Total Pageviews

Tuesday, December 31, 2013

வயசான பொண்ணு!!


சந்தானம் - டாக்டர் இப்ப உங்க 'தலைவலி' எப்படி இருக்கு..?

டாக்டர் மயில்சாமி- 'அது'வா, ரெண்டு நாளைக்கு அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்குப்பா..!
============

பொன்னம்மா : ஜோசியரே நான் ரெண்டு பேரை லவ் பண்றேன். யாருடன் எனக்கு கல்யாணமாகும், யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்று சொல்றீங்களா...?

ஜோசியர் - 2வது நபருடன் கல்யாணமாகும். முதல் நபருக்கு அதிர்ஷ்ட்டம் அடிக்கும்!!...
=================
ரமேஷ் : இந்த டாக்டர் ரொம்ப மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
போஸ்ட் மேன் : நீங்களாவது பரவாயில்லை, நான் இந்த ஊரு போஸ்ட் மேன், லெட்டர் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிட்டார்.
=================

ராஜா : நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?
எழுத்தாளர் : போனால் போகட்டும் என்று ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை,ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு அதான் கவலையா இருக்கு.
===============
மகேஷ்: அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
சுரேஷ்: அவர் வீட்டுக்கு பக்கத்துலயே சொந்தமா ஒரு ஊருகாய் கம்பெனியே போட்டு நடத்திட்டு இருக்காருன்னா பாரேன்.
===============
நர்ஸ் 1: இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
நர்ஸ் 2: அப்படியா ...! எப்படி...!
நர்ஸ் 1: இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!
=============

டீச்சர்: 18 க்கும் 81 க்கும் என்னப்பா வித்தியாசம்?

18 ன்னா வயசு பொண்ணு!

81 ன்னா வயசான பொண்ணு!!

டீச்சர்:??????????
==================

“கடலை,எண்ணெய் என்ன விலைங்க?”

“நூத்தி இருபது ரூவா”

“எப்போ குறையும்?”

“அளந்து ஊத்தும்போதுதான்….”

===================
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?

டிரைவர்: அட போய்யா, நான் ஆறு தடவை.... பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!

================
உங்க வீட்டுல எப்ப இருந்து பவர் கட்டாச்சு?

ம்ம்....ம்ம்ம்...கல்யாணமான நாளிலேயிருந்து கட்டாயிடுச்சி!

=================
தலைவர் அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும்னு சொல்றாரே..?

கூட்டத்திற்கு அழைத்து வந்தவர்கள் எண்ணிக்கையை சிம்பாலிக்கா
சொல்றார்…!
=================
ஹலோ…நைட் என்ன டிபன்..?

ம்…மண்ணாங்கட்டி!
-
நான் வர லேட்டாகும்…நீ சாப்பிட்டுட்டு தூங்கு..!

===================
பிள்ளைகளுக்கு மாணிக்கம், முத்து, தங்கம்னு பேர் வச்சு தலைவருகு
அலுத்துப் போச்சாம்…!
-
அதனால..?
-
இன்னைக்கு ஒரு குழந்தைக்கு, ‘அலுமினியம்’ ன்னு பேர் வெச்சுட்டாரு…!

===================

என் மனைவிகிட்டே எனக்குப் பிடிச்ச விஷயம் ஒண்ணே ஒண்ணுதான்..!

என்னது?

அடிச்சி முடிச்ச கையோட, குடிக்க ஒரு கிளாஸ் ஜூஸ் கொடுப்பா…!
========================

ஹலோ! எங்க பாங்க்ல போன் தர்றோம், வேணுமா..?

முதல்ல இந்த நம்பருக்கு நூறு ரூபாய்க்கு ‘டாப் அப்’
பண்ணுங்க…அப்பதான் நான் உங்க பாங்க்-ஐ நம்புவேன்..!
===================
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை நடக்கிறதை நீ
எப்படி கரெக்டா கண்டு பிடிச்சுடறே?

ஹாலிவுட் படத்தோட டிரைலர் ஓடுற சத்தம் கேட்குமே…!
================
எனக்கு டாக்டர் பட்டம் தந்துட்டாங்களே..இனி நான்

சர்ஜரி பண்ணலாமா…?

வேணாம் தலைவரே..! வழக்கம்போல ஃபோர்ஜரியே பண்ணுங்க…!
=================
என்னப்பா !, எப்பவும் மேசையிலே மூணு கிளாஸ் வைச்சு,
‘நடு’ கிளாஸ்லே ஊத்தி அதை மட்டும் குடிக்கிறே…?

