Total Pageviews

Thursday, November 21, 2013

சொர்க்கம், நரகம்


கணவ‌ன் : கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் மேலெல்லாம் நம்பிக்கை ‌கிடையாது

மனை‌வி : இப்ப?

கணவ‌ன் : நரகத்தை‌த் தா‌ன் பார்த்துட்டே‌ன்.. சொ‌ர்க‌த்த இ‌னிமே தா‌ன் தேடணு‌ம்.

---------------------------------------------

நாயா உழை‌க்‌கிறே‌ன்

எ‌ன்ன‌ங்க ந‌ம்ம குடு‌ம்ப‌த்து‌க்காக நா‌ன் நாயா உழை‌க்‌கிறே‌ன்‌னு அடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌ம் அது‌க்கு எ‌ன்ன இ‌ப்போ?

இ‌ல்ல ந‌ம்ம ‌‌வீ‌ட்டு வாச‌ல்ல நா‌ய் வ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கு அதா‌ன் கே‌ட்டே‌ன்.
-----------------------------------------------

ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ !
கணவ‌ன் : நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?

‌மனை‌வி :நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.

கணவ‌ன் :ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.

‌மனை‌வி :எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?

‌கணவ‌ன் நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

--------------------------------------
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா! 


 இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா !

------------------------------------------
 

கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!
------------------------------------------

காதல‌ர்க‌ள் கட‌ற்கரை‌யி‌ல்..

காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .

காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . .ப்ளீஸ் .

---------------------------------------

ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்


-----------------------------------------------

Wednesday, November 20, 2013

அரசாங்க ரகசியம்

"மன்னா! அரசாங்க ரகசியத்தை இந்த ஒற்றன் அறிந்து கொண்டான்…"

"நான் சமையலறையில் மகாராணிக்கு உதவியாக காய்கறி அரிந்துகொண்டிருந்ததை இவன் பார்த்துவிட்டானா…?"

---------------------------------

 "மன்னா, எதிரி நாட்டு மன்னனிடமிருந்து போர்ச் செய்தி வந்துள்ளது… என்ன பதில் அனுப்புவது…?"

"நீங்கள் அனுப்பிய ஓலை எமக்கு கிடைக்கவில்லை, என்று பதில் ஓலை அனுப்பிவிடலாமா…?"

------------------------------------

 "மன்னா, உங்களைப் பாட புலவர் வந்திருக்கிறார்…!"

"இப்போதுதான் மகாராணியிடம் பாட்டு வாங்கி வந்தேன்!"

--------------------------

 "மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?"

"அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். 'மேலே கூறியவை முழுக்க, முழுக்க கற்பனையே! யாரையும், எவரையும் குறிப்பிடுபவை அல்ல'னு எழுதியிருக்கே!"

----------------------------

அண்ணா' என்று "அமைச்சரே! நமது நாட்டின் 'குடிமக்கள்' எப்படி இருக்கிறார்கள்?"

" போதையில்தான் மன்னா!"

---------------------------------------

.
 "என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்…?"

"சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி 'மன்னா' என்று அழைக்காமல் 'அண்ணா' என்று அழைத்துவிட்டாளாம்…!"

-------------------------------------

 "மன்னா, ஆபத்து… ஆபத்து வந்துவிட்டது…!"

"என்ன ஆனது, மாறவர்மன் நம் மீது படையெடுத்து வருகிறானா?"

"இல்லை மன்னா, தாய் வீட்டுக்கு போன மகாராணி அதற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்…!"

---------------------------------

 "என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்…?"

"மன்னா, 'பட்டத்து யானையை அலங்கரியுங்கள்' என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்…!"

---------------------------------

 "தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்…"

"இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?"

"சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்க வேண்டியதுதான்!"

------------------------------

தேன் மொழி !
ஆசிரியர் : உலகில் உள்ள மொழிகளில் அழகான மொழி எது?"

