கணவன்: ”என்னமோ
மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்”
மனைவி : சூடாவா?
இல்ல ஜில்லுன்னு வேணுமா?
கணவன்:”தலையை
வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
மனைவி :காபியா?
இல்லே டீயா?
கணவன்: ம்..
காபியே கொடு.
மனைவி :பில்டர்
காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
கணவன்:பில்டர்
காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
மனைவி :நரசுஸ்
காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
கணவன்:நரசுஸ்
தூள்லேயே போடு.
மனைவி :ஸ்டிராங்கா
வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
கணவன்:ஸ்டிராங்காவே
இருக்கட்டும்.
மனைவி :சர்க்கரை
போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
கணவன்:சர்க்கரை
போட்டே கொடு.
மனைவி :கிளாசுலே
வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
கணவன்: ”சே!
ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”
மனைவி :”ஒன்
செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”
-----------------