நான் ‘மிடில்’ கிளாஸ் குடிகாரன்…!
====================
எதுக்கு நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச தரகரை
போட்டு அடிச்சீங்க?

என்னால உன்னை அடிக்க முடியலையே…அதான்..!
---------------------------------------
வாயைக்கட்டி வயித்தக்கட்டி பணம்
சேர்த்தேன்!

அதுக்கென்ன இப்போ?

வயித்துலே கட்டி-னு எல்லாத்தையும் டாக்டர்
புடிங்கிட்டாரு!
================

தலைவருக்கு கடைத்தெரு நடுவிலே சிலை வைக்க
வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?

ஏன் என்னாச்சு?

அங்கே பாருங்க…அவர் தொப்பைக்குக் கீழே நாயர்
டீ கடை போட்டிருக்கறதை..!

Thanks to Mr.Kesava Bashyam VN

கால் உடைஞ்சிருச்சாம்..!

டாக்டர்..இருபதாம் நெம்பர் ரூம்ல
கால் உடைஞ்சிருச்சாம்…!

அப்படியா…எக்ஸ்ரே, ஆபரேஷன் எல்லாத்துக்கும்
ரெடி பண்ணு…அட்வான்ஸா ஒரு ஐம்பதாயிரம்
உடனே கட்டச் சொல்லு..க்விக்!

டாக்டர்…நோயாளி படுத்திருந்த கட்டில் கால்
உடைஞ்சிருச்சாம்..!
--------------------------

காலை தூங்கி எழுந்ததும் நான் என்
மனைவி முகத்தைப் பார்ப்பேன்!

அவ்வளவு பாசமா?

அதெல்லாமில்லை…நரிமுகத்துல விழிச்சா
நல்லது நடக்கும்கிற நம்பிக்கைதான்!

---------------------------------------------

ஏன் எல்லா பேஷண்டையும் டாக்டர்
அவசரப்பிரிவிலேயே அட்மிட் பண்ணச்
சொல்றார்?

அவருக்கு அவசரமா பணம் தேவைப்படுதாம்..!
-----------------------------------------

ஒரே தப்பை நீங்க ரெண்டு பேரும்
செஞ்சிருந்தாலும், உன் அம்மா உன்னை
விட்டுட்டு உன் அக்காவை மட்டும் ஏன் அடிக்கிறாங்க?

அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்..!
---------------------------------------

சம்பள நாள் !


எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்,

அவசியம்  வந்திடுங்க…!

உங்களுக்கு ஒரு ஆபத்துன்னா

நான் வராம இருப்பேனா?
--------------------------------------------

என்னங்க இந்தக் கல்யாணத்து பந்தியிலே

 பூரிக்குச் சட்னியும்

பொங்கலுக்குக் கிழங்குமாக

 மாற்றிப் பரிமாறுகிறார்களே .. ..

என்ன விஷயம் ?

 இது கலப்புத் திருமணமாம் .. ..

 அத சாப்பாட்டுலயும் காட்றாங்களாம்...
----------------------

என்னம்மா உங்க  கணவர் காணாம போய்
இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க.....

ஏன் இவ்வளவு நாள் கழிச்சு
 வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் தான் சார் அவரோட
சம்பள நாள் !
--------------------------

ஊமைக்காயம்

வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க.
மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!
--------------------------
ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்
----------------------
அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.
மகள் : போதும் நிறுத்துங்கப்பா.
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா
எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்
 ------------------
போலீஸ் அடிச்ச அடியிலே
அவருக்கு பேச்சே வரலை ஏன்?
அடிச்ச அடியில் அவருக்கு ஊமைக்காயம் ஏற்பட்டுச்சாம்
-------------------

Wednesday, December 25, 2013

கோபம் குறைஞ்சிடுமா?என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து

நூறுவரை எண்ணுவா!

அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா?

இல்ல, நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!

----------------------------
பெரிய முன்கோபியாக இருந்த நான் இப்ப சாந்த சொரூபியா மாறிட்டேன்…!

தெரியும்…

உனக்கு கல்யாணமாயிடுச்சுன்னு..!
---------------------------
அதோ போறாரே…அவர் மனைவிக்கு ரொம்ப பயப்படுவாரு…!

நீங்க..?

அவர் மனைவிக்கு நான் ஏன் பயப்படணும்…!
------------------------------

என்னால் முடியாததை என் மனைவியும், அவங்களாலே
முடியாததை நானும் செய்து முடிச்சுடுவோம்..!

