Total Pageviews

Friday, March 29, 2013

தென்கச்சியின் நகைச்சுவை



அது அப்படித்தான்!

ஒருத்தர் தன்னுடைய நண்பர் வீட்டுக்குப் போயிருந்தார்.

அன்பாக உபசரித்தார்கள்.

அவசியம் எங்க வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள்.

சரி - என்று உட்கார்ந்தார்.

சாப்பாடு போட்டார்கள்.

சாப்பிட்டார்.

அவர்கள் வீட்டிலே கட்டிக்கிடந்த நாய்க்குட்டி இவர் சாப்பிடுவதை முறைத்துப் பார்த்தது.

''ஏன் இப்ப என்னை முறைக்குது உங்க நாய்க்குட்டி?''

அவர்கள்கள் சொன்னார்கள்:

''அதுகிட்டே ஒரு கெட்ட பழக்கம்ங்க... தன்னோட தட்டுலே யார் சாப்பிட்டாலும் அது அப்படித்தான் முறைக்கும்!''
--------------------------------------------------

வரிசையில் வா!

ஒரு ரேஷன் கடை வாசல்.

கடை திறக்கறதுக்கு முன்னாடியே எல்லாரும் வந்து வரிசையாய் நின்னுட்டாங்க.

கடைசியா வந்த ஒருத்தர் கியூவிலே முன்னாடி போறதுக்கு முயற்சி பண்ணினார்.

ஏற்கனவே நின்னக்கிட்டிருக்கிறவங்க... அவரை முன்னாடி போறதுக்கு விடலே.

'கடைசியா போயி நில்லுய்யா!' என்று கத்தினார்கள்.

அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

முண்டியடித்துக்  கொண்டு முன்னால் போக முயற்சி பண்ணினார்.

எல்லாரும் சேர்ந்து அவரை

வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுவந்து பின்னால் நிறுத்தி விட்டார்கள்.

''இதோ பாருப்பா! நாங்க இருக்கிற வரைக்கும் நீங்க முன்னாடி போய் எதையும் வாங்க முடியாது.... தெரிஞ்சிக்கோ!''

''நான் இங்கே பின்னாடி நிற்கிற வரைக்கும் நீங்களும் முன்னாடிபோய் எதுவும் வாங்க முடியாது!''

''ஏன்?''

''நான்தான் கடையைத் திறக்க வேண்டிய ஆள்!''
--------------------------------------------


நேரம் சரியில்லை

ஒருத்தன்

வாய்க்காலைத் தாண்டறேன்னு பந்தயம் கட்டி... தாண்ட முடியாமே வாய்க்கால்லே

விழுந்த காலை உடைச்சிக்கிட்டு கட்டுப் போட்டுக்கிட்டு வந்தான்.

''ஏன்டா இப்படி?''ன்னு கேட்டாங்க.

''நான் பந்தயம் கட்டின நேரம் சரியில்லே!''-ன்னான்.

''எப்படி?''

''வாய்க்கால்லே தண்ணி இருக்கிற நேரமா பார்த்துப் பந்தயம் கட்டியிருக்கணும்!''


ஆபத்தில் உதவி!


நமக்கு வேண்டிய ஆள் ஒருத்தர்.

கொஞ்சம் வயசானவர். எழுந்து நடக்கவே சிரமப்படுவார்.
எப்பவும் சாய்வு நாற்காலியிலேயே உட்கார்ந்திருப்பார். அவர் தனக்குத் துணையாக ஒரு நாயைப் பக்கத்திலேயே வைத்திருந்தார்.

அதுவும் வயதான நாய். எழுந்து நடக்கவே சிரமப்படும்.
இவர் பக்கத்திலே எப்பவும் சோர்ந்து போய்ப் படுத்திருக்கும். அந்தப்
பெரியவரைப் பார்க்க வந்த ஒருத்தர் கேட்டார்:

''ஏங்க... ஒரு சின்ன பையனை உங்களுக்குத் துணையா வச்சிக்கப்புடாதா?
இந்த நாயை உங்களுக்குப் பாதுகாப்பா வச்சிருக்கீங்களே...!
 உங்களுக்கு ஓர் ஆபத்துன்னா இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்?''

''எனக்கு ஓர் ஆபத்து-ன்னா அந்த
சமயத்துலே இந்த நாய் என்னை தனியா விட்டுட்டு ஓடிப் போகாமே இருக்கும்
இல்லையா? அதனாலேதான் இதை வச்சிருக்கேன்!''


