Total Pageviews

Friday, June 13, 2014

உலகம் ஏன் இப்படி சுத்துது?

ரமா : ஏண்டி உமா ஸ்கூட்டர்ல போகும் போது முகத்த முடிண்டு போற!

உமா : என் அழகான முகத்தை யாரும் பாத்திட கூடாதில்ல !

ரமா :  யாரும் பகல்ல பேயை பார்த்தது இல்லை அல்லவா!

 ---------------------------


ரமா  : உடற்பயிற்சி செய்யாமலேயே உடம்ப குறைச்சிட்டியா ? எப்படி !

உமா : ரகசியத்த யாருட்டயும் சொல்ல மாட்டேல்ல !

ரமா  : சொல்ல மாட்டேண்டி !

உமா :  தினமும் காலையும் மாலையும் பத்து கீலோ மீட்டர்  ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யிறேன்ல ! அதான் !

------------------

ஹலோ டாக்டர் ஸ்ரீதரா..?அவசரமா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா..?

யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?

நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க

-------------------

ஏன் சார் இவர் ஃபைலைக் கட்டிப்பிடிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கார் ?

எப்பவும் ஆபீஸ்ல ஃபைலைக் கட்டிக்கிட்டு அழறீங்களே.. .னு அவர் மனைவி திட்டினாங்களாம்.. . அதான்

==========


டாக்டர்.. . இந்த வியாதியோட போராடி வாழவே பிடிக்கலை. ஏதாவது விஷஊசி இருந்தா போட்டுக் கொன்னுடுங்க

நீங்க இப்படிக் கவலைப் படக்கூடாது. அதுக்காகத்தானே ஆபரேஷன் பண்றேன்

==========

 ஆப்பக்காரக் கிழவி பிஸியா வியாபாரம் பார்த்துட்டிருந்தப்போ திடீர்னு அடைமழை .. .. இடி, மின்னல் .. .. கடையைச் சாத்திட்டுப் போன கிழவி மறுநாள் காலையில வந்து

பார்த்தப்போ ஆச்சரியமாயிட்டாங்க .. ..

ஏன் .. .. ?

கடையில இருந்த ஆப்பமெல்லாம் இடியாப்பமா மாறிப் போயிருந்தது

==========

வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.

செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்

==========
என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு

ஏன் என்ன ஆச்சு ?

எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

==========

வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .

வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .

==========

பக்தன்: சுவாமிஜி, உலகம் ஏன் இப்படி சுத்துது?

சுவாமிஜி: ஒரு குவார்ட்டர் தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது,                     3 குவார்ட்டர் தண்ணி இருக்கிற உலகம் ஏன் சுத்தக் கூடாது?

Thanks to Gokul

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...