மாணவன் : சார் "உங்க பொண்ணு தேன் மொழி தான் சார்!"

----------------------

 "உங்க தோட்டத்து காய்கறிகளுக்கு மட்டும் டபுள்ரேட் சொல்றீக்களே, ஏன்?"

சாக்கடை தண்ணீரில மச மசன்னு வளர்ந்தாலும் அத சுத்தப்படுத்த நாங்க

" உபயோகிப்பது மினரல் வாட்டர்ல்ல தாங்க அதான்…!"

---------------------------------------------


 "டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க…?"

"நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க…"

-----------------------------------

 "தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?"

"ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே"

-----------------------------------

. "உன் கடைசி ஆசை என்ன?"

"இந்த வழக்குல உண்மைக் குற்றவாளியை எப்படியாவது 


கண்டுபிடிச்சு எனக்குக் காண்பிங்க எசமான்!"

----------------------------------

சத்தியம் !

சுரேஸ் :  என்ன சார் தலைகொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு..


ரமேஸ் :  “இனிமேல் அடிக்கமாட்டேன்” என்று என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா !

*********************

ஒருவன் : பொண்ணு “கிளி” மாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது தப்பா போச்சுதுடா !

மற்றவன் : என்னாச்சுடா..?


ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்காடா.!

----------------------------------------------------

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்­ணீ  ஊத்திட்டியா?

தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது !.


முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு தண்­ணீ ஊற்ற வேண்டியதுதானே.!


------------------------------------------------

ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…

ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?

ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
-----------------------------------------


இதுதான் முதல் வழி… !
 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே குரூப் ரத்தமாயிருக்கே சபாஷ்!பின்னே இருக்காதா டாக்டர்! பத்து வருஷமா அவ என் ரத்தத்தை


உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர் !--------------------------------------------------என்ன தரகரே, பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு,சுடுகாட்டுக்கு கூட்டி வந்திருக்கீங்க?நீங்க தானே, அடக்கமான பொண்ணு வேணும்னு பிரியப்பட்டீங்க .....

------------------------------பிச்சக்காரன் : பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!

ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

பிச்சக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…

----------------------------மனைவி : அத்தான்… பல்லு வலி தாங்கமுடியல்ல..
 
கணவன் : ஏன் ?.. என்னத்தை அப்படி கடித்த  நீ..

மனைவி : உங்க அம்மாவைத்தான் ! 

Tuesday, November 19, 2013

ஏதாவது கவலையா?இன்ஸ்பெக்டர்: என்னது 20 போலீஸ் போயி வெறும் 1000 ரூபா கள்ளச்சாராயத்த தான் அழிக்க முடிஞ்சுதா?

கான்ஸ்டபிள்கள் (கோரசாக)- எங்களால அதுக்கு மேல குடிக்க முடியல அய்யா!

----------------------------------------------

முதல் நபர் : ஏன் இப்படி இஷ்டத்துக்கு குடிக்கிறே? ஏதாவது கவலையா?

இரண்டாம் நபர் : என் பொண்டாட்டியை எவனோ ஒருத்தன் இழுத்துக்கிட்டு போயிட்டான்.

முதல் நபர் : நீ கவலைப் படறது நியாயம் தான் !

இரண்டாம் நபர் : அதுக்கு கவலைப்படலே ! எ‌ங்கே மறுபடியும் கொண்டு வந்து விட்டுடுவானோன்னுதா‌ன் பயமா இருக்கு ! அதான்!.

---------------------------------------------------------

கணவன்: எ‌ன்ன‌டி.. அ‌ந்த பா‌ர்ல குடிச்சிட்டுருக்கரவனை உனக்கு தெரியுமா? அவனையே பா‌ர்‌த்து‌க்‌கி‌ட்டு இருக்க?

மனைவி:: அவர் என்னை ஒரு தலையா காதலித்தவர் ! நான் கிடைக்கல்லங்கறதால தா‌ன்  குடிக்க ஆரம்பிச்சுட்டார் பாவம்!