உங்களால எது முடியாதது, அவங்களால எது முடியாதது?

எனக்குப் பொறுமையா உட்கார்ந்து டீவி சீரியல் பார்க்க முடியாது,

 சமைக்கிறது, துவைக்கிறது, வீட்டு வேலைகள்…
இதெல்லாம் என் மனைவியால முடியாதது…!

———————————————————–

நமக்கு கல்யாண நாள்…மனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு?

கணவன் :  மறந்துட்டியா…  நேத்துதானே  நமக்கு  கல்யாண நாள்…!

-------------------------

என்னங்க நாளைக்கு நம்ம கல்யாண நாள்…!

ஆபிசிலிருந்து வந்ததும் வராததுமா, என்கிட்டே
பிரச்சினைகளை சொல்லாதேன்னு உனக்கு
எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்…!

--------------------------

கணவன் :  இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே…!

மனைவி: குடிச்சுட்டு வந்துட்டீங்களா…?!
----------------------------
நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே,
இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே…?

நடிகை: அதெல்லாமில்லீங்க… இது ‘கரைஞ்சதும்’ வேற
புது சோப் வாங்கிடுவேன்…!

--------------------------------------
டாக்டர் என்னோட டெஸ்ட் ரிசல்ட் நார்மல்..!

நான் சொன்ன லேப்ல டெஸ்ட் பண்ணலையா?

------------------------------------

 கல்யாணமாகாத பெண்ணுக்கான வெடி இருக்கா?

என்ன கேட்கறீங்கன்னு புரியலை..?

கன்னி வெடி இருக்கான்னு கேட்டேன்…!

‘டாஸ்மாக் தியாகி’தலைவர் வீட்டிலே நடந்த ரெய்டுல , சிபிஐ என்ன
கண்டு பிடிச்சாங்க?

தமிழ் நாட்டில உள்ள எல்லாக் கட்சிகள்லயும்
தலைவருக்கு உறுப்பினர் கார்டு இருக்குதாம்…!

----------------------------------------

ஆபிசுல எதுக்கு பேக்டரி மாதிரி சங்கு ஊதுறீங்க?”

“”தனித்தனியா ஒவ்வொருத்தரையும் எழுப்ப
முடியாதுன்னு பியூன் சொல்லிட்டாரு… அதனாலதான்.”

------------------------------------
தலைவர் எந்த நேரமும் போலீஸ் கைது செய்துடுங்கிற
பயத்துல இருக்கார்னு எப்படி சொல்றே?

டிரெயின்ல தூங்கிட்டு இருந்தவர், டி.டி.ஆர் டிக்கெட்
கேடதும் ‘வாரன்ட் இருக்கா’ன்னு உளர்றார்…!

 -------------------------

செத்து போனவருக்கு அஞ்சலி செலுத்தி அச்சடித்த
போஸ்டர்ல, ‘டாஸ்மாக் தியாகி’ன்னு இருக்கே?

அவரு குடியால செத்தார்ல…அதான்..!

-----------------------------------

வாயைக் கட்டணும்னு சொன்னீங்க !வாய்ல ஏன் கட்டு போட்டிருக்கீங்க?

நீங்கதானே டாக்டர் போன தடவை வந்தப்போ,

எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு சொன்னீங்க?

------------------------

உங்க பிரச்சினைக்கு என்ன காரணம்னு தெரியலை.

ஒரு வேளை அளவுக்கதிமாக் குடிச்சதால இருக்கலாம்னு நினைக்கிறேன்.

பரவாயில்லை டாக்டர். நீங்க எப்போ குடிக்காம
இருப்பீங்கன்னு சொல்லுங்க, நான் அப்போ வரேன்.

----------------------------

என்ன இது…மேடையில எலோரும் குறட்டை விட்டு தூங்கறாங்க…!

மேடையில் குட்டிக்கதைகள் சொல்லிக்கிட்டிருந்த
தலைவர், இப்ப முழு நாவலே சொல்லுறாராம்..!

-------------------------------------

நர்ஸ் ட்யூட்டி முடிஞ்சு போகும் போதெல்லாம்

 
எப்பல்லாம் உங்களுக்கு இதயம் வலிக்குது..?

நர்ஸ் ட்யூட்டி முடிஞ்சு போகும் போதெல்லாம் டாக்டர்…!

--------------------------------------
என் புருஷன் இங்கே வந்து அட்மிட் ஆகியிருக்காரா டாக்டர்..?

