Total Pageviews

Saturday, June 18, 2016

மிகவும் வலு விழந்து இருக்கின்றான் !

Just to Relax


ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,  ஐயா!


******************************

மனைவி: டாக்டர் ஒரு மாதம் நல்ல மலைப் பகுதியான இடத்துக்குப் போய்ஓய்வெடுக்க சொல்றார். நாம எங்க போகலாம்?

கணவன்: வேற டாக்டர்கிட்ட போகலாம் !

***************************

வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. 
 
மாசம் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கி யிருப்பேனே!!


வங்கிமேலாளர்: .......ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!


************************************

ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது...!

சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!

ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிறமார்க்கை தொடர்ந்து +2 வரை வாங்கனுமேனு தான் கவலையா இருக்கு...!


*****************************

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி: நம்ம வீட்டு வேலைக் காரியைக் காணோம்.

நீங்களாவது ஆபீசில இருக்கீங்க ளான்னு............. பார்த்துட்டு போகத் தான் வந்தேன்!

*******************************

இப்ப நான் கதாநாயகியாச்சே!




சென்சஸ் அதிகாரி; போன வருசம் நான் சென்சஸ் எடுக்கும் போது உங்க வயது 23ன்னு சொன்னிங்க !

இப்போ 18 வயதுன்னு சொல்லுறிங்களே !?

நடிகை: போன தடவ நான் துணை நடிகை, இப்ப நான் கதாநாயகியாச்சே! வயசு குறைத்தானே செய்யும்?

*********************************

ஆசிரமத்தில் :

குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் எனக்கு அருள் புரிய வேண்டும் !

சிஷ்யா  பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த்தாய் ?


******************************

 நீதிபதி : ஏன் பகலில் திருடுனே ?

திருடன் : தொழிலுக்கு வந்த பின் ராத்திரி பகல்னு பார்க்க கூடாதுன்னு என்னோட குரு சொல்லிருக்கார் ,  நான் 24x7 சர்விஸ் பண்ணுவேன் ஐயா!


********************************

தரகர் : மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறார்..

பெண் : அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க !

******************************************

நடிகர் :  இது என்னோட மானப்பிரச்சனை விடமாட்டேன்னு சொல்றாங்களே என்னாச்சி ?

நடிகை : படத்துல நான் நடித்த குளிக்கிற ஸீனை சென்ஸார்ல கட் பண்ணிட்டாங்களாம்!


*******************************

தொண்டர் 1 : தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்குல செருப்பு இருந்ததுக்கு அதிகாரிங்க கணக்கு கேட்டாங்களாமே .. தலைவர் என்ன சொன்னார் ?

தொண்டர் 2: வாங்கினா கணக்கு காட்டலாம் , மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னாராம் !

**********************************************

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...