Total Pageviews

Thursday, May 28, 2015

அதான் ! கார் வாங்கித் தரத சொல்லிட்டங்கல்ல !

காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார் !

*****************************

மாப்பிள்ளையின் தாய் : தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச்  செய்யலாமா..?

தரகர் : ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

மாப்பிள்ளையின் தாய் : பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

தரகர் : அதான் !  மாப்பிள்ளைக்கு கார் வாங்கித் தரத சொல்லிட்டங்கல்ல ! அப்புறம்மென்ன ?

மாப்பிள்ளையின் தாய் : அப்பச்சரி !

***********************

அம்மா: எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற…?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..

அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன். !

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்! அதுக்கு போய் அடிச்சுட்டாரே !

******************************

போஸ்ட்மார்ட்டம்!டாக்டர்-“சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.”

நர்ஸ்-“டாக்டர் உளராதீங்க !  நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!”

****************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ்: டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

****************************

நோயாளி : டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?

நர்ஸ் : ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம் !.

*****************************

லட்டு, ஜிலேபி, ஜாங்கிரி, பூந்தி ............... !
ராமு : உன் காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏண்டா வருத்தமா இருக்கே..?

சோமு :  நாலு பேர் கைமாறி போட்டு வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!


*********************************

சார், உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??

என்னய்யா சொல்றே??

ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க.. திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு...

*************************************

காதலி :  இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

காதலன் : லட்டு, ஜிலேபி, ஜாங்கிரி, பூந்தி  ............... !


*************************************

காதலி : எக்ஸாம் டைம்'ல எங்க வீட்டில, நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்... !

காதலன் : பூ, இவ்வளவு தானா? எங்க வீட்டில, நாங்க புத்தகத்தையே தொட மாட்டோம்ல்ல!

*************************

ராமு : வாங்க, சோமு வாங்க!

சோமு: உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!

ராமு : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தாயே!

சோமு : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!

**********************


Tuesday, May 26, 2015

அதற்க்காகத் தானே அலுவலகம் வந்தேன் !.புத்தகம்  வாகங்க வந்தவர் : 12ம் வகுப்பு கணினி புத்தகம் எவ்வளவுங்க?

பழைய புத்தகங்கள் விற்பனையாளர் : 55 ரூபாய் !

புத்தகம்  வாகங்க வந்தவர்
: என்னப்பா இப்படி சொல்றீங்கள்? கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் !

பழைய புத்தகங்கள் விற்பனையாளர்
: புத்தகம் வேணும்னா வாங்கிக்கோங்க ! நாங்கெல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது!

*******************************

வந்தவர்: டாக்டர் பரிட்சை என்றாலே, கை, கால் எல்லாம் உதறுது ! ஒரு நடுக்கம் வருதே டாக்டர்!

டாக்டர் : கவலைப்படாதீங்க . . . நாம பா‌ஸ் ஆகிடுவோ‌ம்னு ந‌ம்‌பி‌க்கையோட இரு‌ங்க !.

வந்தவர்:
சரியா .........போச்சு போங்க!  . . . நான் ‌ஸ்கூ‌ல் ‌பி‌ரி‌ன்‌‌‌ஸ்பா‌ல்............. டாக்டர் !

********************************************************

மேலதிகாரி : வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு 2 நாள் ஆஸ்பத்திரியில் இருந்தாயே! இப்போது எப்படி இருக்கின்றது ?

ஊழியர் : அய்யா, பரவாயில்லை !

மேலதிகாரி : டாக்டர் என்ன சொன்னார் ?

ஊழியர் :  4 நாட்கள் ஓய்வு எடுக்கச்சொன்னார் !

மேலதிகாரி: வீட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியது தானே !

ஊழியர் :  இல்லை அய்யா, வீட்டில் இருந்து ஓய்வு எடுக்க முடியாது !
     
தற்க்காகத் தானே அலுவலகம் வந்தேன் !.

மேலதிகாரி: ................! ........................!

*********************************************************

கணித தேர்வு அறையில்...

ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க !

மாணவன் : எங்க டீச்சர் நீங்கதான் சொன்னீங்க பார்முலா எல்லாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல" இருக்கனுமுன்னு!

**************************************************************
ஆசிரியர் : டே‌ய்... முட்டாள் எழு‌ந்திருடா... எ‌ன்ன ‌நீ நா‌ன் பாட‌ம் நட‌த்த ஆர‌ம்‌பி‌ச்சது‌ம் தூ‌ங்குற?

மாணவன்: சா‌ர் ‌நீ‌ங்க‌, என்னை ரொ‌ம்ப த‌ப்பா பு‌ரி‌ஞ்‌சி‌‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கீ‌ங்க...!

ஆசிரியர் :எ‌ன்னடா சொ‌ல்ற?

மாணவன் : நா‌ன் தூ‌ங்கு‌ம்போதுதா‌ன் ‌நீ‌ங்க‌ பாட‌ம் நட‌த்து‌றீ‌ங்க.!

