Total Pageviews

Wednesday, September 3, 2025

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

 

"வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!"

"ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!"

"அத ஏன் கேக்குறீங்க வக்கீல் சார்,.. கடந்த நாலஞ்சு மாசா மாசா மாசம் ஒரு புக்க வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறா...!"

"புக்கா... வெளக்கமா சொல்லுங்க...!"

சொல்றேன் சார்... மொத மாசம் '30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்தா வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகள மாக்கி கராத்தே கத்துகிட்டா நானும் நம்ம பொண்டாட்டி தானேன்னு தாங்கிக்கிட்டேன்..."

"இன்ட்ரஸ்ட்டிங்.."

"கேளுங்க வக்கீல் சார் ...அப்புறம் அடுத்த மாசம் '30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன்..."

"ப்ச்... மூனாவது மாசம் என்ன புக் வாங்கிட்டு வந்தாங்க...!?"

"அது 30 நாட்களில் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்கு சார்... முப்பது நாளும் கொரில்லா தாக்குதல் நடத்தி என்ன நிலைகுலைய வச்சிட்டா சார்..."

"பாவம் தான் நீங்க... அப்புறம் நாலாவது மாசம் என்ன புக்கு வாங்கிட்டு வந்தாங்க...!?"

'30 நாட்களில் சார்பட்டா பரம்பரையாவது எப்படி' ங்கிற புக்கு சார்... "முப்பது நாளும் கும்மாங் குத்து அதையும் பொறுத்துக் கிட்டேன் வக்கீல் சார்..."

"அப்புறம் அஞ்சாவது மாசம் என்ன புக்கு...!?"

"அதுதான் வக்கீல் சார் என் தன் நம்பிக்கையையே தகர்துடுச்சி... மொத மாசம் கராத்தேயே தாங்கிக்கிட்டேன், ரெண்டாவது மாசம் வர்மக் கலையை தாங்கிக்கிட்டேன், மூனாவது மாசம் தர்காப்பு கலையையும் தாங்கிக்கிட்டேன், நாலாவது மாசம் சார்பட்டா பரம்பரையையும் தாங்கிக்கிட்டேன், அஞ்சாவது மாசம் அவ வாங்கிட்டு வந்த புத்தகத்த பாத்து வெல வெலத்துப்போய் இனிமேலும் வீட்டல இருந்தா நம்ம உயிருக்கு ஆபத்துன்னு இங்கே ஓடியாந்துட்டேன் வக்கீல் சார்..."

"அவ்வளவு அதிரடியான புக்கா அது... அந்த புக்கு பேரென்ன...!?"

"30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி" ங்கிற புக்கு வக்கீல் சார்...!"

Monday, April 21, 2025

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

 

டாக்டர், எங்க தொட்டாலும் வலிக்குது"

"எங்கே தொட்டாலுமா?"

"ஆமாம், டாக்டர்"

"எங்கே, இடது காலைத் தொடுங்க"

"வலிக்குது டாக்டர்"

"வலது கால்"

"வலிக்குது டாக்டர்"

"கன்ப்யூசிங் ... கழுத்தைத் தொடுங்க"

"வலிக்குது டாக்டர்"

"மர்மமா இருக்கே ....         

"வலிக்குது டாக்டர்"

"ஒண்ணும் புரியலையே... தலையைத் தொடுங்க"

"வலிக்குது டாக்டர்"

"ம்ம்ம்ம்....இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும் ... போய் ப்ள்ட், யூரின் எல்லாம் கொடுங்க ... ஈசிஜி, ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் எடுக்கணும்"

"சரி டாக்டர்"

இரண்டு நாட்கள் கடந்தன....

"என்ன டாக்டர் ... என்ன பிராப்ளம்னு தெரிஞ்சுதா?"

"ஆமா , கண்டுபிடிச்சிட்டேன் ... உங்க ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" .....!!! ????😆🫢😀😜🤩💃🏼

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...