Total Pageviews

Wednesday, April 25, 2012

கார் ஓட்டி பாரேன்.எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க
?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.


கோபு: நான் ஆபீசில் நல்ல பெயர் எடுத்திருப்பதற்கு என் மனைவிதான் காரணம்.
பாபு: எப்படி
?
கோபு: ‌வீ‌ட்டு‌க்கு போற டை‌ம் வ‌ந்தது‌ம் எ‌ன் மேஜை ‌மீ‌திரு‌க்கு‌ம் அவளது போ‌ட்டோவை பா‌ர்‌ப்பே‌ன்.. அ‌வ்வளவுதா‌ன் அ‌ப்படியே ‌நிறைய வேலை
 ெச‌ய்து முடி‌த்து ‌விடுவே‌ன்


மனைவி: நம் பைய‌ன் போ‌ன் ப‌ண்‌ணி ரொ‌ம்ப நாளாகு‌‌தி‌ல்ல..
கணவ‌ன் : ‌ம்‌ம்‌ம்..
மனை‌வி : கடைசியா எப்போ போ‌ன் ப‌ண்‌ணினா‌ன்
?
கணவன்: ஒரு ‌நி‌மிஷ‌ம் இரு. செக் பு‌க்கை‌ப் பார்த்து சொல்றேன்


கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டு வறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா சொ‌ல்ற..?

அ‌வ்ளோ தூரத்துல வரும் போதே ரொம்ப மோசமான ஒரு நாத்தம் அடி‌க்‌கிதே அத வ‌ச்‌சி‌த்தா‌ன்.

Sunday, April 15, 2012

ஜோடிப் பொருத்தம் எப்படி?
ஒரு காட்டில் நாலுபேர் போறhங்க. .. திடீர்னு ஒரு சிங்கம் வந்து மூணு பேரை அடிச்சிடுச்சு..ஒருத்தரை மட்டும் அடிக்கலை ஏன் ?
ஏன்?
அவர் லயன்ஸ் கிளப் மெம்பர் *
------------------------------


அந்த கல்யாண மண்டப வாசல்ல, விரல்ல எதுக்கு மை வைக்கிறhங்க ?
செருப்புப் போடாம வர்றவங்களுக்கு மட்டுமாம் *

கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே.. ஜோடிப் பொருத்தம் எப்படி?
ஒரு ஜோடி செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை *

-----------------------
என்னங்க.. . எதிர்ல போற உங்க அம்மா. .. அப்பாவைத் திரும்பிப் பார்த்துகிட்டே வர்றீங்க ?
 
போய் பேச வேண்டியதுதானே *
 
நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு.. . எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்
-------------------------------

ஏங்க.. .. நம்ப பொண்ணுக்குத் தூக்கத்துல நடக்கிற வியாதிங்க *
 
கவலைப்படாதே. .. சரி பண்ணிடலாம் *
 
அதுக்கில்லைங்க.. . 

பக்கத்து வீட்டுப் பையனுக்கு தூக்கத்துல ஓடற வியாதியாம் *
-------------------------

கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறhங்களா.. .?
 
டைட்டில் என்ன ?
 
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை *
----------------------

வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறங்க?
 
இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம் *

---------------------------------

உங்களுக்கு ரோடு ரோலர் மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளே ?  

எங்க ஆளையே காணும்
 
பக்கத்து வீட்டுப் பையன் தள்ளிக்கிட்டுப் போயிட்டான்
--------------------------------

அந்த எறும்பு மட்டும் ஏன் உப்பைச் சாப்பிடுது.. .?


அதுக்குச் சர்க்கரை வியாதியாம் *

----------------------------------

தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுது ?100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை உன் தாத்தா திட்ட‌றாரே ஏன்?

அவருக்கு வயது 102.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?

இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?

அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்
கி  வியாதியாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக,  ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!

அப்படித்தான் மெக்கானிக்கும் சொன்னான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

ooooooooooooooooooo

'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''

''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''

ooooooooooooooooooo

நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?

மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு!

oooooooooooooooooooo

ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?

பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''

ooooooooooooooooooo

தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு ....."இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"

------------------------------------------------

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

---------------------------------------------

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? 


இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"

"இது ஏழைப் பேயாம்!"


---------------------------------------------

எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

xxxxxxxxxxxxxxxx

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

xxxxxxxxxxxxxxxxx

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..! 

xxxxxxxxxxxxxxxxx

''நாட்டில் இருக்குற விலைவாசி உயர்வு தலைவரை ரொம்பப் பாதிச்சுடுச்சாம்...''

''அவருக்கு அவ்ளோ இரக்க குணமா?''