கணவன்  : அப்ப நீ கிடைக்காம போனத நெனச்சு அவன் சந்தோஷத்துல குடிச்சு எஞ்சாய் பண்றான்னு சொல்லு !

---------------------------------------------------.

நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வச்சிருக்கியே, ஏண்டி?

எப்படியும் நான் செத்தப்புறம் என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார்.

அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்க இருக்குன்னு பைத்தியம் மாதிரி தேடட்டுமே! அதுக்குத்தான்!!

____________________________
இன்ஸ்பெக்டர ஏன் ப‌ணி‌ நீ‌க்க‌ம் செஞ்சுட்டாங்க!

ஒரு கொலை வழ‌க்குல கொலை செய்யப்பட்டவன் உடலையு‌ம் காணோம், கொலை செஞ்சவனும் தலை மறைவாயிட்டான்..
.
அதுக்கு போயா இவர ப‌‌ணி ‌நீ‌க்க‌ம் செஞ்சாங்க?

இரண்டு பேரும் சமாதானமா போயிட்டாங்கன்னு எழுதி வழ‌க்கை மூடி‌ட்டா சும்மா விடுவாங்களா என்ன!

---------------------------------------------

தெய்வம்!டாக்டர் என‌க்கு ஆபரேஷ‌ன் செ‌ய்ற நீங்க தான் என‌க்கு தெய்வம்!

ஆபரேஷன் செ‌ய்ற வரை‌க்கு‌ம் தா‌ன் நா‌‌ன் தெ‌ய்வ‌ம்.

அது‌க்கு‌ப் ‌பிறகு ‌நீ‌ங்கதா‌ன் ............... தெய்வம்!


--------------------------------------------------------

நோயாளி : என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம போறீங்க?

டாக்டர்   :   அடப்பாவி  நீ  இன்னுமா  உயிரோட இருக்க?!   நா‌ன் போ‌ஸ்மா‌ர்‌ட்ட‌ம்ல               செ‌ஞ்சே‌ன்.


--------------------------------------------------------
ஜக்கு : அக்கவுண்டன்ட் வேலைக்கு போனியே என்ன ஆச்சு?

மக்கு : செலக்ட் ஆகல, வருஷத்துக்கு 108,000 ரூபா சம்பளம்

ஜக்கு : ஏன் நல்ல சம்பளம்தானே?

மக்கு : நல்ல சம்பளந்தான், வருஷத்துக்கு 1,08,000-ம்னா மாசத்துக்கு எவ்வளவுன்னு கேட்டேன்?

                 போயிட்டு வான்னு சொல்லிட்டான் !
----------------------------------

காதலன்: வா டார்லிங் . . . . நாம அந்தப் படகுக்கு பின்னாடி போய் உட்காரலாம் . . . அது ரொம்ப ராசியான படகு . . .

காதலி: ராசியான படகுன்னு எப்படி சொல்றீங்க . . .

காதலன்: அங்க உட்கார்ந்த காதலர்கள் சீக்கிரமே பிரிஞ்சுடறாங்களாம் . . . .

------------------------------------

திருமணமான முதல் வருடம் - கணவன் பேசுவான் மனைவி கேட்டுக் கொண்டிருப்பான்.

அடுத்த வருடம் - மனைவி பேசுவாள். கணவன் கேட்டுக் கொண்டிருப்பான்.

மூன்றாம் வருடம் - இருவரும் பேசுவார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டு கொண்டிருப்பார்கள் !.

-------------------------------------

Monday, November 18, 2013

கொழுப்பு ஜாஸ்தி !


மனைவி : ஏங்க இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.

கணவன் : இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம்  முழுவதும் உனக்கு கிடைச்சிடும்!

-----------------------------

கணவன் : வீட்டு வேலைக்காரியை கல்யாணம் செய்தது தப்பா போச்சு !

ஒருவன் : ஏண்டா ?

