Total Pageviews

Wednesday, February 22, 2023

கொஞ்சம் சிரிங்க பாஸ் !


 


1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா ?
நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா !

நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா !
 
நண்பர் 2: ?????
________________________
2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல!
 
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
 
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான்!
 
காதலி : ????
________________________
3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத
 
மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி!
 
அப்பா : ?????
 
**********
 
4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்!
 
கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் !
 
ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
 
மேனேஜர் : ?????
________________________
5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..?
 
மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட்!
 
பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல, !
 
மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ...
 
பிரின்சிபல் : ?????
________________________
6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.
 
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
 
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வரம்?
 
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
 
கடவுள் : ?????
________________________
7) அமைச்சர் : மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.
 
மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, 
 
வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்
 
அமைச்சர் :?????
________________________
காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
 
காதலி : (பேச வில்லை)
 
காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.
 
காதலி : (பேச வில்லை)
 
காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
 
காதலி : பேசாம இரு Count (கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.
 
காதலன் : ?????
_________________________
9) கணவன் : என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது !
 
மனைவி : உங்களுடைய உண்மையான லவ் !
 
கணவன் : நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி !
 
மனைவி : ????
_________________________
10 ) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பி பி இருக்கா?
 
நர்ஸ் : இல்ல !
 
டாக்டர் : பல்ஸ் இருக்கா?
 
நர்ஸ் : இல்ல !
 
டாக்டர் : சுகர் இருக்கா?
 
நர்ஸ் : உயிரே இல்ல ! அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

 _______________________

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...