ஏன் கேட்கறீங்க?

உன்கூட வாழறதைவிட சாகலாம்னு கோபமா கிளம்பினார்…அதான்..!

-------------------------------
என்ன சிஸ்டர் இது ட்ரிட்மெண்ட் பீஸோட ‘எஜுகேஷன் பீஸ்’
இருநூறு ரூபாய் சேர்த்து போட்டிருக்கீங்க!

டாக்டர் எம்.பி.பி.எஸ் படிக்கிறார் இல்லையா?

--------------------------

ஹலோ…போலீஸ் ஸ்டேஷனா? எங்க வீட்டில் வச்சிருந்த
பத்தாயிர் ரூபாயில எவனோ ஒன்பதாயிரம் ரூபாய்
திருடிக்கிட்டு போயிட்டான் சார்..!

அப்ப, மீதி அந்த ஆயிரம் ரூபாய் எங்க மாமூல் பங்கா
இருக்கும்,…அட்ரஸ் சொல்லுங்க, வந்து வாங்கிக்கிறோம்..!

---------------------------------------

காரோட ஆர்.சி.புக்…!


டாக்டரைப் பார்த்து நர்ஸூம் கெட்டுப் போயிட்டாங்க..!
எப்படி சொல்றே?

என் மேல் லவ் இருக்கான்னு கேட்டா,

எதுவும்   இருபத்து நாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்னு பதில் வருதே..!

-------------------

ஒரு புக் வாங்கினா கார் இலவசம்…!

அப்படி என்ன புக் அது?

காரோட ஆர்.சி.புக்…!

-------------------------

பக்கத்து வீட்டுக்காரி உங்களுக்கு சபலபுத்தி இருக்குன்னு சொல்றா…!

பார்த்தியா ! நீ எனக்கு புத்தியே இல்லைன்னு சொன்னியே…!

--------------------

நல்ல பாட்டு வரும்போது உங்க பாட்டி ஏன்
படக்குன்னு டி.வி.யை அணைக்கிறாள்…?

எங்க தாத்தாவுக்கு ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும்
இது எங்க பாட்டிக்கு பிடிக்காது…அதான்…!

------------------------------

நான் தான் சார் தயாரிப்பாளர் !


அவனவன் கோடி கோடியாய் பணம் போட்டு

படம் எடுக்கிறான்…திருட்டு டி.வி.டியா விக்கிறே… நட ஸ்டேஷனுக்கு…!

நான்தான் சார் தயாரிப்பாளரே…! இந்த படத்தை இப்படி வித்தாத்தான் உண்டு…!

-------------------

உங்க கணவர் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு..! நிஜமாவா டாக்டர்…?

ஆமாம், அவரை இனிமே அடிக்காதீங்க..!

——————————————-
பஸ் கட்டணம், மின்சார கட்டணம்னு வரிசையா
ஏத்தினது தப்பாப்போச்சா…

ஏன் தலைவரே…?

தொகுதி மக்களும், ஓட்டுக்கு ஐயாயிரம் விலை ஏத்திட்டாங்களே..!

-----------------------------
வன்முறையால சாதிக்க முடியாததை அன்பால் சாதிச்சுட்டேன்…!
எப்படி?

எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால உடைக்கணும்னு நினைச்சேன், முடியல…

என் மனைவி செய்த சீடையை அன்போடு கொடுத்தேன்…காரியம் முடிஞ்சுடுச்சு..!
--------------------------------

Monday, December 23, 2013

தொப்பை விழுந்துடுச்சா?
---------------------------------------------------------------------------------
ரெகுலரா சைனீஸ் ஓட்டலில் சாப்பிட்டது தப்பாப் போச்சு!

ஏன் தொப்பை விழுந்துடுச்சா?

இல்லை, மூக்குல சப்பை விழுந்துடுச்சு…!

---------------------

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்


அதென்ன கட்சியில புதுசா பழம்பெரும் மகளிரணின்னு
தலைவர் ஆரம்பிச்சிருக்கார்..!

அது, கிழவிகளுக்கு மட்டுமே உள்ள அணியாம்…!

----------------------------------
பதவிக் காலத்துல நீங்க பல கோடிகளை சம்பாதிருச்சிருக்கிறீங்க
தலைவரே..!

