Total Pageviews

Saturday, March 5, 2016

உங்க மனைவி எப்படி இருப்பாங்க?




செல்வா: நண்பா, எனக்கு சாப்பிட பிடிக்கலை ! தூங்க பிடிக்கலை !

எனக்கு காதல் வந்திடுச்சோன்னு நினைச்சு பயமா இருக்கு !

சீனிவாசன் : சனியனே ! செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு ! போய் படி !

=============================
காவல் நிலையத்தில்.....

காவலர் : ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க !

ராமு, உங்க மனைவி எப்படி இருப்பாங்க?

ராமு : ஸ்லிம்மா ! சிவப்பா ! ரொம்ப அழகா ! இருப்பாங்க!


காவலர் : சோமு, உங்க மனைவி எப்படி இருப்பாங்க?

சோமு: அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க ராமு, உங்க மனைவியை போய் தேடலாம் !

காவலர் : ............................................... !

************************************

கண்டக்டர்: மாணவரிடம் நீங்க....... எங்க போகணும்?

மாணவர்:  கண்டக்டர், கொஞ்சம் வழி விடுங்க.  நான் அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட போகனும் . கொஞ்சம் வழி விடுங்க !

********************************

.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம். !

குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி................ !

***********************************.

ஆசிரியர்: தம்பி இமயமலையின் உயரம் என்ன ?

மாணவன்:தெரியாது சார் !

ஆசிரியர்:பெஞ்ச் மேல ஏறி நில்லு...

மாணவன்: அங்க நின்னு பார்த்தல் தெரியுமா சார் ...?

ஆசிரியர்:.........!!

**************************

வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர் !



அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார்.

டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம்.
*********************************

திருடன்  : வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.

டாக்டர்:  இதிலொன்னும் தப்பில்லையே !

திருடன் : திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!

********************************

டாக்டர் நீங்க ஆபேரஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது.

அடடா...! என்னோட பொடி டப்பா உங்க வயிலுத்துல தான் இருக்கா?

********************************

உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான் !

********************************

நோயாளி : ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க !

 இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?

டாக்டர்: எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னே தவிர உங்களுக்கு அல்ல!

**********************************.

பேசம காலை எடுத்துடுங்க டாக்டர் !



மருமகள் : டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு!

டாக்டர் : முள்ளை எடுக்கணுமா?

மருமகள் : முள் சின்னது ! அதை ஏன் தொந்தரவு பண்ணணும்? பேசம காலை எடுத்துடுங்க டாக்டர் !

*****************************************

நோயாளி: டாக்டர் எனக்கு எதை பார்த்தாலும் இரண்டு இரண்டா தெரியுது .......

டாக்டர் : அதற்கு என் மூணு பேர் வந்திருக்கீங்க .....

*****************************

கீதா : கண் வலின்னு டாக்டர்ட்ட போனியே என்ன ஆச்சு ?

ராதா : அவரே பார்க்கும் நேரம் காலை 9 -12 ன்னு போட்டிருக்கார்  டீ...

கீதா :  அப்ப, அவருக்கே கண்ணு, காலை 9 -12 தான் தெரியும் போலிருக்கு.  டீ...

ராதா :  நாம வேற நல்ல டாக்டர்ட்ட போகலாம். டீ.....

*****************************

மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்?

டாக்டர் ,மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம்.

ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான்.!


*****************************

ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?

மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க

சொன்னாருங்க அதான்.
___________________________

நோயாளி : வயிறு எரியுது டாக்டர் !

டாக்டர் :எப்போதிலிருந்து?

நோயாளி : என் காதலி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர் !


*********************************

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...