பிரபல நடிகையைக் கல்யாணம் செய்துகொண்ட அவன், மனைவி மற்றும் நாயுடன் காரில் ஜாலியாக ஒரு ரைட் போகப் புறப்பட்டான்.
டிரெஸ்ஸிங் டேபிள் முன்னால் உட்கார்ந்திருந்த மனைவியை அவன் அவசரப் படுத்தினான்.
“ம்ம்ம்ஹூம்…. நேரமில்லை, போய்ட்டு வந்ததும் எனக்கு ஒரு அவசர பிஸிநஸ் மீட்டிங் இருக்கு…. உடனே புறப்படு”
நடிகை போட்டது போட்டபடி அப்படியே புறப்பட்டாள்.
கார் ஓட்டிப் போகும்போது யாராவது தவளையைப் பார்த்து பிரேக் போடுவார்களா?
அவன் போட்டான்.
போட்டது மட்டுமில்லை, இறங்கி அதைத் தூக்கி சாலையின் ஓரத்தில் விட்டான். அது ஒரு அபூர்வ சக்தி படைத்த தவளை என்பது அவனுக்கு அதுவரை தெரியாது. தவளை அவனை நன்றியுடன் பார்த்தது.
“இதற்கு நன்றியாக நீ கேட்கும் ஒரே ஒரு ஆசையை என்னால் பூர்த்தி செய்ய முடியும், கேள்” என்றது.
ஆனந்த அதிர்ச்சி அடைந்த அவன்,
“அடுத்தவாரம் ஒரு டாக் ஷோ இருக்கு. அதில என் நாய் ஜெயிக்கணும்” என்றான்.
“கூப்பிடு நாயை, நான் பார்க்கணும்” என்றது தவளை பர்ஸனல் மேனேஜர் மாதிரி.
நாய் வந்தது.
“சான்ஸே இல்லை. சொறிநாய் மாதிரி இருக்கு, இதையா வளர்க்கறே?”
ஏமாற்றமடைந்த அவன்,
“சரி…. அதே வாரம் ஒரு அழகிப் போட்டி இருக்கு. அதில என் மனைவி ஜெயிக்கணும்” என்றான்.
“கூப்பிடு அவளை”
வந்தாள்.
தவளை யோசித்தது.
“என்ன யோசிக்கறே?”
“நாயை சரியாப் பாக்கல்லை, மறுபடி கூப்பிடு”
---------------------------------------------
Thanks to livingextra.com