ஆசிரியர் : என்னத்த செய்ய !

*******************************

Thursday, May 21, 2015

தாலி !


தொண்டர் 1 : தலைவர்கிட்ட தாலிய மட்டும் கொடுத்திடாதிங்க !

தொண்டர் 2 :   ஏன் ?

 தொண்டர்1 : அவருக்கு ஏற்கனவே 5 கல்யாணம் பண்ணுனவரு !
         
அடுத்தாக 6 வது கல்யாணத்திற்க்கு பொண்ணு தேடிட்டிருக்காருல்ல! !


**********************
தொண்டர் 1 : தலைவர் ஏன் கல்யாண பன்னிவைக்க வந்த இடத்தில் - தாலிய பொண்ணு கழுத்தில கட்டப்போனாரு !

தொண்டர் 2 : பழைய பழக்கமுடா! ஓட்டல் அறைகளில் ராத்திரி மட்டும் தாலி கட்டிவிடுவருல்ல! அந்த பழக்கந்த்தான் !

***********************

[P.A] உதவியாளர்.  : ஏன் தலைவரே ! கல்யாண பன்னி வைக்க வந்த இடத்தில் - தாலிய பொண்ணு கழுத்தில கட்டப்போனீங்க !

தலைவர் : இந்த தொண்டனுங்க தொந்தரவு தாங்க முடியல்ப்பா !

 எப்ப பார்த்தாலும் நீங்கதான் தாலிய எடுத்து கொடுக்கனும்! 

அதை நான் கட்டனும் தொந்தரவு செய்யுறங்கப்பா! 

ஒரு 4 பேருக்கு நானே தாலி கட்டிட்டேன் வச்சுக்க! 

ஒரு பய கல்யாணம் செய்து வைக்க கூப்பிட மாட்டானுல !  எப்புடி ?


************************
தலைவரின் மனைவி : நீங்க  செய்த காரியத்தால ஒரே நாளில் உலகம் முழுவதும் உங்கல திட்டுதுங்க !

தலைவர் :  நீ தானே சொன்ன என்னைப் பத்தி டிவியில ஒரு செய்தியும் வரமாட்டுதுன்னு ! அதான் !


********************

Monday, May 18, 2015

பாவம் பண்ணுறவங்க தான் சாமி ! தர்மம் பண்ணுவாங்கன்னு!டாக்டர்: யோவ். இது ஆஸ்பத்திரி ! நான் டாக்டர்ய்யா...!

பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் சாமி !  தர்மம் பண்ணுவாங்கன்னு!  அதான் இங்கே வந்தேன்!  சாமி...!

==============

நோயாளி: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க?

டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன். !

==============

நோயாளி: : எனக்கு ஆபீஸ்ல தூக்கம்  தூக்கம்  தூக்கமா வருது.... டாக்டர்!

டாக்டர்: அலுவலகத்தில தூக்கம் வரலையின்னா தான் பிரச்சனை! you are perfectly all right !

==============


நோயாளி: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!

டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான் ! அதை நினச்சு சந்தோஷப்படுங்க !.

==============

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!

டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க..!

==============

உங்க‌ த‌ங்க‌ச்சியோட‌ காத‌ல‌ன் !குடிகார‌ர் 1 : குடி குடியை கெடுக்கும்கிற‌து ச‌ரியாப் போச்சுடா?

குடிகாரர் 2 : எதனால‌ப்பா?

குடிகார‌ர் 2 : க‌ல்யாண‌ம் ஆன‌ உட‌னேயே எம் பொண்டாட்டி என்ன‌ குடிக்க‌ கூடாதுன்னு சொல்லிட்டா.... !

****************************************
பைய‌ன் : உங்க‌ குடும்ப‌ ந‌ன்மையை உத்தேசித்து இந்த‌ கேள்வி?

பெண்     : கேழுப்பா !

பைய‌ன் : எப்ப‌ நீங்க‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ப் போரீங்க‌?

பெண்    : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க‌ நீ யாருடா?

பைய‌ன் : உங்க‌ த‌ங்க‌ச்சியோட‌ காத‌ல‌ன் !

************************

ம‌னைவி : ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம் முடிஞ்சி இன்னியோட‌ 25 வ‌ருச‌ம் ஆகுது?

க‌ண‌வ‌ன் : என‌க்கு அதெல்லாம் ம‌ற‌ந்து போச்சு !

ம‌னைவி : இது கூட‌வா?

க‌ண‌வ‌ன் : ஆமாண்டி, ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் நான் ஞாப‌க‌ம் வ‌ச்சிக்குவேன் !
*****************************


காத‌ல‌ன் : அன்பே !  உன‌க்காக‌ இம‌ய‌ம‌லைய‌ கூட‌ தாண்டுவேன்?