கணவன் :  1ம் தேதி ஆனவுடன் பழக்க  தோசத்தில சம்பளத்த கொடுங்கள் எஜமான்ங்கிறாள் !

--------------------------------

கணவன் :  ஏண்டி நம்ம வீட்டுக்கு ஒரு புதிய  வேலைக்காரியை நியமனம் செய்யலாமா ?

மனைவி  :  வேணங்க! உங்களுக்கு 2ம் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லைங்க!

கணவன் :  முன்னால்  வேலைக்காரிகிட்ட கேட்டா, இதை தான்  சொல்லுவா !

மனைவி :   வேலைக்காரியை  மனைவி ஆக்கிறதுல நீங்க கில்லாடி!  உங்களப்பத்தி எனக்கு தெரியாதா!

_____________________

வேலைக்காரி : எஜமான் நம்ம பையன் டாக்டருக்கு படிக்கப் போறான் !

முதலாளி  :  உனக்கு என்ன வேணுமுன்னாளு கேளு !

வேலைக்காரி :  உங்க ஆசிர்வாதம் மட்டும் போதும்!


-----------------------------------

கணவன் "எங்க அம்மாவுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிட்டதுன்னு டாக்டர் சொல்றார்டி!"

மனைவி ; ;"இதைதான் நான் அன்னிக்கு சொன்னதுக்கு நீங்க  என்கூட சண்டைக்கு வந்தீங்க!"

-------------------------------

 தாய்: ஏண்டா உனக்கு மருந்தை எப்பவும் பாட்டியே கொடுக்கணும்னு சொல்றே?

சிறுவன்: பாட்டிக்குத்தான் கை நடுங்கும், அதனால பாதி மருந்து கீழேயே போயிடும்!

அண்ணன் தம்பி !

என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க?

நான் உங்க சொந்தக்காரன் சார்.

எப்படி?

எங்க வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும்
அண்ணன் தம்பி !.

-------------------------------

ராமூ    :  குரைக்கிற நாய் கடிக்காது.

சோமு : எப்படிடா அவ்ளோ உறுதியாச் சொல்றே?

ராமூ   :  ஒரே சமயத்தில அதால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான் !.

-----------------------------------------------

டாக்டர், எங்கவீட்டு நாயால சரியா குரைக்க முடியலை...

ஃபீஸ் இருநூறு ரூபாய் ஆகும்.

கொஞ்சம் குறைங்க டாக்டர்...

நான் குறைச்சா அப்பறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே?


--------------------------------------

அந்தப் பணக்காரர் வீட்டில் மூணு நீச்சல்குளம் இருக்கு.

ஒண்ணுல சுடுதண்ணீர்,

இன்னொண்ணுல பச்சைத்தண்ணீர்...

மூணாவதுல?

அது காலியாக இருக்கும்.

அது தண்ணீர்னா பயப்படுகிறவர்களுக்கு !

-------------------------------------------

அடப்பாவி !
பக்தன் :இனிமே மனிதப்பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும் சாமி?

கடவுள் : ஏன் அப்படி கேட்கிறாய் பக்தா?

பக்தன் : ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு வேண்டிக்கிறாள் என்          மனைவி  அதுதான் !

-----------------------

என்ன சார் வீட்டு வாடகை ரொம்ப அதிகமா சொல்றீங்க?

பின்னே…அம்மி ஆட்டுக்கல் எல்லாம் வாங்கி போட்டிருக்கேனே  தம்பி!

------------------------

பக்தன் : கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?

கடவுள் : நல்லா அழகானவளா,  நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா, நல்லா பணக்காரியா இருக்கணும். போதுமா ?

பக்தன் :  அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!

கடவுள் :  அடப்பாவி !

---------------------------------------------

 "மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே? ''

"எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற?

 உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்''

----------------------------------------------------------


கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?

கணவன்: அதை நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!

-----------------------------------------------------

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...