Total Pageviews

Sunday, March 12, 2017

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....???

Pin by Gurunathan Guveraa on JOKES | Funny motivational quotes, Comedy  quotes, Photo album quote

 
ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....???

ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்!


 *********************

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 

 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...

***************************
 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 

வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 

******************

கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? 

பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 

***********************

 "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."

"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???"

"அது.... குருவி....!!!"
******************************

ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? 


உங்களுக்குத் தெரியுமா.....??? 


நண்பர்: தெரியுமாவாவது....??? 

நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.  

**********************

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,


நான் வாய் பேச முடியாத ஊமை.

"வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...

எனக்கு காது கேட்காது."

*****************************

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும்.

 என்ன தரட்டும்...??? 

 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
 
வேற எதாவது பெரிசா சொல்லு.

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....???

************************************

 (பரீட்சை ஹாலில்)


 ரகு : வயித்தைக் கலக்குதுடா.

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு


அப்பவே சொன்னேன், கேட்டியா...??? 

*********************

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 

ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார்.

 நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!!

 ***************************

 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
 

டிரெயினைப் புடிக்கணும்.....!!!  

 கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் 

பெரிய பை எங்க கடையில இல்லியே...!!!

**********************

இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்!

அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்

************************

"கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"

 "நூத்தி இருபது ரூவா"

 "எப்போ குறையும்?"

"அளந்து ஊத்தும்போதுதான்...."

******************************* 

Thanks to KARUNA MSM

Tuesday, February 28, 2017

மனம் விட்டு சிரியுங்க!

மனம் விட்டு சிரியுங்க! வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்




ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...

நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்?

அட யாருன்னு சொல்லுமா!
-----------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு..SISTER !


நர்ஸ் : "கர்மம்.. "கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'.. தான் குடுத்தேன்!


இன்னிக்கு எனக்கு 'BIRTHDAY!.."

-----------------------------------

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க !


விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
-----------------------------------

ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
க!


மாணவன் : சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க!
-----------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?


ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!


முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு !
-----------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”


நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
--------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
-----------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க!
-----------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?


நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
-----------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?


கிராமத்தான் : கயிற்றாலே தான்!
-----------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."


"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
-----------------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.


டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க! என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்!
-----------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "CHILD" பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
---------------------------------

"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."


"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
--------------------------------
Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.

Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
----------------------

Sunday, February 26, 2017

எல்லா பொறுப்புகளையும் தாங்கள் ஏற்று செய்தால் சிறப்பாக செயல் படமுடியுமா?

Understand and buy > tamil a jokes in tamil language > disponibile

நிருபர் : உங்களுக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டுமென எதிர் பார்க்கின்றீகள் ?

நடிகை : இப்போது இருக்கும் கணவரை விட புதுக்கணவர் அன்பானவராக இருக்க வேண்டும்,

விட்டுக்கொடுக்க வேண்டும், என்னை உற்சாகப்படுத்த வேண்டும்' 'இன்சல்ட் பண்ணக்கூடாது, கோபப்படக்கூடாது, சந்தேகப்படக்கூடாது'

நிருபர் : அப்படி ஒரு நல்ல கணவர் கிடைக்க எனது வாழ்த்துக்கள் !

_________________________

தோழி : ஏண்டா! கணக்கு பரீட்சை மற்றும் ஆங்கில பரீட்சையில்  10 முறையே 12 வாங்கியிருக்கே !

கோலி :  அந்த இரண்டு நாளும் எனக்கான நாளாக இல்லாததே தோல்விக்கு காரணம் !

_________________________


நிருபர் : மேடம் நீங்க என் உங்க பெயரிலியே கட்சி ஆரம்பிச்சிட்டிங்க ?

கட்சி தலைவி: கட்சிய வேற யாரும் சொந்தங் கொண்டடி விடக் கூடாதே என்று தான் !


நிருபர் : கட்சி தலைவர், செயலாளர், பொருளாளர், யாரை நியமனம் செய்துள்ளீர்கள் ?

கட்சி தலைவி:  எல்லாமே நான் தான் !


நிருபர் : ஏன் மேடம் ?

கட்சி தலைவி:  பதவிகளை பிரிச்சு கொடுத்து கட்சிக்குள் பிரிவினை ஏற்படுத்த விரும்பவில்லை !

நிருபர் : எல்லா பொறுப்புகளையும் தாங்கள் ஏற்று செய்தால் சிறப்பாக செயல் படமுடியுமா?

கட்சி தலைவி:  ஒரு நபரே கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், நடிப்பு என பலதரப்பட்ட வேலைகளை செய்யும் போது நான் ஏன் அனைத்தையும் செய்ய முடியாது?


நிருபர் : நன்றி ! வாழ்த்துக்கள் !
______________________

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...