காத‌லி : ச‌ரி அது கெட‌க்க‌ட்டும்? இப்ப‌ எதுக்காக‌ காலை நொண்டுரீங்க‌!

காத‌ல‌ன் : உங்க‌ வீட்டு கேட்டை தாண்டும் போது த‌டுக்கி விழுந்த்திட்டேன் !.

**********************************

தொண்ட‌ர் : க‌வ‌ர்ன‌ர் ப‌த‌விக்கு உங்க‌ பெய‌ர் அடிப‌டுது த‌லைவ‌ரே, நீங்க‌ என்ன‌டான்னா, ரொம்ப‌ சோக‌மா இருக்குரீங்கலே த‌லைவ‌ரே?

த‌லைவ‌ர் : இந்த‌ த‌ட‌வையாவ‌து எப்ப‌டியாவ‌து ஜெயிச்சிட‌னும்கிற‌ க‌வ‌லைதான் !.

தொண்ட‌ர் : அது அன்ன போஸ்டாச்சே !  தலைவரே !

த‌லைவ‌ர் : அப்படியா!

**********************

காத‌ல‌ன் : உங்க‌ அப்பாவுக்கு க‌ட‌ன்
கொடுக்கின்ற‌தும் உன‌க்கு முத்த‌ம் கொடுக்கின்ற‌தும் ஒன்னுதான்?

காத‌லி    : எதனால‌ அப்ப‌டி சொல்றீங்க‌?

காத‌ல‌ன் : ரெண்டு பேருமே வாங்கினத் திருப்பிக் கொடுக்கின்ற‌து! என்பது இல்ல‌யே !

*********************************

Wednesday, May 13, 2015

உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?

மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு !
               
 நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு !

*******************************

தலைமை ஆசிரியர்: சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்!

தந்தை : அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?

தலைமை ஆசிரியர்:  10,000/- ரூபாய் டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும் !


*******************************

காதலி :அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!

காதலன் : உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!

காதலி  ஏன்?

காதலன் : உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!
 

ஆனால்............ இன்றைக்கு கல்யாணமாகி குழந்தையுடன் ........*******************************

மனைவி – என்னங்க..  இன்று திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க..! நான் அப்படியே கீழ விழுந்துட்டேன் !.

கணவன் – நல்லா யோசிச்சுப் பாரு…!  பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா !  இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?


***************************

திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு...

இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனது இருந்து  என் வீட்டுக்காரி கிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன்!தரமாட்டிங்கறலே!

******************************

Friday, May 8, 2015

ஹார்ட் அட்டாக்'னா என்ன?


ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்...! 


உனக்கு படபடப்பா இருக்கும்..! 


அது உன்ன பார்த்து சிரிக்கும்..! 


உனக்கு கை கால் லேசா நடுங்கும்...! 


அது உன் பக்கத்துல வரும்...! 


உனக்கு வியர்த்து கொட்டும்...! 


அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி !


 ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது ! 


உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு... !

அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்....... !

****************************

டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?

ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

************************

டாக்டர் :உங்க கணவரை எதுக்கு கடிச்சிங்க ?

மனைவி : நான் போன் பண்ணினா, நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதுதான் !

கணவன்: நாய்தானே கடிக்கும் !

********************
 

Saturday, May 2, 2015

உலக அழுகி !


நோயாளி :  டாக்டர், ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..."

டாக்டர்.. என்ன சார், உடம்புக்கு என்ன செய்யுது?"

நோயாளி : ஒண்ணுமில்லை டாக்டர்,  "நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது...!" ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..."

**************************

நோயாளி : நர்ஸ், இந்த ஆஸ்பத்திரியில எதுக்கு  மேடம், ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்... வெச்சிருக்காக ?

நர்ஸ் : இங்கே வந்திட்டிங்கள, ஆறுலேயும் சாகலாம்.. அல்லது நூறுலேயும் சாகலாம் ! அதான் !.

நோயாளி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!


**************************

டாக்டர்.....(தன்னிடம் வந்த நோயாளியைப் பார்த்து)....... நீங்கள் என்னிடம் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு என்ன  வியாதி என கூற முடியும்.

நோயாளி.........."ஆமா டாக்டர்,  நான் ரொம்ப நாளா உங்க நர்ஸ் கமலாவைக் காதலிக்கிறேன்."

டாக்ட ர்.............?????????????????????

*************************

உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட ஒரு பொண்ணு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம் !.

ஐயையோ... அப்புறம்...?

உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்க !

********************

மனைவி: சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம் !

கண்வன் : டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?

மனைவி : டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்!

கணவன்: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

****************************
மனைவி: "ஏன் இப்படி பேய அடிச்ச மாதிரி இருக்கீங்க?"

கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  நீ தானே ஓங்கி முதுகிலே அடிச்சே!" அதான் !

 மனைவி: !!!!!!!!!!!!!!

********************************

முதல் கணவன் !

காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா,  கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? காதலன் ...