மனைவி தேவை!

ஓர் ஆள்.

தன் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் கிட்டே யோசனை கேட்டான்:

''வரப்போகிற மனைவி சிவப்பா இருக்கணும்...
நான் ஏதாவது சொன்னா அதைச் செய்யணும்.
துணிமணிகளையெல்லாம் சுத்தமா துவைக்கணும்...
அப்படிப்பட்ட மனைவி தேவை...!''
கம்ப்யூட்டர் உடனே பதில் தந்தது:

''சிவப்பு கலர்லே ஒரு வாஷிங் மிஷினை கல்யாணம் பண்ணிக்கோ!''


மறதி நோய்!


அல்செமீர் - என்பது ஒருவித மறதி நோய்.

ஒரு குடும்பத்தலைவர்... தன் மனைவியைப் பார்த்து...

''யார் நீ... உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே....!'' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்தவுடன் எனக்கு சந்தேகமாக இருந்தது.

''வாங்க... டாக்டர்கிட்டே போகலாம்!'' என்றேன்.

அவர் உடனே என்னைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்க் காதோடு காதாக மெதுவாகச் சொன்னார்:

''என் கையிலே பணம் இல்லாத போதெல்லாம் அப்படி... மறதி நோய் வந்தது மாதிரி நடிப்பேன்....! அவ்வளவுதான்... அதைக் கண்டுக்காதீங்க....!''


ஏன் வரவில்லை?


ஒருவன் நண்பனிடன் கேட்டான்:

''கல்யாணப் பத்திரிகை அனுப்பியிருந்தேனே... ஏன்டா வரலை?''

''வந்திருந்தேனே!''

''ஏய்...! ஏன்டா பொய் சொல்றே? நான் உனக்குப் பத்திரிகையே அனுப்பலையே...!''

''பத்திரிகை அனுப்பினேன்னு நீ பொய் சொல்றப்போ கல்யாணத்துக்கு வந்தேன்-னு நான் பொய் சொல்லப்படாதா?''


ஏன் ஓடறாங்க?

ஒரு ராஜா.

அவர் தன் பெண்ணுக்குச் சுயம்வரம் நடத்தினார்.

பலநாட்டு அரசகுமாரர்கள் வந்தார்கள்.

சுயம்வரம் நடைபெறுகிற நாள்.

அரண்மனைக்குள்ளே இருந்து அரசகுமாரர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள்.

ஒரு பெரியவர் இதைப் பார்த்துவிட்டு அமைச்சரிடம் கேட்டார்:

''ஏங்க...
அந்நிய தேசத்து இளவரசர்கள் எல்லாம் நம்ம இளவரசியைக் கல்யாணம் பண்ணிக்
கொள்ளணும்ங்கற ஆர்வத்துலேதானே வந்தாங்க... ஏன் இப்படி ஓடறாங்க... நம்ம
இளவரசியை அவங்க பார்க்கலையா...?''

''பார்த்ததுக்கு அப்புறம்தான் இப்படி ஓடறாங்க!''

புத்தக விமர்சனம்!

ஒருத்தரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதற்கு விமர்சனம் எழுதச் சொல்லியிருந்தார்கள்.
கொஞ்ச நாள் கழித்து அவரைப் போய் பார்த்து, ''என்னங்க... புத்தகத்தைப்
படிச்சிப் பார்த்தீங்களா?'' என்று கேட்டார்கள். அவர் சொன்னார்:

''இன்னும் இல்லீங்க... இப்பத்தானே விமர்சனமே எழுதி முடிச்சிருக்கேன்!''

கார் பயணம்

ஒரு நாள் நள்ளிரவு நேரம்.

இரண்டு நண்பர்கள் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவன் சொன்னான்: ''டேய்! ராத்திரி நேரம்... காரைப் பார்த்து ஓட்டு!''

அடுத்தவன் சொன்னான் பதற்றத்தோடு:

''அடப்பாவி! இப்ப காரை ஓட்டிக்கிட்டுருக்கறது நீதானே....!''


ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?


Friday, February 22, 2013

அவள் வாய் பேச மாட்டாளாம்.



காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

-------------------

காதலன்: ராஜி...என்ன இன்னிக்கு சாம்பல் கலரில் சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்...?

காதலி: நான் கர்ப்பமாகி இருக்கேன் என்பதை உங்களுக்கு உணர்த்தத்தான்...

