ராமூ - என்னடா உதட்டெல்லாம் காயம்?
சோமு - ஒன்னுமில்லடா மனைவி [wife] ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன் !
ராமூ - அதுக்கு.....?
சோமு - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!
************
ஆசிரியர்: "என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
மாணவன்: "கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!
************
டாக்டர்: வாங்க , உட்காருங்க , சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க , நாக்க நீட்டுங்க.. திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க....
இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
வந்தவர் : ஒன்னுமில்லை டாக்டர் , என் மகளுக்கு கல்யாணம்... பத்திரிகை கொடுக்க வந்தேன்....!?!
************
மகன்: அப்பா... இந்த அப்ளிகேஷன்லே, 'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.."
அப்பா: "ரொம்ப நீளம்னு எழுது..."
************
நண்பர் 1 : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?
நண்பன் 2 : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..
நண்பர் 1 : ????
************
நண்பர் 1 : இன்னையில இருந்து நான்கு நாள் என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் 2:ஏன் ?
நண்பர் 1 : நேத்துதான் என் பொண்டாட்டி ஊருக்கு போனா அதான்!
நண்பர் 2:?????
************
கணவன் : ( மனைவியிடம் ) இன்னைக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வைச்சியா டி?
மனைவி : ஆமாங்க ஏன் கேக்குறிங்க ?
கணவன் : அதுவா தெரு ஓரத்துல ஒரு கருப்பு நாய் செத்து கிடந்தது அதான் கேட்டன்
மனைவி : ????
************