சந்தானம் - டாக்டர் இப்ப உங்க 'தலைவலி' எப்படி இருக்கு..?
டாக்டர் மயில்சாமி- 'அது'வா, ரெண்டு நாளைக்கு அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்குப்பா..!
============
பொன்னம்மா : ஜோசியரே நான் ரெண்டு பேரை லவ் பண்றேன். யாருடன் எனக்கு கல்யாணமாகும், யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்று சொல்றீங்களா...?
ஜோசியர் - 2வது நபருடன் கல்யாணமாகும். முதல் நபருக்கு அதிர்ஷ்ட்டம் அடிக்கும்!!...
=================
ரமேஷ் : இந்த டாக்டர் ரொம்ப மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
போஸ்ட் மேன் : நீங்களாவது பரவாயில்லை, நான் இந்த ஊரு போஸ்ட் மேன், லெட்டர் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிட்டார்.
=================
ராஜா : நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?
எழுத்தாளர் : போனால் போகட்டும் என்று ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை,ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு அதான் கவலையா இருக்கு.
===============
மகேஷ்: அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
சுரேஷ்: அவர் வீட்டுக்கு பக்கத்துலயே சொந்தமா ஒரு ஊருகாய் கம்பெனியே போட்டு நடத்திட்டு இருக்காருன்னா பாரேன்.
===============
நர்ஸ் 1: இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
நர்ஸ் 2: அப்படியா ...! எப்படி...!
நர்ஸ் 1: இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!
=============
டீச்சர்: 18 க்கும் 81 க்கும் என்னப்பா வித்தியாசம்?
18 ன்னா வயசு பொண்ணு!
81 ன்னா வயசான பொண்ணு!!
டீச்சர்:??????????
==================
“கடலை,எண்ணெய் என்ன விலைங்க?”
“நூத்தி இருபது ரூவா”
“எப்போ குறையும்?”
“அளந்து ஊத்தும்போதுதான்….”
===================
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறு தடவை.... பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!
================
உங்க வீட்டுல எப்ப இருந்து பவர் கட்டாச்சு?
ம்ம்....ம்ம்ம்...கல்யாணமான நாளிலேயிருந்து கட்டாயிடுச்சி!
=================
தலைவர் அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும்னு சொல்றாரே..?
கூட்டத்திற்கு அழைத்து வந்தவர்கள் எண்ணிக்கையை சிம்பாலிக்கா
சொல்றார்…!
=================
ஹலோ…நைட் என்ன டிபன்..?
ம்…மண்ணாங்கட்டி!
-
நான் வர லேட்டாகும்…நீ சாப்பிட்டுட்டு தூங்கு..!
===================
பிள்ளைகளுக்கு மாணிக்கம், முத்து, தங்கம்னு பேர் வச்சு தலைவருகு
அலுத்துப் போச்சாம்…!
-
அதனால..?
-
இன்னைக்கு ஒரு குழந்தைக்கு, ‘அலுமினியம்’ ன்னு பேர் வெச்சுட்டாரு…!
===================
என் மனைவிகிட்டே எனக்குப் பிடிச்ச விஷயம் ஒண்ணே ஒண்ணுதான்..!
என்னது?
அடிச்சி முடிச்ச கையோட, குடிக்க ஒரு கிளாஸ் ஜூஸ் கொடுப்பா…!
========================
ஹலோ! எங்க பாங்க்ல போன் தர்றோம், வேணுமா..?
முதல்ல இந்த நம்பருக்கு நூறு ரூபாய்க்கு ‘டாப் அப்’
பண்ணுங்க…அப்பதான் நான் உங்க பாங்க்-ஐ நம்புவேன்..!
===================
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை நடக்கிறதை நீ
எப்படி கரெக்டா கண்டு பிடிச்சுடறே?
ஹாலிவுட் படத்தோட டிரைலர் ஓடுற சத்தம் கேட்குமே…!
================
எனக்கு டாக்டர் பட்டம் தந்துட்டாங்களே..இனி நான்
சர்ஜரி பண்ணலாமா…?
வேணாம் தலைவரே..! வழக்கம்போல ஃபோர்ஜரியே பண்ணுங்க…!
=================
என்னப்பா !, எப்பவும் மேசையிலே மூணு கிளாஸ் வைச்சு,
‘நடு’ கிளாஸ்லே ஊத்தி அதை மட்டும் குடிக்கிறே…?
நான் ‘மிடில்’ கிளாஸ் குடிகாரன்…!
====================
எதுக்கு நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச தரகரை
போட்டு அடிச்சீங்க?
என்னால உன்னை அடிக்க முடியலையே…அதான்..!
---------------------------------------
வாயைக்கட்டி வயித்தக்கட்டி பணம்
சேர்த்தேன்!
அதுக்கென்ன இப்போ?
வயித்துலே கட்டி-னு எல்லாத்தையும் டாக்டர்
புடிங்கிட்டாரு!
================
தலைவருக்கு கடைத்தெரு நடுவிலே சிலை வைக்க
வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?
ஏன் என்னாச்சு?
அங்கே பாருங்க…அவர் தொப்பைக்குக் கீழே நாயர்
டீ கடை போட்டிருக்கறதை..!
Thanks to Mr.Kesava Bashyam VN