-------------------

ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு!

மற்றவன்: ஏன்?

ஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.

************************************

ஐ லவ் யூ சொல்ற அளவுக்கு



காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?

காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!

காதலன்: அப்புறம்...?

காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!

---------------

ஒருத்தி: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...!

மற்றவள்: ஏன்...?

ஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...!

-----------------------

ஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...!

மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...?

ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...!


------------------

ஒருத்தி: என்னடி லவ் வெட்டர் எழுதி, அட்ரஸ் எழுதாத கவர் ஒன்னு கூட வைத்து அனுப்பி இருக்கிறாரே...!

மற்றவள்: நான் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய தோழி யாருக்காவது அனுப்பச் சொல்லி இருக்கிறார்.

--------------------

நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.



சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்:  நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...

சர்வர்:  ?.....!.....?.

-------------

ஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...

மற்றவள்:  நீயே சமைத்து விடுவாயா..?

ஒருத்தி:  இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.

----------------

டைப்பிஸ்ட்:  ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?

மானேஜர்:  உனக்கு எப்படிம்மா தெரியும்..?

டைப்பிஸ்ட்:  இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...

--------------

ஒருவர்:  என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?

சர்வர்:  சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...

----------------------------

ஒருவர்:  பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?

மற்றவர்:  ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...

--------------------------

ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?

மற்றவன்:  இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...

**********************************

வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...


மேலாளர்: என்னம்மா ...தப்புத்தப்பா டைப் அடித்திருக்கிறாயே...

டைப்பிஸ்ட்: சாரி சார், பக்கத்திலிருந்தவர் கிச்சு கிச்சு மூட்டி விட்டார்.

----------------

மேலாளர்: இதுவரை நூறு இன்டர்வியுவிற்குப் போயிருக்கேன்னு சொல்றீயே, ஏன் உனக்கு வேலை கிடைக்கலை?

வந்தவன்: எல்லோரும் மடத்தனமாக் கேள்வி கேட்கிறாங்க சார்.

-------------------

ஒருவர்: என்ன ஆபிஸ்ல திடீரென்று போராட்டம் நடத்துறாங்க...?

மற்றவர்: கார், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு வெகிக்கிள் அலவன்ஸ் கொடுப்பது போல் நடந்து வருகிறவர்களுக்கு வாக்கிங் அலவன்ஸ் வழங்கனுமாம்...

--------------------

ஒருவர்: எங்க ஆபிஸ்ல யாரும் தூங்காம இருக்க ஒரு வழி பண்ணிட்டேன்.

மற்றவர்: என்ன பண்ணுனீங்க...?

ஒருவர்: புதுசா ரெண்டு லேடி டைப்பிஸ்டுகளை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன்.

----------------------

ஒருவர்: இந்த ஆபிஸ் ரொம்ப நேர்மையான ஆபிஸ்ங்க...

மற்றவர்: யாருமே லஞ்சம் வாங்க மாட்டார்களா...?

ஒருவர்: வாங்குவாங்க...அவங்க போட்டிருக்கிற லிஸ்ட்படிதான் வாங்குவாங்க...

-----------------------

மேலாளர்: ஆறு மாதத்திற்கு முன்னாலே தான் உங்க பெண் கல்யாணமுன்னு கடன் வாங்கினீங்க...

இப்போ மறுபடியும் கடன் கேட்கிறீங்களே... உங்களுக்கு இரண்டு பெண்ணா...?

ஊழியர்: இல்லைங்க... ஒரு பெண் தான். அவளோட கணவரை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...
****************************************

இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...



வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?

பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...
-----------------

ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?

பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...

---------------------

பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...

மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...

பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...? 

---------------------------

பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை

பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?

பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....

------------------------------

கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?

கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.

---------------------------

பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...

பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.

-------------------------------------

பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...

பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.


*********************************************

பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...


ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...

மற்றவன்: பெண் அவ்வளவு அழகா?

ஒருவன்:  இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...
-------------------------

தரகர்: பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...

பையனின் தந்தை:  பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...?
---------------------------

ஒருத்தி: இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...

மற்றொருத்தி: அப்படியா?

ஒருத்தி: ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

---------------------------

ஒருவர்: கலப்புத் திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... 


ஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...

போலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லியிருக்கா...

--------------------

ஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?

மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்..

**********************************************************.

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...