சம்பாதிக்கலேன்னா, ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ங்கிற
அறிவுரையை, நான் மதிக்கலேனு அர்த்தமாயிடுமே..!
-------------------------
என் புருஷன் சாமியாராகப் போறார்னு தோணுது..!
-
எப்படிச் சொல்றே?
-
சண்டைக்குப் பின் ‘என் கால்ல உன்னை விழ
வைக்கிறேன்டி’ன்னு

கோவமா சொல்லிவிட்டு, கிளம்பிப் போயிட்டார்..!
----------------------

கவர்ன்மென்ட் மாப்பிள்ளைஎதுக்கடி போயும் போயும் ஒரு வேலைக்காரனை
கல்யாணம் பண்ணிக்கிட்டே?

தனியா எதுக்கு சம்பளத்துக்கு வேலைக்காரனை
வைக்கணும்னுதான்..!
----------------------------
பவர்ல இல்லாம இருக்கறது ரொம்ப கேவலமா
இருக்கய்யா…!

என்ன சொல்றீங்க தலைவரே?

பின்ன..காலையில் எழுந்தவுடன் கடைவீதிக்குப்
போய் காய்கறி, மளிகைசாமான் வாங்கிவரச்
சொல்றாய்யா என் மனைவி..!
-------------------------
 மாப்பிள்ளைக்கு கவர்ன்மென்ட் வேலைன்னு சொன்னீங்களே…
எந்த ஊர்ல?
-
நம்ம ஊருக்குப் பக்கத்துல 100 நாள் வேலை பார்க்கிறாரு…!
- -------------------------------

கபாலி, யாரோட டிஸ்டர்ப்பும் இல்லாம ஜோரா
திருடிட்டு வந்திடுறியே…எப்படி?

‘திருடரகள் ஜாக்கிரதை’ னு போர்டு வெளியே
மாட்டிட்டுதான் திருடவே ஆரம்பிப்பேன்…பயந்துபோய்
யாரும் உள்ளே வர மாட்டாங்க..ஏட்டய்யா..!!


கடன்காரனுக்கு காபிவீடு தேடி வந்த கடன்காரனுக்கு எதுக்கு காபி போட்டு
கொடுக்க சொல்றீங்க?
-
இனிமே, அவன் வீடு தேடி வராம இருக்கத்தான்…!

----------------------

“”தீயா வேலை செஞ்சதுக்கா உன்னை உன் முதலாளி
வேலையவிட்டு நிறுத்திட்டாரு?”
-
“”ஆமா, நான் வேலை பாத்தது பஞ்சு கடையில!”

--------------------------------
 ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ
சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப
சோகமா இருக்கிறத நோட் பண்ணி
இன்னொருத்தி ஏண்டி சோகமா இருக்க?ன்னா.
-
அது…என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய
பணம் விட்டுட்டான்
-
அடடே
-
அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி
-
எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற
-
கண்டிப்பா
-
இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற..? ம்ம்… ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை
ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்..!!


Sunday, December 22, 2013

ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு

உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?

நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா
--------------------------
சின்ன ஆபரேஷன்தான் பயப்பாடதீங்கனு நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க

பரவாயில்லையே...

ஆறுதல் சொன்னது எனக்கு இல்லை ஆபரேஷன் பண்ணப் போற டாக்டருக்கு
-------------------------
கார் ஒட்டக் கத்துக்கறதா சொன்னீங்களே .. இன்னும் முழுசா கத்துக்கலையா ?

இல்லே கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்

இப்போதைக்கு என்ன கத்துக்கிட்டிருக்கீங்க .. ?

ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு !
-----------------------------------
வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?

இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..
--------------------------------------

உரலைத் தூக்க முடியல்ல சாமி!
நீதிபதி:ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?

பெண்:உரலைத் தூக்க முடியல்ல சாமி!

-----------------------

அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்...

ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.

---------------------------
 நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தைக் கட்சி மேலிடத்துல வாங்க மறுத்துட்டாங்க

ஏன் ?

பதவியில இருக்கறவங்கதான் அதெல்லாம் கொடுக்கணுமாமே !
---------------------------------------
நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...

அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா?
----------------------------------------

சமையல் வேலை

நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.

ஐயோ அப்புறம் என்னாச்சி?

அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா.!
------------------------------------

மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் அப்பாவின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதலாம்?

அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.
----------------------------------

அன்பே வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.

சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா?
-------------------------------------
ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம், "என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"
-----------------------------------

Monday, December 16, 2013

“ஏய் எருமை”
பேராசிரியர்: இதை படிப்பா..

மாணவன்: என்ன சார் இது?

ஒண்ணுமே புரியலை.

