Total Pageviews

Friday, January 2, 2015

போலி டாக்டர் !




டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?

ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

____________________

காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...

காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....

காதலி: ?!?........ ?.........

___________________

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்;
                    இனிப்பைக்  குறைக்கணும்; 
                    காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"

_____________________

ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,  அவங்களுக்கு காட்டத்தான்"

______________________

தொழிலுக்குப் போலாங்களா?




ஓருவர் : நானும் பாத்துக்கிட்டு வரேன் மதுரையிலிருந்து சென்னை வர்றீங்க!

 எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா டிக்கெட் வாங்கிற வேண்டியதுதானே !

மற்றவர்: டாக்டர் என்னை லாங் ஜர்னி பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்லா அதான்......?!?!
------------------------------------
மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க !

கணவன் : எதற்க்காக ?

மனைவி : கேஸ் ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சிடப் போகுது....

கணவன் : கவலையே படாதே  கண்ணு ! அதற்க்காகத்தான் குழாய மூடாம வந்துருக்கேன்ல்ல.....

மனைவி : ........................?!
----------------------------------

போலிஸ் : டெய்லி ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?

திருடன் : கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல தொழிலுக்குப் போலாங்களா?

---------------------

காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

காதலன் : லட்டு, ஜிலேபி. ஜாங்கிரி.................. !

______________________

Thursday, January 1, 2015

இன்னிக்கு நம்ம கல்யாண நாள் !


மனைவி : என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள்… கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா?

கணவன் : நான் செஞ்ச தப்புக்கு
கோழிக்கு ஏன் ... தண்டனை !

_______________

மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?

கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே.!

______________

கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள் !.

மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர்.

ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...!
_________________

Friday, December 26, 2014

பெயர் கெட்டு போகாம பார்த்துக்கோன்னு சொன்னதாலே !


தாத்தா மாதிரி !


அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !

  பெண்: டாக்டர், என் புருஷன் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார் !.

டாக்டர்: நீங்க ஏன் அவரையே பார்க்கறீங்க?

*****

மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு.

கணவன்: எப்படி சொல்ற?

மனைவி: சர்க்கரை, பால் போடாத என்  காபியை இப்படி புகழ்றாரே!...

******

கணவன்: ஏண்டி!, பூனை பாலையெல்லாம் குடிச்சிட்டு போற வரைக்கும் என்னடி பண்ணிட்டிருந்தே?

மனைவி: இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தேனுங்க!

*****

அப்பா: டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காசை முழுங்கிட்டான்.

டாக்டர்: அப்படியா! அப்ப ஸ்கேன் எடுக்கணும் !.

அப்பா: காசை மட்டும் எடுங்க டாக்டர்.

*****

நபர்: என்ன இது! பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா?!

பிச்சைக்காரன்: வீட்டிலே போய் பிச்சை கேட்டேனுங்க ! அம்மாதான் சொன்னாங்க!

                              அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !

*****

Tuesday, December 2, 2014

புதையல்!



என்ன சார்  கிணற்று மேட்டுல உட்கார்ந்து கிட்டு 11..........., 11..................11,............, அரைமணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க !

பக்கத்துல வா !

வந்தேன் ! 

வந்தவரை கிணற்றில் தள்ளி விட்டு விட்டு !  12.......12........ 12...............

கிணற்றில் விழுந்தவர் : அடப்பாவி ! இப்பல புரியுது !


*******************************

மனைவி : இந்த கிணற்றில் ஒரு ருபாய் நாணயம் போட்டு ! கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், வேண்டியது உடனே நிறைவேறும் !

கணவன் : அப்படியா !  உடனே ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட்டு வேண்டுதல் செய்தார் !

மனைவி : ஆவலாக தள்ளுங்க நானும்.......... ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட வந்தவர் தவறி கிணற்றில் விழுந்தார் !

கணவன் : மனைவியிடம் ! என் பிரார்த்தனை  நீ சொன்னபடி உடனடியாக நிறைவேறி விட்டது !

-------------------------------------------

திருடன்: என்னங்க உங்க குடும்ப புதையலை உங்க தாத்தா இந்த கிணத்துல தான் புதைத்து வச்சதா சொன்னீங்க !
 
நானும் 30 அடி வரைக்கும் தோண்டிப்புட்டேன்  ஓண்ணும் கிடைக்கலயே !

உரிமையாளர் : 35 அடியில் தான் எங்க தாத்தா புதையலே வச்சாராம்!கனவுல வந்து சொன்னாரே !

திருடன்:  அய்யோ ! தண்ணி பீச்சி அடிக்குதே !

உரிமையாளர் :   இது தான் எங்க தாத்தா சொன்ன புதையல்!

***********************************

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...