Total Pageviews

Wednesday, February 12, 2020

தலை சுத்துது!சோமு: என் மனைவி எப்போ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா..

ராமு : உப்புமாவில வண்டும், புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன், சலிக்காமத் தான் செஞ்சிருப் பாங்கன்னு.!

******

நண்பன் 1 : மச்சி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

நண்பன் 2 : அந்தக்கொடுமைய ஏன் மச்சி கேட்குற? இன்னும் இல்லை.

நண்பன் 1 : காலாகாலத்துல கல்யாணம் பண்ணிடனும் மச்சி!

நண்பன் 2 : மச்சி பொண்ணு பார்க்க போனா துவைக்கத்தெரியுமா?சமைக்கத் தெரியுமான்னு கேட்கிறாங்க!

நண்பன் 1 : இதெல்லாம் தெரியாம யார்டா பொண்ணு  கொடுப்பா?

 தெரியும்னு           சொல்ல   வேண்டியது தானே?

நண்பன் 2 : அட நீ வேற! பொண்டாட்டி புடைவை துவைக்கச்சொன்னா பரவா இல்லை, மாமனார் மாமியார் டிரஸ்களையும் துவைக்கனும்னு சொல்லுராங்கப்பா!

நண்பன் 1 : பக்கிப்பயலே? நீ வீட்டோட மாப்பிளையா போக ட்ரை பண்ணுனியா? அப்ப செஞ்சுதான் ஆகனும்டியேய்!

*******
நோயாளி: டாக்டர் தலை சுத்துது!

டாக்டர்: சுகர் இருக்கா?

நோயாளி: இருக்கு டாக்டர்!

டாக்டர் : எப்ப பார்த்தீங்க?

நோயாளி: இன்னைக்கு காலைகூட பார்த்தேன் டாக்டர் !

டாக்டர்: வெரி குட். எவ்வளவு இருந்திச்சி?

நோயாளி: அரை டப்பா இருந்திச்சி டாக்டர்!!

டாக்டர்: உனக்கு அப்ப! அப்ப! தலை சுத்தத்தான் செய்யும்!

சக்களத்தி யாரு'ன்னு. எனக்கு தெரிஞ்சு ஆகனும்!
என்ன மச்சி! ஞாயிற்றுகிழமை ! கறி சாப்பாடா ! கோழியா! மீன் சாப்டா! தூக்கமா?

அடேய்.. டி.நகர் சரவணா ஸ்டோர் மொட்ட மாடில லெமன் சாதம் சாப்டுட்ருக்கேன்டா !

ஏண்டா !

காலைல 9 மணிக்கு புடவை எடுக்க போனா! இன்னும் திரும்பலடா..!

******
ஹலோ.. ஈபி ஆபிசுங்களா..."

"ஆமாங்க.. சொல்லுங்க..."

"தெரு விளக்கு எரியுதுங்க சார்.."

" எரியட்டும்பா நல்ல விசயந்தானே... உனக்கு என்ன பிரச்சனை.. அத சொல்லுங்க.."

அய்யா ..எங்க ஏரியால உள்ள தெருவிளக்கு விடாம எரியுதுங்ங்க சார்..

அட எரியட்டும்னுதானே மின்சாரம் கொடுக்கிறோம்.. எரியட்டுமே உன் பிரச்சனை என்னானு சொல்லு..

சார்ர்ர்ர் எங்க எரியால தெருவிளக்கு பத்திக்கிட்டு நெருப்பா எரியுதுங்ங் சார்.

அட அப்படி விளக்கமா சொல்லுக! இதோ மின்சாரத்த சுவிட்சு ஆப் பண்னிட்டு ஆள அனுப்பிவிடுறோம்!

******
கல்யாணமான புதுசுல என் பொண்டாட்டி தோசை சுடவா மாமா!

இட்லி சுடவானு மாமான்னு கேட்பா!

அப்ப இப்பலாம் ?

இப்பலாம் தோசை சுடு மாமா! இட்லி சுட மாமான்னு சொல்லுரா! மாப்பிள்ளை!

*******
வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருக்கு வெறும் மூன்று ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெறுத்துப் போய் வீட்டுக்கு வந்தார்.

எரிச்சலாய் அவர் மனைவி கேட்டார்!

'மூனு ஓட்டுல ஒன்னு ஒங்களது.! இரண்டாவது என்னது!

அந்த மூனாவது ஓட்டுப் போட்ட சக்களத்தி யாரு?'ன்னு. எனக்கு தெரிஞ்சு ஆகனும்!
 
******

NOT REACHABLE !

Pin by Puppy on Meme | Funny facts, Tamil funny memes, Comedy quotes

ஏங்க! அண்டா குண்டா 
 
பாத்திரங்களையெல்லாம்  ஏங்க விக்கிறீங்க?
 என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் 

சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம்!

செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்! 
அதான்!
 

******
டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
 
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !


 *****

பாபு: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிவிடலாம்...
கீதா: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
பாபு: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
கீதா: ?!?.... 

 *****
 அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?” 

"அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன். Not 


Reachableனு வந்தது சார்…!”
  
 *****
 "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்" !

ஏன் ?"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் 
எழுப்பிவிடலை" !

****

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...