''ஒரு வோட்டுக்கு ஐந்து, பத்து கொடுத்த காலம் போய்... இப்ப நூறு ஐந்நூறு கொடுக்க வேண்டியதா இருக்கேன்னு வருத்தப்படுறார்

xxxxxxxxxxxxxxxxx

''தலைவரே... செல்போன்ல ஏன் வைப்ரேஷன் வெச்சுத் தொலைச்சீங்க... பாருங்க. நீங்க உதர்றதைப் பார்த்து தோல்வி பயத்துல உதர்றதா எதிர்க்கட்சிகள் சொல்றாங்க!''
 xxxxxxxxxxxxxxxxx

கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!நண்பனுக்கும், , நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
 

நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ்
ஆவு..!
 -----------------------

"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"

"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"
 --------------------------------------


 முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
 
----------------------------------------------

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

-----------------------------------------------

Saturday, April 7, 2012

உங்கள மாதிரி எல்லாம் என்னால அடி தாங்க முடியாது...!!அப்பா : அம்மா அடிச்சதுக்கு ஏன்டா அழுற ..?
 
மகன் : சும்மா இருங்கப்பா ..! உங்கள மாதிரி எல்லாம் என்னால அடி தாங்க முடியாது...!!
---------------------------
 

*.அப்பா : "அப்பா சொல்றத கேக்கணும் .. இல்லனா உருப்படமுடியாது ...!"
 
மகன் :"அதுக்கு இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம் ...

தாத்தா சொல்லும் போதே கேட்டிருக்கணும் ...!"
 
அப்பா : .....?
--------------------------------


*.
முடி வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
 
நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
 
ஆனா அறிவு வளர்ந்தா வெட்ட முடியுமா ...?
 
கவலை படாதிங்க உங்க நல்ல மனசுக்கு அப்படி எல்லாம் ஆகாது ...!
--------------------------------

*.
ஒரு மனிதர் ரயில் இல் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி இறங்கி
ஏறிக்கிட்டே இருந்தாரம் ...  

அத பார்த்த ஒருத்தர் "ஏன் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆக இறங்கி ஏறுரீங்கஅப்படின்னு கேட்டராம் .  

அதுக்கு அந்த மனிதர் சொன்னாரம்  

டாக்டர் நீண்ட தூரபயணம் போகதிங்கனு சொல்லிருக்கார் .  

அதான் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆக இறங்கி ஏறுறன்".
--------------------------

*.உயிர் இல்லாத மலரை கூட நாம் நேசிக்கிறோம் ... 
 ஆனால் நமக்காக உயிரையும்  கொடுப்பவர்களை நேசிக்க ஏன் யோசிக்கிறோம் ..!? அதனால நேசிங்க ... 
 கோழி ,  ஆடு , மீன்  ...
  -----------------------------------


.அப்பா:என்னடா பேப்பர்  ரிசல்ட் வந்திருக்கு ..உன்னோட நம்பர் வரல ...?
 
மகன் : நமக்கு இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காதுப்பா...!
-----------------------------

*.
உங்கள தொந்தரவு பண்ணுறதுக்கு மன்னிக்கணும் .. 


ஆனா செய்தி முக்கியமானது .. 

உண்மையா சொன்னா நாங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம் .. 

அதுல ஜோக்கேர் கார்டு காணாம போய்டுச்சு .. 

அதனால உன்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பேன் ப்ளீஸ் ....
-----------------------------


*.
டாக்டர் : மாடில இருந்து எப்பிடி விழுந்திங்க ...?
 

நோயாளி : ஐயோ அம்மா னு கத்திகிட்டே விழுந்தேன்டாக்டர் ..!
-------------------------

உளுந்து போடுறாங்களா ...??
ஓய்வு எடுப்போர் சங்கம்

*.
உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!
---------------------------------


*.
எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ..
எங்கே காதல் பிறக்கிறதோ அங்கே வலி இருக்கும் ..
எங்கே வலி இருக்கிறதோ அங்கே ..
"IODEX" 
தடவுங்க ..வலி போய்டும் ..!
--------------------------------


*."
கொஞ்சமா பேசு ! அதிகமா கேள் " அப்படின்னு பெரியவங்க 
ஏன் சொன்னாங்க தெரியுமா ...?
 incoming free..
அதிகமா கேள்
outgiong kaasu.. கொஞ்சமா பேசு     அதனாலதான் ..-

--------------------------------------------
*.பெண் 1  : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!
 

  பெண் 2  : உளுந்து போடுறாங்களா ...??
 

  பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க ..
--------------------------------

Thursday, April 5, 2012

காதலிக்கும் பொது- அடிமை, கல்யாணம் பண்ணிடீங்கன்னா-கொத்தடிமை
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்? 
  ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
  அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
-------------------------------------


2)
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
------------------------------------------
3)
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
-------------------------------------------------
4)
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
------------------------------------------------
5)
நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
---------------------------------------------------
6)
மூன்று மொக்கைகள்:  

a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. 

அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?


c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. 


ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
------------------------------------
7)
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

 
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
 

என்ன கொடும சார் இது?....
--------------------------------------------------


8)
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
 தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9)
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... 

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10)
நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க... ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
**
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....


12)
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13)
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14)
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1.
சிரிப்பு
2.
அழகு
3.
நல்ல டைப்
4.
கொழந்த மனசு...
5.
இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15)
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16)
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17)
தத்துவம் 2010
"
லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"
கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18)
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19)
எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next
மீட் பண்றேன்...
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
 
  
Cheers,
Muthusamy

முதல் கணவன் !

காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா,  கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? காதலன் ...