Total Pageviews

Tuesday, January 31, 2012

உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"



கணவன்-மனைவி


அவர்களுக்கு இடையில் எப்பொழுதும் சண்டையே வருவது இல்லை.இது எப்படியோ பிரபலமாகி,


 ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர்களைப் பேட்டி காண வந்தார்.உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"

மிகவும் சுலபம்.சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும் நான் முடி வெடுப்பேன்.பெரிய பெரிய விஷயங்களில் எப்பொழுதும் என் மனைவி முடிவெடுப்பார்"

அப்படியா,

சின்ன விஷயங்களென்றால், என்னென்ன?"

எந்த கார் வாங்க வேண்டும், எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும், சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும், எந்த சோஃபா, ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும்,மாதச் செலவுகள்,வேலைக்காரி வேண்டுமா வேண்டுமா,இதெல்லாம் சின்ன விஷயங்கள்.இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள். நான் ஒன்றுமே சொல்வதில்லை"

அப்படியா,

பெரிய விஷயங்களென்றால்,என்னென்ன?"


அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா,பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமா, சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமா என்பதெல்லாம் பெரிய விஷயங்கள்.இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை. நான் தான் முடிவெடுப்பேன்"

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல



1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

 ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை

2)காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
  சீனாவுல தான் பிறந்தது ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO    WARRANTY.........
 
3) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன்,
                    கையில் காசு இல்லை



    நபர் 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க
  
  நபர் 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....- ?............
 
4) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது தூரத்தவும் முடியாது
 
5) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
 கணவன் சொன்னது அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக?...
 
6)கணவன்

உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
 1. சிரிப்பு 2. அழகு 3.நல்ல டைப்4. கொழந்த மனசு 5. இதெல்லாம் பொய்'ன்னு.... தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்

7) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி
 
8) தத்துவம் 2012
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
 
9) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன,
ஆனா உன் ரூம் லைட்டே எரியல?....: ... ....-
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
'

Monday, January 23, 2012

மாமியார் - மருமகள்


உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
 
என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!

என் மருமக நல்ல டைப் உன்னோட சண்டை போடமாட்டாளே?

ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா.

என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை என்ன பண்றா?

என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.

என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி?
அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை
உன் மாமியாரையா மதிப்பேன்.

ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?

திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...!

தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!

எப்படி? ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!

மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?

முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.

எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம். என்ன சார் அநியாயமா இருக்கு,

 அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?

உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?

 பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம்.

உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாயா? ஆமாம் அதுக்கு என்ன?
நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை?

 டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார்.

இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?

இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.

Thursday, January 19, 2012

எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்..






மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...


கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.
-----------------------------------


"கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...


மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...
------------------------------


 "மனைவி: என்னங்க...உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...?

கணவன்: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்."
------------------------------------


"மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...?


கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...?


மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...


--------------------------------------------------------------------


"கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...


மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?


கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!


-------------------------------------------------------------------------
"மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...


கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
------------------------------------------------------------------------------

பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால



ஒருவர்:  அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா! 


மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?


ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
-----------------------------------

போலீஸ் - திருடன்




திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!

திருடன்-2: இதிலென்னடா அவமானம்...?

திருடன்-1: அவ என் மனைவிடா....

-------------------------------------------------------------------
 "திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...

வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?

திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்."
-----------------------------------------

"வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?

திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன். "

--------------------------------------

"ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...

திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...

---------------------------------------------------------

 "நீதிபதி: ஏம்பா போலீஸ் ஸ்டேசனிலேயே திருட ஆரம்பித்திருக்கிறாயே...

திருடன்: எனக்கு ஏரியாவே பிரித்துக் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க சார்.. 

நான் என்ன பண்றது...?
---------------------------------------------------------"

"வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..

திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...

-----------------------------------------------------------
"திருடன்-1: நேற்று நான் திருட போன கம்பெனி முகமூடி தயாரிக்கிற கம்பெனியாம்... 

திருடன்-2: அப்புறம் என்ன செய்தாய்?

திருடன்-1: பத்து முகமூடி திருடிட்டு வந்தேன்.
--------------------------------------------------------------

"போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா இருந்திருக்கிறாங்களே...

வீட்டுக்காரர்: ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தையும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்."
--------------------------------------------------------------

பூமாலை- ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர்க்கு!


டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா.. அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"

பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"
-----------------------------------

ஒருவர்: என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?

நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!
-----------------------------------

நோயாளி என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!

டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!

நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!"
-----------------------------------

ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?

மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!

ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?

மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!
-----------------------------------

Monday, January 9, 2012

பவர் கட்டுன்னு நெனச்சுட்டேன் சார் !

Officer: Fuse போயி ஒரு மாசம் ஆகுது இப்ப வந்து Complaint குடுக்கறீங்க?

தமிழ்நாடு குடிமகன்: சாரி சார். பவர் கட்டுன்னு நெனச்சுட்டேன் சார் !

பொதுக் கூட்டம்!

பொதுக்கூட்டத்தில் கலந்து  கொள்ள ஒருவரவது வந்திருக்காரே !

சந்தோசம் !


இல்ல சார் அவர் தான் ஓலி,ஓளி பெருக்கி அமைப்பாளர் !

வேட்டை நாய்கள்!

மச்சி ! அந்த வீட்டுக்கும் மட்டும் போகவே போகாதே !

ஏண்டா கடிக்கிற நாய் ஏதாச்சும் இருக்கா?

இல்லைடா ! கொள்ளிவாய் பிசாசு 2 இருக்கு !

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...