஞ்சிக்கோ!''

''நான் இங்கே பின்னாடி நிற்கிற வரைக்கும் நீங்களும் முன்னாடிபோய் எதுவும் வாங்க முடியாது!''

''ஏன்?''

''நான்தான் கடையைத் திறக்க வேண்டிய ஆள்!''
--------------------------------------------


நேரம் சரியில்லை

ஒருத்தன்

வாய்க்காலைத் தாண்டறேன்னு பந்தயம் கட்டி... தாண்ட முடியாமே வாய்க்கால்லே

விழுந்த காலை உடைச்சிக்கிட்டு கட்டுப் போட்டுக்கிட்டு வந்தான்.

''ஏன்டா இப்படி?''ன்னு கேட்டாங்க.

''நான் பந்தயம் கட்டின நேரம் சரியில்லே!''-ன்னான்.

''எப்படி?''

''வாய்க்கால்லே தண்ணி இருக்கிற நேரமா பார்த்துப் பந்தயம் கட்டியிருக்கணும்!''


ஆபத்தில் உதவி!


நமக்கு வேண்டிய ஆள் ஒருத்தர்.

கொஞ்சம் வயசானவர். எழுந்து நடக்கவே சிரமப்படுவார்.
எப்பவும் சாய்வு நாற்காலியிலேயே உட்கார்ந்திருப்பார். அவர் தனக்குத் துணையாக ஒரு நாயைப் பக்கத்திலேயே வைத்திருந்தார்.

அதுவும் வயதான நாய். எழுந்து நடக்கவே சிரமப்படும்.
இவர் பக்கத்திலே எப்பவும் சோர்ந்து போய்ப் படுத்திருக்கும். அந்தப்
பெரியவரைப் பார்க்க வந்த ஒருத்தர் கேட்டார்:

''ஏங்க... ஒரு சின்ன பையனை உங்களுக்குத் துணையா வச்சிக்கப்புடாதா?
இந்த நாயை உங்களுக்குப் பாதுகாப்பா வச்சிருக்கீங்களே...!
 உங்களுக்கு ஓர் ஆபத்துன்னா இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்?''

''எனக்கு ஓர் ஆபத்து-ன்னா அந்த
சமயத்துலே இந்த நாய் என்னை தனியா விட்டுட்டு ஓடிப் போகாமே இருக்கும்
இல்லையா? அதனாலேதான் இதை வச்சிருக்கேன்!''


மனைவி தேவை!

ஓர் ஆள்.

தன் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் கிட்டே யோசனை கேட்டான்:

''வரப்போகிற மனைவி சிவப்பா இருக்கணும்...
நான் ஏதாவது சொன்னா அதைச் செய்யணும்.
துணிமணிகளையெல்லாம் சுத்தமா துவைக்கணும்...
அப்படிப்பட்ட மனைவி தேவை...!''
கம்ப்யூட்டர் உடனே பதில் தந்தது:

''சிவப்பு கலர்லே ஒரு வாஷிங் மிஷினை கல்யாணம் பண்ணிக்கோ!''


மறதி நோய்!


அல்செமீர் - என்பது ஒருவித மறதி நோய்.

ஒரு குடும்பத்தலைவர்... தன் மனைவியைப் பார்த்து...

''யார் நீ... உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே....!'' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்தவுடன் எனக்கு சந்தேகமாக இருந்தது.

''வாங்க... டாக்டர்கிட்டே போகலாம்!'' என்றேன்.

அவர் உடனே என்னைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்க் காதோடு காதாக மெதுவாகச் சொன்னார்:

''என் கையிலே பணம் இல்லாத போதெல்லாம் அப்படி... மறதி நோய் வந்தது மாதிரி நடிப்பேன்....! அவ்வளவுதான்... அதைக் கண்டுக்காதீங்க....!''


ஏன் வரவில்லை?


ஒருவன் நண்பனிடன் கேட்டான்:

''கல்யாணப் பத்திரிகை அனுப்பியிருந்தேனே... ஏன்டா வரலை?''

''வந்திருந்தேனே!''

''ஏய்...! ஏன்டா பொய் சொல்றே? நான் உனக்குப் பத்திரிகையே அனுப்பலையே...!''

''பத்திரிகை அனுப்பினேன்னு நீ பொய் சொல்றப்போ கல்யாணத்துக்கு வந்தேன்-னு நான் பொய் சொல்லப்படாதா?''


ஏன் ஓடறாங்க?

ஒரு ராஜா.

அவர் தன் பெண்ணுக்குச் சுயம்வரம் நடத்தினார்.

பலநாட்டு அரசகுமாரர்கள் வந்தார்கள்.

சுயம்வரம் நடைபெறுகிற நாள்.

அரண்மனைக்குள்ளே இருந்து அரசகுமாரர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள்.

ஒரு பெரியவர் இதைப் பார்த்துவிட்டு அமைச்சரிடம் கேட்டார்:

''ஏங்க...
அந்நிய தேசத்து இளவரசர்கள் எல்லாம் நம்ம இளவரசியைக் கல்யாணம் பண்ணிக்
கொள்ளணும்ங்கற ஆர்வத்துலேதானே வந்தாங்க... ஏன் இப்படி ஓடறாங்க... நம்ம
இளவரசியை அவங்க பார்க்கலையா...?''

''பார்த்ததுக்கு அப்புறம்தான் இப்படி ஓடறாங்க!''

புத்தக விமர்சனம்!

ஒருத்தரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதற்கு விமர்சனம் எழுதச் சொல்லியிருந்தார்கள்.
கொஞ்ச நாள் கழித்து அவரைப் போய் பார்த்து, ''என்னங்க... புத்தகத்தைப்
படிச்சிப் பார்த்தீங்களா?'' என்று கேட்டார்கள். அவர் சொன்னார்:

''இன்னும் இல்லீங்க... இப்பத்தானே விமர்சனமே எழுதி முடிச்சிருக்கேன்!''

கார் பயணம்

ஒரு நாள் நள்ளிரவு நேரம்.

இரண்டு நண்பர்கள் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவன் சொன்னான்: ''டேய்! ராத்திரி நேரம்... காரைப் பார்த்து ஓட்டு!''

அடுத்தவன் சொன்னான் பதற்றத்தோடு:

''அடப்பாவி! இப்ப காரை ஓட்டிக்கிட்டுருக்கறது நீதானே....!''


ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?


அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...