பேராசிரியர்: எனக்கும் புரியலை,

அதான் உன்கிட்ட கொடுத்தேன்.

மாணவன்: என்ன சார் சொல்லறீங்க?

பேராசிரியர்: உன்னோட டெஸ்ட் பேப்பர்தான் அது?
-----------------------------------
 
ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் ­ அவனை முந்திச் செல்கிறாள்.

இளைஞன் : “ஏய் எருமை”

பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள் திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள

நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.
-----------------------------------
 நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இப்படியொரு வழமை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

---------------------------------------------

அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்.


கணவன்:
அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்.
பணம் அனுப்பச் சொல்லி லெட்டர்
போட்டிருக்காங்க.

மனைவி: சுக்கு காய்ச்சி குடிக்கச்
சொல்லுங்க. எல்லாம் சரியாப்
போயிடும்.

கணவன்: நீ சொல்றதும் சரிதான். நீ
சொன்னபடியே உங்கம்மாவுக்கு எழுதிப்
போட்டுர்றேன்.....

மனைவி:::-o
--------------------------------
மனைவி:"நேத்திக்கு நான்
வைரத்தோடு கேட்டப்ப
மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன்
வாங்கிண்டு வந்திருக்கீங்க?"

கணவன்:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா, 
அடுத்த ஜன்மத்திலயும் அவதான்
பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.
அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்"
---------------------------
 ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?

மாணவன்: "இரும்பு"

ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"

மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "

ஆசிரியர் :??
-----------------------------------

ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்


நிச்சயதார்த்தம் ஆயிருச்சு..

புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்.. .

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன் .

பெண்: நீ என்னை விரும்புகிறாயா?

ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!

பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?

ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.

பெண்: நீ என்னை அடிப்பாயா?

ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்.

பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

(திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்.)

திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருது!சிரிக்க மட்டும் :-

1) தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
--------------------------------
2) ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?

மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
--------------------------------

3) ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?

சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
-----------------------------

4) நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''

நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
-------------------------------------------

5) ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
--------------------------------------

6) ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு

நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

பெண்: எதுக்கு?

ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
-------------------------------

7) நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே

டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.

--------------------------------------

8) நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...

நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
-----------------------------

மருந்து பாட்டிலை இடுப்பில் சொருகிட்டு போறீங்க?
எவ்வளவு நேரம்தான் ஆபரேஷன் பண்ணுவீங்க டாக்டர்…?

ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சுட்டேன். எப்படி முடிக்கிறதுன்னு தெரியலை சிஸ்டர்..!

 -------------------------------

நர்ஸ்…எதுக்கு அந்த மருந்து பாட்டிலை இடுப்பில் சொருகிட்டு போறீங்க?

பேஷண்ட் பார்வை படற இடத்துல இதை வைக்கச் சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க?
-----------------------------------
ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.”

”அடடா, கெட்ட செய்தி என்ன?”

”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.”

”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?”

”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”

ட்ரெயின் மட்டும் என்ன புதுசா

 
 
 
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு
.
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ……… ????

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்…….

Friday, December 13, 2013

அளவா சாப்பிடுனுதானயா சொன்னேன்!" 

"உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?"

"
எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க...?"

"
தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க...!"
 

------------------
 

"என் வீட்ல மனைவிதான் துவைப்பா, சமைப்பா, பாத்திரம் கழுவுவா... உன் வீட்ல?"

"
உன்னை மாதிரி நான் பொய் சொல்ல விரும்பலை...!"

-----------------


"
டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுரேன் ஆனா தொப்பை குறையமாட்டீங்குதே?"

"
யோவ்,நான் அளவா சாப்பிடுனுதானயா சொன்னேன்!"

 -------------------------------------


"பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு!"

"வரதட்சணை நிறைய கேட்டாரா?"

"இல்லைங்க... வெங்காய பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!"

-------------------------------------------

Thanks  to Kesava Bashyam VN

சகோதர பாசம்!

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

சிறுவன் : தூங்க வைக்கிறது நீங்க ,எழுப்புறது நானா என்ன கொடுமை சார் இது ?
 

------------
ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?

மாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.
------------------
 
ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால், நான் எந்த விதமான பண்பைக் காட்டி இருப்பதாக அர்த்தம்?

மாணவன் : சகோதர பாசம்!
-----------------
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
-------------
"
ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்..."

"
அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிப்பாருங்க டாக்டர்..!"
----------------

Thanks  to Kesava Bashyam VN

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...